மின்சார வாரியம் சர்ப்ரைஸ்... கரண்ட் பில் கட்டியதுமே மெசேஜ் வருதா? வாவ் செயலி.. தமிழக அரசின் அதிரடி
சென்னை: தமிழக மின்சார வாரியம் 2 சர்ப்ரைஸ்களை தந்துள்ளது.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராகி வரும்நிலையில், இந்த உத்தரவானது, பொதுமக்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருக்கிறது.
பொது மக்களின் வசதிக்காகவும், பயன்பாட்டுக்காகவும், தமிழக மின்வாரியம் நிறைய நடவடிக்கைகளை கையாண்டு வருகிறது.. குறிப்பாக, கரண்ட் பில் கட்டண விவரங்களை அறிய புதிய செயலியை நடைமுறைப்படுத்தியிருந்தது.

வழக்கமாக, கரண்ட் வீடுகளில் கரண்ட் பில் கணக்கெடுக்கப்பட்டதுமே, மின் ஊழியர்கள் அலுவலகம் வந்து கையடக்க கருவியில் உள்ள கணக்கெடுப்பு விபரங்களை, அலுவலக கம்ப்யூட்டரில் அப்லோடு செய்வார்கள். அடுத்த சிறிது நாளில் மின் கட்டண விபரம் நுகர்வோருக்கு, SMS வாயிலாக அனுப்பப்பட்டுவிடும்.
மின்மீட்டர்கள்: ஆனால் இந்த நடைமுறையை மாற்றி, கணக்கெடுத்த உடனேயே, கட்டண விபரங்களை நுகர்வோருக்கு தெரிவிக்க, புது "மொபைல் செயலி" அறிமுகம் செய்ய முடிவாகியிருக்கிறது, இதன்படி, மீட்டரிலுள்ள மின் பயன்பாடு, அதற்கான கட்டண விபரங்கள், செயலி மற்றும் மின் வாரிய சர்வரில் வந்துவிடும். உடனே, நுகர்வோருக்கு SMS சென்றுவிடும்.
அதேபோல, மின் கட்டணத்தை செல்போன் போன் வாயிலாக, எங்கிருந்தபடியும், எப்போது வேண்டுமானாலும் செலுத்துவதற்கு 'TANGEDCO' செல்போன் செயலியை, கடந்த 2018ல் மின்வாரியம் அறிமுகம் செய்திருந்தது.. இந்த செயலியை, 'கூகுள் பிளே ஸ்டோர்' வாயிலாக, மின் நுகர்வோர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. இந்த செயலியில் மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வசதியும், கடந்த பிப்ரவரியில் துவங்கப்பட்டது.
மின் கம்பங்கள்: எனவே, மின் தடை, மீட்டர் பழுது, மின் கட்டணம், மின்னழுத்த பிரச்சனை, சேதமடைந்த மின் கம்பம், மின் திருட்டு, மின் கம்பி அறுந்தது, தீ விபத்து தொடர்பாக இந்த செயலியில் புகார் அளிக்கலாம்..
அதாவது மின் கட்டணம் செலுத்துவது + புகார்கள் அளிப்பது என இரட்டிப்பு வசதிகள் இந்த செயலியில் உள்ளன. அதனால்தான், 66.49 லட்சம் பேர் இந்த செயலியை தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளதாக தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த எண்ணிக்கை இன்னும் கூடும் என்றும் நம்பப்படுகிறது.
மின்வாரியம்: இதற்கு நடுவில் இன்னொரு அதிரடியையும் மின்வாரியம் பிறப்பித்துள்ளது.. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மண்டலங்களில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து, சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நேற்று அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
அப்போது செந்தில் பாலாஜி பேசும்போது, "மின் வினியோக பெட்டிகள் அனைத்தும் உரிய முறையில் பராமரிக்கப்படுவதை, பொறியாளர்கள் கள ஆய்வு செய்து, உறுதி செய்ய வேண்டும். தரைமட்டத்தில் இருந்து ஒரு மீட்டர் உயர்த்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
கண்டிப்பு: தேவைப்படும் அனைத்து தளவாட பொருட்கள் இருப்பில் வைத்துக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து அதிகாரிகளும் தங்களின் மொபைல் போனை எந்த காரணம் கொண்டும், ஆப் செய்து வைக்கக்கூடாது.. இதை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மழை காலங்களில் தகவல் தொடர்பில் தொய்வு ஏற்படாமல், மின்சார பணிகள் தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள, வாக்கி டாக்கி இயந்திரங்களை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்" என்றார் செந்தில் பாலாஜி.












Click it and Unblock the Notifications