Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தலைக்கு மேல் கத்தி.. ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம்! நாங்க இருக்கோம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் நம்பிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆசிரியராக பணியில் தொடரவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆசிரியர்கள் ஓய்வு பெற 5 ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடரலாம் என நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

டெட் (tet) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் தனித்தனியாக நடத்தி வருகின்றன. இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உரிய கல்வித் தகுதி இருந்தாலும் அவர்கள் ஆசிரியர் பணியில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஏற்கனவே பணியில் சேர்ந்தவர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயம் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இதேபோல பல்வேறு மாநில அரசுகளும் வழக்கு தொடர்ந்தனர்.

Supreme Court makes TET

டெட் தேர்வு

இந்த நிலையில் ஐந்தாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும், தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் பணியை விட்டு வெளியேறலாம் அல்லது சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் எனவும், ஓய்வு பெறுவதற்கு ஐந்து ஆண்டுகள் மட்டுமே இருந்தால் அவர்கள் பணியை தொடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உச்சநீதிமன்றம்

இந்நிலையில், தகுதி தேர்வு தொடர்பாக ஆசிரியர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர்," டெட் தேர்வின் ரிவ்யூ பெட்டிஷனில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த வழக்கு வருகிற 19 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இது போன்ற சட்டங்கள் வருவதற்கு முன்பாகவே, தேர்வு செய்யப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டு இருக்கின்ற ஆசிரியர்கள் இது பொருந்தும் என்று கூறுவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என்பது தெரியவில்லை.

அன்பில் மகேஷ் பேச்சு

இது குறித்து யாரும் கவலைபட வேண்டாம். தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களாகிய உங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். யாரும் பயப்பட வேண்டாம். எங்களுடைய ஆசிரியர்கள் நீங்கள், தமிழக ஆசிரியர்களை நாங்கள் பாதுகாக்காமல் வேறு யாரு? நிச்சயம் பாதுகாப்போம். பகுதி நேர ஆசிரியர்கள் குறித்து தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. பகுதி நேர ஆசிரியர்கள் முழுமையாக தங்களது பணியை செய்தவர்கள். அவர்கள் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

தமிழக அரசு

அதன்படி அவர்களை உள்ளே வேகமாக எடுக்க கூடிய முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். இது பகுதி நேர ஆசிரியர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக இருக்கும். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் அன்பு கரங்கள் திட்டம் மூலம் 6500 பேர் பயன்டைந்து வருகின்றனர். இந்தத் திட்டம் மூலம் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு 18 வயது வரை மாதம் தோறும் 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகின்றது. படிப்புக்கு நிதி ஒரு தடையாக இருந்துவிட கூடாது என்பதற்காக அந்த அந்த மாவட்ட ஆட்சியர் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படுகிறது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+