மொத்த திமுக பாஜகவுக்கு வரும்! கனிமொழியின் போன்! உதயநிதிக்கு ‘ப்ராண்டிங்’! மனம் திறந்த சூர்யா சிவா..!

Subscribe to Oneindia Tamil

சென்னை : உதயநிதியின் நண்பர்கள் என்பதற்காக அவரை சார்ந்தவர்களுக்கு பதவி கொடுக்கப்படுகிறது எனவும், திமுகவில் இருந்து மேலும் பலர் அல்ல மொத்த திமுகவும் பாஜகவுக்கு வரும் என பாஜகவில் இணைந்துள்ள திருச்சி சிவா எம்பியின் மகன் சூர்யா சிவா கூறியுள்ளார்.

திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைய போவதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தகவல் வெளியானது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக கூறப்பட்டது

பாரம்பரியமாக திமுகவில் இருந்தும், தந்தைக்கும் தனக்கும் உரிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை என்ற அதிருப்தியில் பாஜகவில் சேர சூர்யா முடிவு செய்துள்ளதாகவும், விரைவில் இணைவது உறுதி எனவும் சொல்லப்பட்டது.

பாஜகவில் சூர்யா சிவா

பாஜகவில் சூர்யா சிவா

இதற்கிடையே இந்த தகவல்கள் மற்றும் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவா நேற்று பாஜகவில் இணைந்தார். மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியில் இணைந்த அவரை கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் அவரை கட்சிக்கு வரவேற்றனர். இதனையடுத்து பல்வேறு ஊடகங்களுக்கும் தொலைக்காட்சிகளுக்கும் அவர் பேட்டியளிப்பதோடு, திமுக குறித்த கடுமையான வாதங்களை முன்வைத்து வருகிறார்.

பகீர் பேட்டி

பகீர் பேட்டி

இந்நிலையில் திமுகவில் இருந்து மேலும் பலர் அல்ல மொத்த திமுகவும் பாஜகவுக்கு வரும் என பாஜகவில் இணைந்துள்ள திருச்சி சிவா எம்பியின் மகன் சூர்யா சிவா கூறியுள்ளார்.இது தொடர்பாக பேசியுள்ள அவர், "பாஜகவில் நான் பதவிக்காக வரவில்லை. ஆனால் எந்தக் கட்சியாக இருந்தாலும் உழைப்புக்கேற்ற மரியாதை இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இடமிருந்து பதவியைப் பிடுங்கி டிஆர் பாலுவின் மகனுக்கு கொடுத்தனர்.

உதயநிதிக்கு பிராண்டிங்

உதயநிதிக்கு பிராண்டிங்

உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதோடு டிஆர் பாலுவின் மகன் ராஜாவுக்கும் அமைச்சர் பதவி கொடுக்கப்படுகிறது. உதயநிதியின் நண்பர்கள் என்பதற்காக அவரை சார்ந்தவர்களுக்கு பதவி கொடுக்கப்படுகிறது. திமுகவில் சபரீசன் ஒரு பக்கம் அரசியல் செய்கிறார், உதயநிதி ஒரு பக்கம், கனிமொழி ஒரு பக்கம் என முக்கோண அரசியல் உள்ளது. உதயநிதியை பிராண்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக அவரது வட்டத்தை வளர்க்கிறார்கள்.

பாஜகவில் திமுக

பாஜகவில் திமுக

உதயநிதி ஆதரிப்பவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு பதவிகள் கொடுக்கின்றனர். பாஜகவில் இணைவதற்கு முன்பாக கனிமொழி நம்பரில் இருந்து 3 முறை போன் வந்தது. எனினும் நான் அதனை எடுக்கவில்லை. நான் பாஜகவில் இணைந்ததை அங்கீகரிக்கும் இடத்தில் எனது தந்தை திருச்சி சிவா இல்லை. அண்ணாமலை ஏற்றுக்கொண்டார் அது போதும். திமுகவில் இருந்து மேலும் பலர் அல்ல மொத்த திமுகவும் பாஜகவுக்கு வரும் என பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+