அன்-ரிசர்வ்ட் பெட்டியில் சர்ப்ரைஸ்.. முன்பதிவு டிக்கெட்டில் செல்வோருக்கு நிம்மதி! செம தெற்கு ரயில்வே

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்பதிவு பெட்டிகளில் அத்துமீறி ஏறுவதுடன், உடைமைகளை கொண்டு, ஆக்கிரமிப்பும் செய்து கொள்வதால், ரிசர்வ் செய்யப்பட்ட பயணிகள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.. பெரும்பாலும் பண்டிகை கால நேரத்தில் இதுபோன்ற அவஸ்தைகள் அதிகமாகி விடுகின்றன.. இந்நிலையில், தெற்கு ரயில்வே இதற்கு ஒரு கடிவாளத்தை போட்டுள்ளது.. இப்படி ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் அத்துமீறி பயணிக்கும் நபர்கள் யார் என்பதை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளதாம்.

வார விடுமுறை நாட்களில், ரெயில்களில் சாதாரண டிக்கெட் எடுத்துக்கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது..

Unreserved Coaches Reservation compartment

குறிப்பாக, வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் இயக்கப்படும் ரயில்களில் இதுபோன்ற சிக்கல்கள் எழுகின்றன.. ரிசர்வ் செய்யப்பட்ட பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறிவிடுவதுடன், உடைமைகளை கொண்டு இடங்களை ஆக்கிரமிப்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

வடமாநில பயணிகள்

ஸ்டேஷனில் ரயில் நிற்பதற்கு முன்பாகவே வடமாநிலத்தவர்கள், முன்பதிவு பெட்டியில் முண்டியடித்து கொண்டு ஏறிவிடுவதால், ரிசர்வ் செய்யப்பட்டவர்களுக்கு சீட் கிடைப்பதில்லை.. சிலசமயம், ரிசர்வ் செய்யப்பட்டவர்களால் ரயில்களில் ஏறவும் முடிவதில்லை. அந்த அளவுக்கு ரிசர்வ் பெட்டிகளை வடமாநில பயணிகளில் பலர் ஆக்கிரமித்து விடுகிறார்களாம்.

இதுகுறித்து புகார்களை பலமுறை தெரிவித்தும்கூட, ரெயில்வே நிர்வாகமும் கண்டுகொள்ளவில்லை என்று பயணிகள் நொந்து சொல்கிறார்கள்.. 2 நாட்களுக்கு முன்பு
எர்ணாகுளத்தில் இருந்து பாட்னா செல்லும் விரைவு ரயில் திருப்பூருக்கு வந்தது.. அப்போதுகூட முன்பதிவு செய்யாதவர்கள், டிசர்வேஷன் பெட்டிகளில் ஏறிவிட்டார்கள். இதனால் ரிசர்வ் செய்யப்பட்ட பயணிகள் கடுமையான அவதிகளை சந்தித்தனர்.

ரிசர்வேஷன் பெட்டி

ரெயில்வே துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், டிக்கெட் பரிசோதகரையும் முற்றுகையிட்டனர். அப்போதும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை என்பதால், ரயிலில் அட்ராசிட்டி செய்து வந்தவர்களை, தங்களது போனில் வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டுவிட்டனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை தந்தது.. அதிலும் தற்போது தீபாவளி என்பதால் வடமாநில பயணிகள் கூட்டம் அதிகரித்தபடியே உள்ளது..

முன்பதிவு பயணிகள்

வடமாநில பயணிகள் மட்டுமல்லாமல், ரயில் டிக்கெட் உறுதியாகாமல் இருந்து, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் பயணிகளும், ரிசர்வேஷன் பெட்டிகளில் ஏறி விடுகிறார்களாம்.. இதனால் முன்பதிவு பயணியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்திருப்பதால், இதற்கு ரயில்வே நிர்வாகம் ஒருமுடிவு கட்ட வேண்டும் என்றும், டிக்கெட் எடுத்தும்கூட, நிம்மதியாக பயணம் செய்ய முடியவில்லை என்றும் பல தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையில், பயணிகள் அத்துமீறி ஏறுவதை முறைப்படுத்த போலீசாருக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றி பயணம் செய்வதை தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரெயில்வே போலீசாருக்கு தெற்கு ரெயில்வே அறிவுறுத்தியிருக்கிறது.

ஸ்பெஷல் டீம்

சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் செல்வதால், ரயில் நிலையங்களில் பயணியர் கூட்டம் அதிகரித்து வருவதாலும், முன்பதிவு பெட்டிகளில் சிலர் அத்துமீறி பயணிப்பதாலும் ரயில்வே இப்படியொரு முடிவை அறிவித்திருக்கிறது.

அதன்படியே, ரயில் நிலையங்கள், ரயில்களில், பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு பணியை துவங்கியுள்ளனர். தெற்கு ரயில்வேயில், 50 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு குழுவிலும், டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயில்வே போலீசாரும் இடம்பெற்றுள்ளனர்..

1000 ரூபாய் அபராதம்

இவர்கள், சென்னையில் சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் மற்றும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கோவை, மங்களூரு, திருவனந்தபுரம், பாலக்காடு உள்ளிட்ட முக்கிய ரயில்வே ஸ்டேஷன்கள், எக்ஸ்பிரஸ் ரயில்களில் திடீரென ஏறி சோதனை நடத்துவார்களாம்.. அதேபோல ரிசர்வேஷன் பெட்டிகளில் டிக்கெட் இல்லாமல் பயணித்தால் 1000 ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படுமாம்.

மேலும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயணியரை வரிசையில் அனுப்பி வைக்கும் பணியில் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்..

இதில் சென்னை - கோவை, பெங்களூரு, எழும்பூர் - திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழித்தடங்களில் செல்லும் ரயில்களில், ரயில்வே பாதுகாப்பு படை குழுவினர் சோதனை செய்ய ஒவ்வொரு குழுவிலும் 3 பேர் இடம்பெற்றிருக்கிறார்களாம்.

அதுமட்டுமல்ல, அன்ரிசர்வ் பெட்டிகளை ஆக்கிரமிக்கும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.. எனவே அது தொடர்பான புகார் இருந்தால் 139 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கவும் அதிகாரிகள் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+