அரியலூரில் ஆச்சரியம் தந்த கலெக்டர்.. "இதென்ன" இப்படி இருக்கு? வியந்த ஜனம்.. கலக்குது தமிழ்நாடு அரசு
சென்னை: தமிழக அரசு மிக முக்கிய உத்தரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் பிறப்பித்திருந்த நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகளில் மாவட்ட கலெக்டர்கள் இறங்கி உள்ளனர்.
தமிழ்நாட்டு மக்களின் குறைகளை தீர்க்கவும், அவர்களின் நன்மையை கருத்தில் கொண்டும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அப்படிப்பட்ட ஒன்றுதான் "உங்களைத் தேடி, உங்கள் ஊரில்" திட்டமாகும்.
இதன் நோக்கம் என்னவென்றால், ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்பதுதான்.

கலெக்டர்கள்: முக்கியமாக, தமிழக அரசு கொண்டுவந்துள்ள நலத்திட்டங்கள் அனைத்தும், பொது மக்களை சரியாக சென்று அடைகின்றனவா? பல்வேறு துறைகளால் வழங்கப்படுகின்ற சேவைகள் மக்களுக்கு முறையாக கிடைக்கின்றனவா? என்பது குறித்தெல்லாம் களத்துக்கு நேரடியாகச் சென்று, ஆய்வில் ஈடுபட வேண்டும்.
2 நாட்களுக்கு முன்பு நடந்த தமிழக பட்ஜெட்டில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது. அதன்படி, உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின்கீழ், கலெக்டர்கள் மாதம் ஒருமுறை ஒரு பகுதியில் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படி அறிவிப்பு வந்த மறுநாளே, மாவட்ட கலெக்டர்கள் தங்கள் கள ஆய்வினை துவங்கிவிட்டார்கள்.
திடீர் ஆய்வு: அந்தவகையில், அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணாவும் தன்னுடைய ஆய்வை துவங்கியிருக்கிறார்.. இதற்காகவே, நல்லாம்பாளையம் கிராமத்தில் முகாமிட்டு, ஆய்வு நடத்தினார். அப்போது அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்
அந்த பகுதி பொதுமக்களையும் சந்தித்தும் குறைகளை கேட்டார்.. பிறகு, நல்லாம்பாளையத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஆய்வு மேற்கொள்ள சென்றார்.. கலெக்டர் உள்ளே சென்ற நேரம், பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு தயாராகி கொண்டிருந்தது.. அதனால், நேராக கிச்சனுக்குள்ளேயே நுழைந்துவிட்டார் கலெக்டர்.
காலை உணவு: அங்கு தயாரிக்கப்பட்ட காலை உணவு என்ன என்று? சமையல் செய்தவர்களிடம் கேட்டார்... அதற்கு அவர்கள், உப்புமா தயார் செய்து வைத்திருக்கிறோம் என்றார்கள்.
உடனே கலெக்டர், எனக்கும் கொஞ்சம் உப்புமா கொடுங்கள் என்று கேட்டார். அவர்களும், ஒரு தட்டில் உப்புமா வைத்து தரவும், அதை வாங்கி சாப்பிட போனார் கலெக்டர்.. பிறகு திடீரென, என்ன இது உப்புமாவா? பொங்கலா? என்று பகீர் சந்தேகத்தை கிளப்பினார்.
டேஸ்ட் : சமையல் செய்தவர்கள், இப்படியொரு கேள்வியை கொஞ்சமும் எதிர்பார்க்கவேயில்லை.. இது சாட்சாத் உப்புமா தான் என்று விளக்கம் தந்தார்கள்.. அதற்கு கலெக்டர், "டேஸ்ட் என்னமோ நல்லாதான் இருக்கிறது.. ஆனால் பொங்கலை போல அரிசியெல்லாம் உள்ளதே.. இனி அந்தந்த உணவை, அந்தந்த உணவு பொருட்களை கொண்டு, அந்தந்த சமையல் முறையில் தயாரிக்க வேண்டும்" என்று அறிவுறுத்திவிட்டு போனாராம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications