"அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா".. தமிழக பட்ஜெட்டில் வெளியான அதிரடி அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது இந்த நிதியாண்டில் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.
அடுத்த சில நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது.

பட்ஜெட் தாக்கல்
இந்த நிலையில், 2023-2024-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை (வரவு-செலவு கணக்கு) தாக்கல் செய்வதற்காக சட்டசபை கூடியது. காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். அப்போது பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து வாசித்தார். இதில், இந்த நிதியாண்டில் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிக்க, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

13, 491 பேர் கைது
சட்டம் ஒழுங்கை இந்த அரசு திறம்பட நிலைநாட்டியதன் காரணமாக, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாகவும், சமுதாய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்து வருகிறது. போதைப்பொருள் பயன்பாடு மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கு, அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நடவடிக்கைகளால்,13 ஆயிரத்து 491 போதைப் பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுடைய வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

38.25 கோடி ரூபாய் செலவில்
காவல் நிலையங்களிலும் 38.25 கோடி ரூபாய் மொத்தச் செலவில் கண்காணிப்புக் கேமரா அமைப்பு மேம்படுத்தப்படும். சமூக ஊடகங்கள் வாயிலாக தவறான காணொலிகளைப் பரப்பி புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே அச்சத்தை உருவாக்க, அண்மையில் சமூக விரோதிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அரசின் விரைவான, கடுமையான நடவடிக்கைகளால் ஒடுக்கப்பட்டுள்ளன. இச்செயல்களில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது 11 வழக்குகள் பதியப்பட்டு, கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்பான பணிச்சூழலை எடுத்துரைத்து
அரசின் இந்த உறுதியான நடவடிக்கை அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. சுமார் 4 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகமும், காவல்துறை அலுவலர்களும் நேரில் சந்தித்து உண்மையை விளக்கினர். வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிவதற்கான பாதுகாப்பான பணிச்சூழலை எடுத்துரைத்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் அனைத்து முயற்சிகளையும் பீகார், ஜார்கண்ட் மாநில அரசுகளுடன் இணைந்து அரசு மேற்கொண்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications