லீனா மணிமேகலை மீது சுசி கணேசன் அவதூறு வழக்கு #metoo
Recommended Video

சென்னை: எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது இயக்குநர் சுசி கணேசன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.
நாடு முழுவதும் மீ டூ விவகாரம் சூடுபிடித்து வருகிறது. தமிழகத்திலும் இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைரமுத்து உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் பெயர்கள் மீ டூ விவகாரத்தில் அடிபடுகின்றன.

இந்த நிலையில் எழுத்தாளர் லீனா மணிமேகலை ஒரு பரபரப்பைக் கிளப்பினார். 2005ம் ஆண்டு இயக்குநர் சுசி கணேசன் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு உடனடியாக சுசி கணேசன் மறுப்பு தெரிவித்திருந்தார்.
லீனா சொல்வது பொய் என்று சாடிய அவர் லீனா மீது வழக்குப் போடுவேன் என்றும் கூறியிருந்தார். அதன்படி இன்று அவர் வழக்கு தொடர்ந்தார். சென்னை சைதாப்பேட்டை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சுசி கணேசன் சார்பில் அவரது வழக்கறிஞர் வழக்குத் தாக்கல் செய்தார்.
[நிதி மோசடி.. பாதிக்கப்பட்ட பெண்கள் அடுத்தடுத்து பலி.. மோசடி பேர்வழி சிவக்குமார் விரைவில் கைது!]
தனது மனுவில் லீனா மணிமேகலை கூறும் புகார்கள் பொய்யானவை. அடிப்படை ஆதாரம் இல்லாதவை. எனது பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இப்படி பொய்ப் புகார்களைக் கூறி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் கணேசன்.
இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு வரும் என்று தெரிகிறது.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications