Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூர்யாவின் ஒரே நம்பிக்கையும் போச்சு.. அடுத்தடுத்து விழுந்த அடி! வெறுப்பான வெற்றிமாறன்! அவ்வளவு தானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்ரோ ஆகிய படங்கள் மோசமாக சொதப்பிய நிலையில் வெற்றிமாறனுடன் இணையும் வாடிவாசல் படத்தை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருந்தனர். இந்த நிலையில் வாடிவாசல் திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், வேறு நடிகருடன் இணைந்து வேறு கதையை வெற்றிமாறன் இயக்கப் போவதாகவும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

மிகப் பிரபலமான சினிமா குடும்பத்திலிருந்து வந்தவர் சூர்யா. அவரது தந்தை சிவக்குமார் எம்ஜிஆர் காலத்திலேயே நடிகராக பிரபலமானவர். தொடர்ந்து சினிமாவில் அறிமுகமான சூர்யா, ஆரம்பத்தில் பல விமர்சனங்களை சந்தித்தாலும், இன்று உழைப்பால் மிகப்பெரிய நாயகனாக உயர்ந்து இருக்கிறார்.

பாலாவின் நந்தா திரைப்படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. அதற்குப் பிறகு காக்க காக்க உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பெரும்பாலான ரசிகர்களை ஈர்த்தார். தொடர்ந்து சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Suriya Vetrimaaran cinema

இந்த நிலையில் சூர்யாவின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 10க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. இடையில் ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் மட்டுமே அவருக்கு வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அதே நேரத்தில் அஞ்சானில் தொடங்கி சிங்கம் 3, என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ என அனைத்து படங்களும் படுதோல்வியை சந்தித்தது.

இருந்த போதும் தனக்கு ஒரு வெற்றி கிடைக்கும் என நம்பிக்கையுடன் காத்திருந்தார் சூர்யா. அதற்கு காரணம் வெற்றிமாறன். இதுவரை வெளியான வெற்றிமாறனின் அனைத்து படங்களும் அதிரிபுதிரி ஹிட் அடித்ததால் தனக்கும் ஒரு வெற்றி கிடைக்கும் என நம்பி இருந்தார். வாடிவாசல் படமும் அதனை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. கலைப்புலி தானு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்க வாடிவாசல் திரைப்படம் குறித்த தகவல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தனர்.

ஆனால் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களால் சூர்யாவால் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. வெற்றிமாறனும் விடுதலை உள்ளிட்ட படங்களில் பணியாற்றியதால் வாடிவாசல் திரைப்படம் தள்ளிக் கொண்டே போனது. இந்த நிலையில் தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது வாடிவாசல் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சூர்யா 45, வெங்கு அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 ஆகிய படங்களில் அடுத்தடுத்து சூர்யா கமிட்டாகி இருக்கிறார்.

அதற்கு பிறகு நடிக்கவும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தனது அடுத்த கட்ட பட பணிகளை வெற்றிமாறனும் துவக்கி இருக்கிறார். இதனால் சூர்யாவுக்கு தேதி பிரச்சனை வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வாடிவாசல் நீண்ட நாட்கள் எடுக்க வேண்டிய படம் என வெற்றிமாறன் கூறி இருக்கும் நிலையில் சூர்யா நடிப்பது சந்தேகம்தான் என்கின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

தனது வழக்கமான பாணியில் வேறு ஹீரோவை வைத்து வேறு கதையை எடுக்கலாம் என வெற்றிமாறன் திட்டமிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் வாடிவாசல் படத்தை வேறு நடிகரை வைத்து இயக்க மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது. சூர்யாவும் தற்போது கமிட்டாகி இருக்கும் இரண்டு படங்களை முடித்துவிட்டு வேறு இயக்குனருடன் நடிக்க இருக்கிறார். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு வாடிவாசல் திறந்தாலும் திறக்கும் என்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+