வள்ளியூரில் கருணாநிதி சிலை நிறுவ அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சந்தை அருகே முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க அனுமதி கோரி மேல்முறையீடு செய்த தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், வள்ளியூரில் கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனுவானது அபராதத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு தலைவர் புகழை பரப்புவதற்காக நிறுவப்படும் சிலை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் தடைவித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வள்ளியூரிலன் காய்கறி சந்தையின் நுழைவுவாயிலுக்கு அருகில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வெண்கலச் சந்தை மற்றும் பெயர்ப் பலகை நிறுவுவதற்கு வள்ளியூர் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
கருணாநிதியின் சிலை நிறுவுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி மறுத்தது. அதோடு மட்டுமல்லாமல் பொது இடங்களில் இடையூறாக இருக்கும் சிலைகளை அகற்றவும் உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்தும், வள்ளியூர் சந்தை அருகில் கருணாநிதியின் முழு உருவ சிலை அமைக்கவும் அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி இருந்தார். சிலை நிறுவுவதற்கு நெடுஞ்சாலைத் துறை, பஞ்சாயத்து உள்ளிட்ட அனைவரின் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், மனுதரார் தொடர்ந்த வழக்கை ஏற்று சென்னை உயர்நீதிமன்றம் சிலையை நிறுவ அனுமதி மறுத்துள்ளது என்று குறிப்பிட்டார்.
அப்போது நீதிபதிகள், ஒரு தலைவர் புகழை பரப்புவதற்காக நிறுவப்படும் சிலை பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால் உயர்நீதிமன்றம் சிலையை நிறுவ அனுமதி மறுத்துள்ளது. அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தார். மேலும், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் வில்சன் மனுவை திரும்பப் பெற அனுமதி அளிக்க வேண்டும் என்றும், கருணாநிதியின் சிலை அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை மீண்டும் அணுக அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தும், அபராதத்துடன் மனுவை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications