இந்திய சட்ட வரலாற்றில்.. இப்படி நடந்ததே இல்லை.. முதல்முறை உச்ச நீதிமன்றம் போட்ட கடிவாளம்!
சென்னை: இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் வாதங்களை வைக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது வழக்கறிஞர்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று புதிய காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அனைத்து நீதிமன்ற செயல்பாடுகளுக்கும், வழக்கறிஞர்கள் வாய்மொழி வாதங்களை முடிப்பதற்கான காலக்கெடுவை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கென, ஒரு வரலாற்று நடவடிக்கையாக, முதல் முறையாக 'நிலையான செயல்பாட்டு நடைமுறை' (Standard Operating Procedure - SOP) ஒன்றை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறை இப்படி நடப்பது குறிப்பிடத்தக்கது.

வாய்மொழி வாத நேரம்
மூத்த வழக்கறிஞர்கள், வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது வழக்குரைஞர்கள் (advocate-on-record), தங்கள் வாய்மொழி வாத கால அட்டவணையை, விசாரணை தொடங்குவதற்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாகவே, ஆஜர் சீட்டு சமர்ப்பிக்கும் ஆன்லைன் போர்ட்டல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் டிசம்பர் 29 அன்று வெளியிட்ட சுற்றறிக்கை தெரிவிக்கிறது. அதாவது தாங்கள் வாதம் செய்யப்போகும் நேரத்தை அவர்கள் குறிப்பிட வேண்டும்.
அதோடு, வாதாடும் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், அவர்களது வழக்குரைஞர்கள் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பு வழக்கறிஞர்கள் வழியாக, ஐந்து பக்கங்களுக்கு மிகாத சுருக்கமான குறிப்பு அல்லது எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என சுற்றறிக்கை வலியுறுத்துகிறது. இதன் நகலை எதிர் தரப்பினருக்குச் சேர்த்த பிறகு, விசாரணைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே இதைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து வெளியான உத்தரவில், வாதங்களைச் சமர்ப்பிக்கும் காலக்கெடுவை உறுதிசெய்ய, வாதாடும் வழக்கறிஞர்கள் மற்றும்/அல்லது மூத்த வழக்கறிஞர்கள், அவர்களது வழக்குரைஞர்கள் அல்லது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பு வழக்கறிஞர்கள் (ஏதேனும் இருப்பின்), எதிர் தரப்பினருக்கு நகலைச் கொடுத்த பிறகு, விசாரணை தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக, ஐந்து பக்கங்களுக்கு மிகாத ஒரு சுருக்கமான குறிப்புரை / எழுத்துப்பூர்வ மனுவை தாக்கல் செய்ய வேண்டும்."
இந்த SOP-கள், திறமையான நீதிமன்ற நிர்வாகம், பணி நேரச் சம பங்கீடு மற்றும் விரைவான, முறையான நீதி நிர்வாகத்தை உறுதி செய்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ளன.
வழக்கறிஞர்கள் வாதங்களை வைக்க காலக்கெடு
மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதி மற்றும் அனைத்து மாண்புமிகு நீதிபதிகளின் வழிகாட்டுதலின்படி, திறம்பட நீதிமன்ற மேலாண்மை, பணிநேரத்தை சரியாகப் பயன்படுத்துதல் மற்றும் விரைவான, முறையான நீதி நிர்வாகத்தை உறுதிசெய்யும் நோக்கில், அனைத்து வழக்குகளிலும் வாய்மொழி வாதங்களுக்கான காலக்கெடுவைப் பின்பற்றுவதற்கான ஒரு நிலையான செயல்பாட்டு நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறது.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக வழக்கறிஞர்கள் வாதங்களை வைக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதாவது வழக்கறிஞர்கள் எவ்வளவு நேரம் பேச வேண்டும் என்று புதிய காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தாங்கள் எத்தனை நேரம் வாதம் செய்வோம் என்பதை.. விசாரணைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications