அய்யய்யோ கொல்றாங்களே! ப்ளீஸ் எப்படியாவது காப்பாத்துங்க! கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நடிகை சதா!
சென்னை: நாட்டில் நாய்க்கடி சம்பவங்களால் மோசமான நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில் தெரு நாய்களை நிரந்தரமாக காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் விலங்குகள் நல ஆர்வலர்கள் தங்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாய்கள் அனைத்தையும் கொள்ள திட்டமிட்டு இருப்பதாகவும், நாய்களைக் காப்பாற்ற தான் சொந்த பணத்தை செலவு செய்து வருவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டு இருக்கிறார் நடிகை சதா.
நாடு முழுவதும் நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு டெல்லி என்.சி.ஆர். பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் விரைந்து நிரந்தரமாக காப்பகங்களுக்கு இடமாற்றம் செய்ய வேண்டுமென உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கான்ஃபரன்ஸ் பார் ஹியூமன் ரைட்ஸ் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி பிஆர் காவாய்த் தலைமையில் பட்டியலிடப்பட்ட நிலையில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்திப் மேத்தா, என்பி அஞ்சாரியா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தெருநாய்கள்
மத்திய அரசு சார்பில் சொலிசிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நாய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுவதாகவும், கருத்தடை அறுவை சிகிச்சைகள் ரேபிஸ் நோயை கட்டுப்படுத்தாது என வாதிட்டார். நாய்களை அடைத்து வைக்க காப்பகங்கள் இல்லை. ஒன்றாக நாய்களை பராமரித்தால் அவை உயிரிழக்க நேரிடும் என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் நாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பான உத்தரவுக்கு இடைக்கால தடை எதுவும் விதிக்காமல் தீர்ப்பை ஒத்தி வைத்தனர்.
உச்சநீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில் கொல்லப் போகிறார்கள் எனவும், தனது சொந்த பணத்தை செலவு செய்து நாய்களை காப்பாற்ற முயற்சி செய்து வருவதாக நடிகை சதா கண்ணீர் மல்க கூறியுள்ளார். இதுதொடர்பாக வீடியோவில் பேசியுள்ள நடிகை சதா, 6 வயது குழந்தை இறந்ததற்கு காரணம் ரேபீஸ் இல்லை என்பது நிரூபணம் ஆன பிறகும் கூட, நீதிமன்றம் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 10 லட்சம் நாய்களுக்கு அரசால் அடைக்கலம் கொடுக்க முடியாது.
நடிகை சதா வீடியோ
எனவே, இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனிப்படை குழுவினர் அத்தனை நாய்களையும் கொல்லப் போகிறார்கள். தெரு நாய்களுக்கு உரிய காலத்தில் கருத்தடை ஊசி போட்டு அவற்றின் எண்ணிக்கையை கட்டுப் படுத்தாதது, மாநில அரசின், நகராட்சியின் தோல்விதான். அப்படி இருக்கும்போது இந்த நாய்களை தண்டிப்பது எப்படி சரியானதாக இருக்கும். இதற்கென பட்ஜெட்டில் கணிசமான அளவு நிதி ஒதுக்கி முறையாக நடைமுறை படுத்தி இருந்தால் இன்றைக்கு இவ்வளவு நாய்கள் கொல்லப்படுகிற நிலைக்கு வராது.
விலங்கு நல ஆர்வலர்கள்
இந்த நாய்களைக் காப்பாற்ற விலங்கு நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறார்கள். நான் உட்பட பலரும் சொந்தப் பணத்தை செலவு செய்து நாய்களைக் காப்பற்ற முயற்சி செய்து வருகிறோம். ஆனால், அது போதுமானதாக இல்லை. வீட்டில் அழகான நாய்க்குட்டி வேண்டும் என விலைக்கு எங்கிருந்தோ நாய்களை வாங்கி வளர்க்கும் உங்களால் தான் இன்றைக்கு பல நாய்கள் தெருக்களில் உள்ளன. பரிதாபமாக உயிரையும் விடப் போகின்றன.
நாய் காப்பகம்
நீங்கள் எல்லாம் விலங்குகள் மீதோ, நாய்கள் மீதோ பிரியமானவர்கள் என்று சொல்லக் கூட தகுதியற்றவர்கள். நீதிமன்றத்தால் இப்படி ஒரு உத்தரவு வெளியான பின்னர் இந்த உத்தரவை எப்படி தடுக்க முடியும். இதற்காக எங்கு போராட்டம் செய்வது என்றே தெரியவில்லை. நாய்களை முறையாக பராமரிக்க தவறிய இந்த நாடு வெட்கப்பட வேண்டும். இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம் வெட்கப்பட வேண்டும். இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன்னர், நீதிமன்றம், விலங்கு நல ஆர்வ அமைப்பினருடன் கலந்தாலோசித்து இருக்க வேண்டும்" என கூறியுள்ளார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications