சூப்பர்.. "டிரைவரே" இல்லாத மெட்ரோ ரயில் வருது.. அடேங்கப்பா இவ்ளோ வசதி? சென்னைவாசிகளுக்கு சர்ப்ரைஸ்
சென்னை: திடுதிப்பென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அதனை சாதித்தும் காட்டியிருக்கிறது சென்னை மெட்ரோ நிறுவனம்.. இந்த நடைமுறையானது, பயணிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னையை பொறுத்தவரை 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன.. சென்ட்ரலிலிருந்து திருமங்கலம், கோயம்பேடு, வடபழனி வழியாக ஆலந்தூர் வரை ஒரு வழித்தடமும், சைதாப்பேட்டை ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக இன்னொரு வழித்தடம் செயல்பட்டு வருகின்றன.

மெட்ரோவின் தேவையும் சென்னைவாசிகளுக்கு அத்தியாவசியமாகி வருகிறது.. எனவே, மெட்ரோ நிறுவனமும், பயணிகளின் வசதிகளை கருதி பல்வேறு அதிரடிகளை வெளியிட்டபடியே உள்ளது.
அந்தவகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக, ஓட்டுநர் இல்லா ரயில்களை தயாரிக்க ரூபாய் 269 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்து சர்ப்ரைஸ் தந்திருந்தது.
அதிரடிகள்: ஏற்கனவே, 3 பெட்டிகளை கொண்ட 26 மெட்ரோ ரயில்களை உருவாக்க கடந்த 2022 நவம்பர் மாதம் 946 கோடியே 92 லட்சம் ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 3 பெட்டிகளை கொண்ட 10 மெட்ரோ ரயில்களை வழங்க மறுபடியும் அதே நிறுவனத்துடன் மெட்ரோ நிர்வாகம் ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், மெட்ரோ ரயில்கள் 28 மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்றும் வழித்தடம்4-ல் பூந்தமல்லியில் கட்டப்பட்டு வரும் பணிமனையில் மெட்ரோ ரயில்கள் பராமரிக்கப்பட்டு இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் கட்டம்: அந்தவகையில், சென்னையில் இரண்டாம் கட்ட திட்டத்தில் இயக்க, டிரைவர் இல்லா மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரிக்கும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. ஓட்டுநர் இல்லாத 138 ரயில்கள் மூன்று பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள நிலையில், 3 வழித்தடங்களில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.
அதில், 3வது வழித்தடம் 45.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரையிலும், 4வது வழித்தடம் 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெரினா கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடம் 47 கிலோ மீட்டர் தூரத்திற்கு மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலும் ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வழித்தடம்: கடந்த மாதம் இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சொல்லும்போது, "பயணிகளின் தேவைக்கேற்ப, 3 அல்லது 6 பெட்டிகளுடன் இயக்கப்படும். பயணிகளுக்கான இடவசதி, கூடுதல் சிசிடிவி கேமராக்கள், செல்போன், லேப்டாக் சார்ஜிங் வசதிகள் இருக்கும். ரயிலில் 2 பக்கமும் பிரத்யேகமாக அகலமான எமர்ஜென்சி கதவுகள் அமைக்கப்படும்... ரயில்கள் இயக்கத்துக்கு "சிபிடிசி" (Communications-based train control system) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
டிரைவர் இல்லாத ரயில்களை இயக்க இந்த தொழில்நுட்பம் வாய்ந்த சிக்னல் கண்டிப்பாக தேவைப்படுகிறது.. இநத் ரயில் 80 கி.மீ. வேகத்தில் செல்வதுடன், அதிகபட்சமாக 90 விநாடிகளுக்கு ஒரு ரயில் இயக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தனர்.
கூடுதல் வசதிகள் : தற்போது இந்த ரயில் பெட்டிகளின் கூடுதல் வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளதாம்.. இதுகுறித்து அதிகாரிகள் சொல்லும்போது, தானியங்கி தொழில்நுட்பம், ஜிபிஎஸ், சிக்னல் ரீடிங், டைமிங் சீகுவென்ஸ் ஆகிய தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்டு இந்த மெட்ரோ ரயில்கள் இயங்கும்.
இந்த ரயில்கள் பொது பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதற்கு முன்பு குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு விரிவான சோதனைகளுக்கு உட்படுத்தப்படும்.
வடிவமைப்பு: அதன்படி இந்த ரயில்கள் தற்போது வடிவமைக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று முதல் ஒரு மாதத்திற்குள் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும். அதன்பிறகு சோதனை முயற்சிகள் செய்யப்படும். 3 அல்லது 6 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயில்கள் இயக்கத்துக்கு சிபிடிசி (கம்ப்யூட்டர் பேஸ்டு டிரெய்ன் கன்ட்ரோல் சிஸ்டம்) என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆரம்பத்தில் கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் அவர்கள் உதவியின்றி ரயில்கள் இயக்கப்படும்" என்றனர்.












Click it and Unblock the Notifications