பள்ளிக்கரணைக்கு டக்குனு வந்த விருந்தாளி.. சென்னை புறநகர் பகுதிகளை சூழ்ந்த அதிசயம்.. வெல்கம் வெல்கம்
சென்னை: பார்க்கிறதுக்கே ரம்மியமாக காட்சி தருகிறது பள்ளிக்கரணை.. இந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள் வந்து கொண்டேயிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி உள்ளன. மேலும் பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியிலும் போதுமான நீர் நிரம்பி காணப்படுகிறது.

வழக்கமாக பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதிக்கு வெளிநாட்டு பறவைகள் வருகை தரும் வலசை, வருடந்தோறும் அக்டோபர் மாதம் பிற்பகுதியில் தொடங்கும்.. ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, அக்டோபர் மாதம் தொடக்கத்திலேயே அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கி இருக்கிறது. அக்டோபர் மாதம் வரத்துவங்கினால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை இவை வந்து செல்லும்.
பறவைகள்: இப்போது அப்படித்தான் அரிய வகை பறவைகள் வரத்தொடங்கி உள்ளன.. வரும் நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. கடந்த டிசம்பரில் சென்னையில் புயல், பெருவெள்ளம் வந்துவிட்ட நிலையில், புறநகர் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் போதுமான அளவு தண்ணீர் நிரம்பி உள்ளது.
எனவே, தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பறவைகள், வாத்து இனங்கள் வந்து உள்ளன. குறிப்பாக நீல நிற தொண்டை உடைய ஈ பிடிப்பான் குருவி வந்திருக்கிறது.. இதுதான், இந்த ஆண்டு புதிய வரவு ஆகும்.
கணக்கெடுப்பு: கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு பள்ளிக்க ரணை சதுப்பு நிலத்திற்கு கூடுதலாக பறவை இனங்கள் வந்து இருப்பது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதாவது, போன வருஷம் 130 பறவை இனங்கள் வந்தன.. இந்த வருஷம் 148 பறவை இனங்கள் வந்துள்ளன.
இதேபோலவே, கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி, பெரும்பாக்கம் சதுப்பு நிலம், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் விரிவாக்கம், போரூர் ஏரி, எண்ணூர் முகத்துவாரம், வண்டலூர் ஏரி, மடிப்பாக்கம் ஏரி உள்ளிட்ட 25 இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் அதிக அளவில் வந்திருப்பது கணக்கிடப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.
புதிய வரவு: ஆனால், நன்மங்கலம் ஏரியில் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டபோது, சென்னையில் முதன்முறையாக நீல நிற தொண்டை உடைய "நீலத்தொண்டை நீல ஈ பிடிப்பான் பறவை" இருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறதாம்.. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கணக்கெடுப்புக்காக 9 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தட்டை வாயன் வாத்து, சிறிய சீழ்க்கைச்சிரவி வாத்து, ஊசிவால் வாத்து, நாமத் தலை வாத்து போன்றவையும் காணப்படுகிறது என்கிறார்கள் பறவைகள் நல ஆர்வலர்கள்.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications