Dashwant: போரூர் சிறுமி பலாத்கார வழக்கு! நைட்டோடு நைட்டாக விடுதலை செய்யப்பட்ட தஷ்வந்த்!
சென்னை: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்த நிலையில் புழல் சிறையில் இருந்து அவர் நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை போரூரை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அந்த குழந்தையை காணவில்லை. பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மாங்காடு போலீஸில் புகார் கொடுத்ததை அடுத்து சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

குற்றவாளியை தேடி வந்த நிலையில் அந்த சிறுமி இருக்கும் அபார்ட்மென்டில் இருக்கும் தஷ்வந்த் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததில் சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டதாகவும் அந்த சடலத்தை ஒரு பையில் போட்டு எடுத்துச் சென்று அனகாபுத்தூர் அருகே உடலை தீவைத்து எரித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பாக இளைஞர் தஷ்வந்தை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் குன்றத்தூரில் பெற்றோருடன் வசித்து வந்த தஷ்வந்த், செலவுக்கு பணம் தராததால் தனது தாய் சரளாவை சுத்தியால் அடித்துக் கொன்றுவிட்டு அவருடைய தங்கச் சங்கிலியை எடுத்துக் கொண்டு தலைமறைவானார். இதைத் தொடர்ந்து போலீஸார் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் சிறுமி கொலை வழக்கை விசாரித்த செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த் சென்னை ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் மகளிர் நீதிமன்ற தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தஷ்வந்த் மேல்முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதற்கான தீர்ப்பை வேற்று முன் தினம் வழங்கியது. அந்த தீர்ப்பில், "நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கையும் சட்டப்படி தீவிரமாக விசாரிக்க வேண்டும். அறக் கோட்பாடுகளின் அடிப்படையில் மட்டும் குற்றம்சாட்டப்பட்டவரை தண்டிக்கக் கூடாது.
வெகுஜன உணர்ச்சிகளாலும் புற நெருக்கடிகளாலும் நீதிமன்றங்கள் ஆட்கொள்ளக் கூடாது. மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறியதை தொடர்ந்து சிறுமி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுகிறது. அவரை விடுதலை செய்ய உத்தரவிடுகிறோம் என தீர்ப்பளித்தனர்.
இந்த தீர்ப்பை தொடர்ந்து புழல் மத்திய சிறையில் தண்டனை கைதிகள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த தஷ்வந்த் நேற்று விடுதலை செய்யப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications