Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பொங்கலுக்காவது வருவாரா ஜனநாயகன்! சுப்ரீம் கோர்ட்டுக்கு போன கேவிஎன்! இன்று விசாரணைக்கு வாய்ப்பு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்குவது தொடர்பாக விவகாரம் தற்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு, வரும் இன்றே விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. இதனால் இன்று விசாரணை நடைபெறலாம் என சொல்லப்படுகிறது.

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தில் தணிக்கைச் சான்று கோரி விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 22ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக் குழு உறுப்பினர்கள், 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் வழங்கலாம் என பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதனைத் தொடர்ந்து தணிக்கைக் குழுவில் இடம்பெற்றிருந்த ஒரு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், தணிக்கை வாரியத் தலைவர் இந்த படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

Vijay Jana nayagan Supreme Court

ஜனநாயகன்

இதனால், படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்கப்படாமல் தாமதம் ஏற்பட்டது. இந்த முடிவை எதிர்த்து, கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், தணிக்கைக் குழு ஏற்கனவே சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்த பின்னர், வாரியத் தலைவர் தனிப்பட்ட முறையில் மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்ப அதிகாரம் இல்லை என்றும், தணிக்கை வாரியத்தின் இந்த நடவடிக்கை சட்டத்திற்குப் புறம்பானது என்றும் வாதிடப்பட்டது.

விஜய் ஜனநாயகன் விவகாரம்

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, தணிக்கைக் குழு உறுப்பினர்கள் சான்றிதழ் வழங்க பரிந்துரைத்த பின்னர், அந்த முடிவை மீறி மறுஆய்வுக்கு அனுப்ப தணிக்கை வாரியத் தலைவருக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வாரியத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

தணிக்கை சான்று சர்ச்சை

இந்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அவசர வழக்காக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தணிக்கைச் சான்று இல்லாமல் எந்தப் படத்தையும் வெளியிட முடியாது என்றும், தணிக்கைச் சான்றுக்கு விண்ணப்பிக்கும் முன்பே படத்தின் வெளியீட்டுத் தேதியை எவ்வாறு முடிவு செய்தீர்கள் என்றும் கேள்வி எழுப்பினர்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

மேலும், இவ்வாறு அவசர நிலையை உருவாக்கி நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பது சரியான அணுகுமுறை அல்ல என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்த வாதங்களுக்குப் பிறகு, 'ஜனநாயகன்' திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க வேண்டும் என்று தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. மேலும், இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தயாரிப்பு நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இன்று விசாரணை?

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் நடவடிக்கைகளும் சட்டத்திற்குப் புறம்பானவை எனக் கூறி, கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் படம் வெளியாகும் கால அட்டவணையை நேரடியாக பாதிப்பதால், இதனை அவசர வழக்காக பட்டியலிட்டு இன்றே உடனடியாக விசாரித்து உத்தரவு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+