அரசு வேலைக்காக மதம் மாறிய கிறிஸ்தவர்கள்.. இந்து பட்டியலின மக்களின் சலுகைகள் அபகரிப்பு: இந்து முன்னணி
சென்னை: கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியல் இனத்தவராக அடையாளப்படுத்த முடியாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை இந்து முன்னணி வரவேற்பதாக அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அரசு எழுத்தர் பணிக்கு செல்வராணி என்பவர் விண்ணப்பித்திருந்தார்.. தன்னுடைய தந்தை இந்து என்றும், தாய் கிறிஸ்தவர் என்பதால், தான் ஒரு இந்து என்றும் கூறி பட்டியலின சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தார்..

விசாரணைகள்: இது தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி மேற்கொண்ட விசாரணையில், அவரது தந்தை உட்பட அனைவரும் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியது தெரியவந்தது. இதனையடுத்து பட்டியலின சான்றிதழ் வழங்க விஏஓ மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து, சென்னை ஹைகோர்ட்டில் செல்வராணி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஹைகோர்ட், மனுதாரர் சிறு வயது முதல் கிறிஸ்தவ மதத்தில் பற்றுள்ளவராக இருந்துள்ளதால், சலுகையை பெறுவதற்கான சான்றிதழை கோரியதை ஏற்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார் செல்வராணி.
மதம் மாறுதல்: இந்த மேல்முறையீட்டு மனுவை, விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வானது, "நம்பிக்கையின்றி இடஒதுக்கீடு பலன்களை பெற மதம் மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது, அது இடஒதுக்கீட்டின் நோக்கத்தை சிதைக்கும்" என்றும் கூறி மனுவை தள்ளுபடி செய்ததுடன், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உறுதி செய்தனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றுள்ளன.. அந்தவகையில், இந்து முன்னணியும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளது.. இது தொடர்பாக இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:
புதுச்சேரி செல்வராணி: "புதுச்சேரியைச் சார்ந்த செல்வராணி என்பவர் ஞானஸ்தானம் பெற்ற கிறிஸ்தவர். இவர் தன்னை இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் (பட்டியல் சமுதாயம்) சார்ந்தவர் எனக் கூறி சாதி சான்றிதழ் கோரியுள்ளார். சான்றிதழ் சரிபார்ப்பின் போது அவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டு அவரது விண்ணப்பத்தை புதுச்சேரி மாநில அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.
இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதம் மாறியவர்களுக்கு இது போல் சாதி சான்றிதழ் வழங்க முடியாது எனக்கூறி அவரது வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அப்பீல் மனு: இதனை எதிர்த்து செல்வராணி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி பங்கஜ் மிட்டல், நீதிபதி ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்புமிக்க ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஒரு மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறுவது என்பது அதன் கொள்கை மற்றும் கோட்பாடுகளால் உண்மையாக ஈர்க்கப்பட்டு அதனடிபடையில் மதம் மாறியதாக இருக்க வேண்டும். ஆனால் கிறிஸ்தவ மதத்தை தீவிரமாக கடைபிடிக்கும் ஒருவர் அரசு வேலை வாய்ப்பிற்காக இந்துவாக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முற்படுவதை ஏற்க முடியாது. இது அரசியலமைப்புச்சட்டத்தையே மோசடி செய்வதற்கு சமம் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
மோசடி சலுகைகள்: இந்த தீர்ப்பை இந்து முன்னணி பேரியக்கம் அனைத்து இந்து மக்களின் சார்பாக மனதார வரவேற்கிறது. மதம் மாறிய கிறிஸ்தவர்கள், மதம் மாறியபிறகும் தங்களை இந்து எனக் கூறிக்கொண்டு மோசடியாக சலுகைகளை அனுபவித்து வருவதை தடுக்க வேண்டும் என இந்துமுன்னணி நெடுங்காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.
தமிழகத்தில் சிலர் மதம் மாறிய பிறகும் தன்னை இந்து பட்டியல் சமுதாயத்தவர் என ஏமாற்றி சான்றிதழ் பெற்று உண்மையான இந்து பட்டியல் சமுதாய மக்களின் சலுகைகளை மோசடியாக அபகரித்து வருகின்றனர். இத்தகைய மோசடிக்கு தற்போது உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
நடவடிக்கை தேவை: இந்நிலையில் மதம் மாறியவர்களுக்கு இந்து பட்டியலினத்தவர் என போலிச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழகத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது என்பதை அனைவரும் அறிவர். அதன் மீது உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தானாக முன்வந்து தமிழகத்தில் மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள போலி சாதி சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும் என்றும், அதனடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ள போலி நபர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும் என்றும் உண்மையான பட்டியல் சமுதாய மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத் தரவேண்டும் எனவும் இந்துமுன்னணி வலியுறுத்துகிறது. இந்து பட்டியலின மக்களின் உரிமைகளை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை இந்துமுன்னணி மனதார வரவேற்கிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications