Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டாஸ்மாக் வழக்கு.. "வரம்பு மீறி செயல்படும் ED.." விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்த சுப்ரீம் கோர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறையினர் நடத்திய சோதனையைச் சட்ட விரோதமானது என்று அறிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத் துறை வரம்பு மீறிச் செயல்படுவதாக சுப்ரீம் கோர்ட் கண்டித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் 6 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை 60 மணி நேரம் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையைச் சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த ஏப்ரல் 8ம் தேதி முதல் இந்த வழக்கின் இறுதி விசாரணை நடந்தது.

tamil nadu govt tasmac supreme court

மேல்முறையீடு

கடந்த ஏப்ரல் 23ம் தேதி இந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் தீர்ப்பளித்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம் என்று தெரிவித்த நீதிமன்றம் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் அமலாக்கத்துறை சட்டப்படி தொடர்ந்து விசாரணை நடத்த அனுமதி அளித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து அமலாக்கத் துறை ரெய்டு மற்றும் அதனைத் தொடர்ந்த சட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்கத் தமிழக அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அதன் அடிப்படையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்குத் தடை

அப்போது டாஸ்மாக் சோதனை வழக்கில் அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனிநபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம் என்றும் ஒட்டுமொத்த அரசு நிறுவனத்தையும் எப்படி விசாரிக்க முயல்வீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், அமலாக்கத் துறையினர் வரம்பு மீறி விதிகளை செயல்படுத்துவதாகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும், நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடைபெற்றுள்ளது என அமலாக்க துறையால் கூற முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடையும் விதித்தனர்.

இதுவரை நடந்தவை

முன்னதாக சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்த போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், "அமலாக்கத்துறையின் சோதனையின் போது பெண் அதிகாரிகள் உள்ளிட்டோர் தொடர்ந்து 60 மணி நேரம் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தனர். ஒரு சிலர் மட்டும் நள்ளிரவு ஒரு மணியளவில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டனர். தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய செல்போனை பறிமுதல் செய்வது அந்தரங்க உரிமைக்கு எதிரானது. அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியது போல, ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை" என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

தமிழக அரசு

தமிழக அரசும் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாதங்களை முன்வைத்தது. அமலாக்கத் துறை எப்போதும் வெளிப்படையாக இருந்ததில்லை என்ற வாதத்தை தமிழ்நாடு அரசு முன்வைத்தது. மேலும், அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார்.. அதற்கு என்ன அர்த்தம் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

அமலாக்கத் துறை

இருப்பினும், மாநில காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்குகளின் அடிப்படையிலேயே அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்ததாக அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், 1000 கோடி ரூபாய்க்கு மேல் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது என்று தெரிவித்த அமலாக்கத் துறை, டாஸ்மாக் அதிகாரிகள் எவரும் துன்புறுத்தப்படவில்லை. மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தது.

சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றம் என்பது நாட்டு மக்களுக்கு எதிரான குற்றம் என்று தெரிவித்த நீதிமன்றம் தமிழக அரசும் டாஸ்மாக் நிர்வாகமும் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+