பாகுபலி..பாக்குறவன் பலி..! கங்குவாவை ரவுண்டு கட்டும் விமர்சனம்! கூடவே சேர்ந்த மதுரையன்ஸ்! என்னாச்சு?
சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கங்குவா திரைப்படம் நேற்று முன்தினம் வெளியான நிலையில் நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே பாமக, பாஜகவினர் படத்தை விமர்சித்து வரும் நிலையில் கூடவே மதுரைக்காரர்களும் இணைந்து விமர்சித்து வருகின்றனர். என்ன காரணம்? என விசாரித்த போது பழைய கதை ஒன்று கிடைத்தது..
ஓடிடியில் வெளியான ஜெய் பீம் தவிர்த்து சூர்யா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான பல திரைப்படங்கள் அட்டர் பிளாப்பு தான். ஒரு சில படங்கள் தான் சொல்லிக் கொள்ளும்படி இருந்தது. காப்பான், அஞ்சான், என்ஜிகே, தானா சேர்ந்த கூட்டம் என பல படங்கள் சூர்யா ரசிகர்களையே சோதித்தது.

இந்த நிலையில் கமர்சியலாக வெற்றி பட டைரக்டர் ஆன சிறுத்தை சிவா உடன் சூர்யா இணைகிறார் என்ற தகவல் கிடைத்தவுடன் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். மேலும் இதுவரை தயாரான சூர்யாவின் படங்களிலேயே 300 கோடி ரூபாய் பட்ஜெட்டுக்கு மேல் கங்குவா படம் தயாராகிறது, அதுவும் பான் இந்தியா படமாக வருகிறது என்ற தகவல் அவர்களை குதூகலம் அடைய செய்தது.
ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த கங்குவா படத்தில் சூர்யா, பாபி தியோல், திசா பதாணி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நடராஜன், கோவை சரளா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து இருந்தனர். 3டி, ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் படம் வெளியான நிலையில் முதல் நாளிலேயே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே கிடைத்தது. படத்தில் லாஜிக்கலாக எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை, படத்தில் சத்தம் அதிகம் இருக்கிறது, காது கேட்கவில்லை, கத்திக் கொண்டே இருக்கிறார்கள் என பலரும் வன்மத்தை கக்கி கொண்டே இருந்தனர்.
தற்போதைய தகவல் படி படம் இரண்டு நாட்களில் சுமார் 25 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை இரிட்டேட்டிக்காக இருந்தாலும், வெற்றி பழனிச்சாமியின் ஒளிப்பதிவும், நிஷாத் யூசுபின் படத்தொகுப்பு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் பேண்டஸி திரைப்படம் குழந்தைகளுக்கும் குடும்பத்தில் இருக்கும் பிடிக்கும் என சில பாசிட்டிவ் விமர்சனங்கள் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ரஜினி, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது பாமகவினரும், பாஜகவினரும் படத்தை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஜெய் பீம் படத்தில் வில்லனின் பெயரை குரு என வைத்ததோடு, அவரது வீட்டில் வன்னியர் சங்க சின்னமான அக்னி கலசம் இருப்பது போன்ற காலண்டர் இடம் பெற்றது, அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என சூர்யா பேசியதால் பாமகவினர் கொந்தளித்து படத்தை புறக்கணித்ததோடு இந்த சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
மேலும் கோயில் தொடர்பாக சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா பேசியது பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது. அவர்களும் படத்துக்கு செலவழிக்கும் பணத்தை ஏழை குழந்தைகளுக்கு உதவலாம் என கூறி வருகின்றனர். இது போன்ற விவகாரங்கள் தனியே இருக்க மதுரைக்காரர்களும் படத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அவர்கள் எதுக்கு இந்த பஞ்சாயத்தில் சேர்ந்தார்கள் என விசாரித்த போது தான் பருத்திவீரன் படம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல் ராஜா அமீர் குறித்து பேசியது தான் பிரச்சனைக்கு காரணம் என்கின்றனர்.
கார்த்தியை முதன்முதலாக ஹீரோவாக வைத்து அமீர் இறக்கிய பருத்திவீரன் பெரும் வெற்றி பெற்றது. ஆனால் படத்தின் பட்ஜெட் தொடர்பாக ஞானவேல் ராஜாவுக்கும் அமீருக்கும் கருத்து மோதல் வெடித்தது. ஞானவேல் ராஜா அமீரை மிகக் கடுமையாக பொது வெளியில் விமர்சித்தார். ஆனால் அமீர் எதுவுமே பேசவில்லை என்றாலும் இயக்குனர் சசிகுமார், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் ஞானவேல் ராஜாவை மிகக் கடுமையாக விமர்சித்தனர். அமீர் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் அவரது ஆதரவாளர்கள் ரசிகர்களும் ஞானவேல் ராஜாவை புரட்டி எடுத்து வந்தனர். இந்த நிலையில் தான் தற்போது கங்குவா சேர்ந்து கொள்ள தங்கள் பங்குக்கு அந்த படத்தை விமர்சித்து வருகிறார்கள் மதுரைக்காரர்கள் என்கின்றனர்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications