நெத்தியடி".. உதயசூரியனின் "ஸ்பெஷல்" பொங்கல் பரிசு.. மொத்தமாக மாறின எடப்பாடி? ஏக்கத்துடன் "ஸ்டார்ஸ்"
அதிமுக நட்சத்திர பேச்சாளர்களுக்கு பொங்கல் பரிசு இன்னும் தரப்படவில்லையாம்
சென்னை: வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு, நீதிமன்ற தீர்ப்பை அதிமுக எதிர்நோக்கி வரும்நிலையில், அதிருப்தியும், எதிர்பார்ப்பும் நிறைந்த குரல்கள் கட்சிக்குள் ஒலித்துள்ளதாம். என்னவா இருக்கும்?
மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை, அதிமுகவில் பேச்சாளர்களுக்கு ராஜ மரியாதை இருக்கும்... எப்போது தேர்தல் என்றாலும், அதிமுக கலைக்குழுவினருக்கு பிரத்யேக அறிக்கை வெளியிட்டு, அவர்களை பேச்சாளர்களாகவும் அறிவிப்பார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
அத்துடன் இவர்களுக்கு ஒரு தொகையையும் வழங்கி வந்தார்.. இது பலரது வாழ்வாதாரத்துக்கும் உதவியாக இருந்து வந்தது.. அதுமட்டுமல்லாமல், இந்த பேச்சாளர்கள் தமிழகத்தின் எங்கோ ஒரு இடத்தில், அதிமுகவின் பெயரை உச்சரித்தபடியே, எந்நேரமும் முழங்கி கொண்டும் இருப்பார்கள்..

100000 பரிசு
ஆனால், இப்போதெல்லாம் சோஷியல் மீடியாவிலேயே அரசியல் கட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.. அதிலும் ஐடி விங்குகள் ஒவ்வொரு கட்சிக்கும் செயல்பட ஆரம்பித்தபிறகு, இதுபோன்ற பேச்சாளர்களும், கலைக்குழுவினரும் காணாமலே போய்விட்டார்கள்.. எனினும், பொங்கல், தீபாவளி பண்டிகைகளில் இவர்களுக்கு பரிசு தந்த எடப்பாடி பழனிசாமி அசத்திவந்தார்.. அதாவது, ஜெயலலிதா இருந்தவரை இவர்களுக்கு பொங்கல் பரிசாக 50 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்து குஷிப்படுத்திவிடுவார். அவர் மறைந்ததும், 50 ஆயிரம் ரூபாய் தரப்பட்டு வந்தது.

ஸ்டார் அந்தஸ்து
அந்தவகையில், கடந்த தீபாவளிக்கு அதிமுக பேச்சாளர்கள், கலைக்குழுவினர் 400 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் தீபாவளி கிஃப்ட் கொடுத்து மகிழ்வித்தார் எடப்பாடி பழனிசாமி. அதுமட்டுமல்ல, நட்சத்திரப் பேச்சாளர் சிலருக்கு, எடப்பாடியே போனை போட்டு பேசினாராம்.. "ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையால் சசிகலாவின் அரசியல் வாழ்வே முடிந்துவிட்டது.. ஓபிஎஸ்ஸும் மதிப்பில்லாமல் போய்விட்டார்.. எனவே, கட்சி தன்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அம்மா காலத்தில் இருந்ததுபோலவே, அதிமுக குறித்து பிரதான பிரசாரத்தை முன்னெடுத்து செல்ல வேண்டி உள்ளது.. ரெடியா இருங்க" என்றாராம்..

கிப்ட் எங்கே
ஆனால், இப்போது பொங்கல் பண்டிகைக்கு நிலைமையே தலைகீழாகிவிட்டது.. அதிமுகவில் பஞ்சாயத்து ஒரு முடிவுக்கு வராத நிலையில், உச்சக்கட்ட டென்ஷனில் இருக்கிறார்களாம் எடப்பாடி + ஓபிஎஸ் தரப்பு. கடந்த வருடமும் இரட்டை தலைமை விவகாரம் தலைதூக்கிய நிலையில், இரு தரப்புமே ஆளுக்கு 25 ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக வழங்கியிருந்தனர். ஆனால், இந்த முறை 2 பக்கமும் சத்தமே இல்லையாம்.. பொங்கல் பரிசு எதையும், எடப்பாடி தரப்பிலும் தரவில்லை போல தெரிகிறது.. பரிசு வருமா? வரதா? அப்செட்டில் உள்ளார்களாம் நட்சத்திர பேச்சாளர்கள்.

மகிழ்ச்சி குஷி
இதனிடையே திமுக குறித்த ஒரு செய்தி கசிந்துள்ளது. ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு, கட்சி மற்றும் அமைச்சர்கள் தரப்பில் இருந்து பொங்கல் பரிசு தரப்பட்டதாம். நகர, ஒன்றிய செயலர்களுக்கு தலா, 1.50 லட்சம் ரூபாயும், வட்டச் செயலர், கவுன்சிலர்களுக்கு தலா, 25 ஆயிரம் ரூபாயும், வட்டப் பிரதிநிதிகள், பிற ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாயும் ரொக்கமா தந்து குஷிப்படுத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.. இந்த பரிசும், பணமும் ஒரு மேட்டரே இல்லையென்றாலும், பொங்கல் பரிசை ஆளும் தரப்பு தருவதால், மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்களாம்..!
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications