மின்சார டபுள் டக்கர் பஸ் இன்று முதல் சென்னையில்.. 18 வருடம் கழித்து எலக்ட்ரிக் சர்ப்ரைஸ்.. செம ஜாலி
சென்னை: சென்னையில் 18 வருடங்களுக்கு பிறகு டபுள் டக்கர் பேருந்து சேவை, அயலகத் தமிழர்கள் தின விழாவை முன்னிட்டு இன்று ஜனவரி 12, 2026 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் கொடியசைத்துத் தொடங்கப்பட்டுள்ளது. அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த மின்சார பேருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக இயக்கப்பட உள்ள நிலையில் சென்னைவாசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
ஒரு காலத்தில் சென்னையின் அடையாளமாக இருந்த டபுள் டக்கர் எனப்படும் இரட்டை அடுக்கு பேருந்து சேவை, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட உள்ளது. 1970- ஆண்டுகளில் சென்னை நகர சாலைகளில் ஓடிய டபுள் டக்கர் பஸ்கள், பொதுமக்களையும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந்தன.

சென்னையில் டபுள் டக்கர் பஸ்கள்
குறிப்பாக தாம்பரம் முதல் உயர்நீதிமன்றம் வரை இயக்கப்பட்ட இந்த பஸ்கள், மேல்தளத்தில் அமர்ந்து நகரத்தை பார்ப்பதற்கான தனித்த அனுபவத்தை அளித்தன. இதற்காகவே பல சுற்றுலா பயணிகள் சென்னை வர தொடங்கினார்களாம்..
பயணிகளின் வரவேற்பு அதிகமாக இருந்தாலும், பராமரிப்பு செலவு அதிகமாக இருந்த காரணத்தால் 2008ம் ஆண்டு இந்த டபுள் டக்கர் பஸ் சேவை நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் சென்னை சாலைகளில் இந்த பேருந்துகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
டபுள் டக்கர் பேருந்துகள்
இந்த நிலையில், தற்போதைய தலைமுறையினரையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 'அசோக் லேலண்ட்' நிறுவனத்திடமிருந்து முதற்கட்டமாக 20 மின்சார இரட்டை அடுக்கு பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் வெளியிடப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சென்னையில் பல இடங்களில் மெட்ரோ ரயில் மேம்பாலங்கள், புதிய மேம்பாலங்கள் இருப்பதால், இந்த உயரமான பேருந்துகள் சாலைகளில் பாதுகாப்பாக இயக்க முடியுமா என்பதற்காக பல வழித்தடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.. முதற்கட்டமாக தாம்பரம் - பிராட்வே வழித்தடத்திலும், கோயம்பேடு அல்லது அடையாறு முதல் மாமல்லபுரம் வரையிலும் இந்த டபுள் டக்கர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சுற்றுலாத்துறை ஹேப்பி
சுற்றுலா தலங்களை மையமாக வைத்து இந்த சேவை திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த மாதம் ஜனவரி இறுதியில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய தினமே அதாவது 12ம் தேதியே பஸ்கள் இயக்கப்படுகின்றன,
பஸ்ஸின் இரு பக்கமும் சர்ப்ரைஸ்
சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பஸ்ஸின் 2 பக்கமும் தஞ்சை பெரிய கோவில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டிடம், ஜல்லிக்கட்டு காளை அடக்கும் வீரன் உள்ளிட்ட போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. அதில் மிகப்பெரிய அளவில் தமிழ் வாழ்க என எழுத்துக்களும் இடம்பெற்றுள்ளது.
முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு டபுள் டக்கர் பஸ் சேவையை தொடங்க சுற்றுலாத்துறை முடிவு செய்துள்ளது.. இந்த பேருந்துகள் மின்சாரத்தில் இயங்குவதால் டீசல் செலவு குறையும். அதே நேரத்தில் காற்று மாசு மற்றும் கார்பன் வெளியேற்றமும் குறையும். சாதாரண பேருந்துகளை விட 50 முதல் 100 சதவீதம் வரை அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது.
இன்று முதல் தொடக்கம்
இந்த புதிய சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலா பயணிகளுக்காக இன்று தொடங்கி வைத்தார்.. அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இந்த டபுள் டக்கர் பஸ் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பேருந்து சேவை தொடங்கியிருப்பதால் , குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இது சென்னையின் பழைய நினைவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கும் ஒரு முயற்சியாக பார்க்கப்படுகிறது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications