"உங்களை தேடி உங்கள் ஊரில்".. இது மட்டும் நடந்தால்?.. சபாஷ் ஸ்டாலின்.. கிளம்பி வர்றாங்க.. அரசு அதிரடி
சென்னை: தமிழக அரசு மிக முக்கிய உத்தரவு ஒன்றை இன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் பிறப்பித்திருக்கிறது.. என்ன அது?
தமிழக மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்களின் நன்மைக்காகவும், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்தவகையில், சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட திட்டம்தான் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டமாகும்.

சிறப்பு திட்டம்: இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வார்கள்.
குறிப்பாக, அரசினால் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்கள் மக்களைச் சரியாக சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாக கிடைக்கின்றனவா? என்றெல்லாம் முதல்வரே களத்துக்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட்டு, அரசு இயந்திரத்தை முடுக்கிவிட்டு, கள அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தையும் நடத்தி உரிய அறிவுரைகளை வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டம் தான் களத்தில் முதல்வர் திட்டம்.
பட்ஜெட்: இந்நிலையில், இன்றைய தினம் தமிழக பட்ஜெட்டில் இதுகுறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.. அதன்படி, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், கலெக்டர்கள் மாதம் ஒருமுறை ஒரு பகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரணம், மக்களையும், அரசாங்கத்தையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டு வருபவர்கள் மாவட்ட கலெக்டர்கள் ஆவர்.. ஒவ்வொரு கிராம மக்களும் தங்கள் கிராம முன்னேற்றத்துக்கும், அரசு தொடர்பாக தனக்கிருக்கும் பிரச்சனைகளுக்கும், தீர்வை நாடிச் செல்லும் நபர் மாவட்ட கலெக்டர்கள் ஆவர்..
குறைதீர்ப்பு: தற்சமயம், மாவட்ட கலெக்டர்கள் திங்கட்கிழமைதோறும், குறைதீர்ப்பு கூட்டத்தை, பொதுமக்களின் மனுக்களை பெற்று அவைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.. இதில் ஏராளமான மக்கள் பயன்பெற்று வருகிறார்கள் என்றாலும், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம், மக்களுக்கு இன்னும் அதிகமான பலன்களை பெற்றுத்தரும் என்று நம்பப்படுகிறது.
எனவேதான், ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளையும் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்ய போகிறார்கள்.
சபாஷ்: "களத்தில் முதல்வர்" என்ற திட்டத்தின் அடுத்தகட்ட நகர்வாகவே இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.. அந்தவகையில், மக்களின் குறைகள் மட்டுமல்லாமல், அரசின் நலத்திட்டங்களின் முழுப்பலனையும் அடைவதிலுள்ள இடர்ப்பாடுகள் மொத்தமாக களையப்படும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications