சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கங்காபூர்வாலாவை பரிந்துரைத்த கொலிஜியம்.. யார் இவர்?
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக காங்காபூர்வாலாவை நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. யார் இவர்? என்பது பற்றிய தகவலும், அதேநேரத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்ட டி ராஜா ராஜஸ்தானுக்கும் மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உயர்நீதிமன்றம் நீதிபதிகளை நியமிப்பதற்கான பரிந்துரைகளை உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த கொலிஜியம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகளான சஞ்சய் கிஷன் கவுல், எம் ஜோசப், எம்ஆர் ஷா மற்றும் அஜய் ரஷ்டோகி ஆகியோருடன் செயல்பட்டு வருகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முனீஸ்வர்நாத் பண்டாரி இருந்தார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து புதிதாக தலைமை நீதிபதி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி செயல்பட்டு வந்தார். இவரும் ஓய்வு பெற்றதை தொடர்ந்து டி ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிவார். இவர் விரைவில் ஓய்வு பெற உள்ளார். அதாவது வரும் மே மாதம் இவர் ஓய்வு பெற உள்ளார்.

இதனால் சென்னை உயர்நீதிமன்றத்துக்க தலைமை நீதிபதி நியமனம் என்பது அவசியமானது. இந்நிலையில் தான் ஒடிசா தலைமை நீதிபதி முரளிதரை, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியானது. இந்நிலையில் தான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்வி கங்காபூர்வாலாவை நியமிக்க பரிந்துரை செய்து உச்சநீதிமன்ற கொலிஜியம் இன்று பரிந்துரை செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டள்ள எஸ்வி கங்காபூர்வாலா தற்போது மும்பை உயர்நீதிமன்றத்தில் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். இந்த பரிந்துரையின்போது சென்னை உயர்நீதிமன்றத்துக்கு கட்டாயம் தலைமை நீதிபதி தேவை என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது. ஓய்வு காலத்தை குறிப்பிட்டு பணி மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய ஏற்கனவே டி ராஜா கோரிக்கை வைத்த நிலையில் அது நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications