"பூனைக்குட்டி வெளியே வந்தது".. டெல்லியில் இருந்து போன்.. சீக்ரெட்டை உடைத்த டிடிவி தினகரன்.. திமுகவா
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்
சென்னை: அதிமுக ஒரு சாதிக்கட்சி போல் வெற்றி பெற்றுள்ளது.. அமமுக வெற்றி பெறவில்லையானாலும், துரோகிகளின் வெற்றியை தடுத்திருக்கிறோம் என்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அத்துடன் சீக்ரெட் ஒன்றையும் தற்போது வெளிப்படுத்தி உள்ளார்.
மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமமுகவின் பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது.. பல்வேறு காரணங்களை முன்னிறுத்தியே இந்த பொதுக்குழுவை நடத்த முடிவு செய்திருந்தார் தினகரன்.
பொதுக்குழுவின் வெற்றியை காரணம் காட்டியே, எடப்பாடி பழனிசாமியை அரசியலில் தோற்கடித்தே தீர வேண்டும் என்று தினகரன் திட்டமிட்டு வந்ததாக கூறப்பட்டது.

ஓபிஎஸ் + சசிகலா
அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் போல் அல்லாமல், எடப்பாடி பழனிசாமியை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருவது அமமுக மட்டுமே என்பதை டெல்லி மேலிடத்துக்கு காட்டவும் முடிவு செய்ததாகவும், இதன்மூலம், எடப்பாடி & ஓபிஎஸ் & சசிகலா இவர்கள் எல்லோரையும்விட திமுகவை அதிகம் எதிர்த்து வருவது அமமுகதான் என்றும், அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இருப்பது அமமுகவில்தான் என்பதையும் தெளிவுபடுத்த போவதாகவும் கூறப்பட்டது.

ஷாக் ட்ரீட்மென்ட்
இதெல்லாம் எதற்காக என்றால், பாஜக தலைமையிலான 3வது அணி அமைவதைவிட, அமமுக தலைமையிலான 3 அணி அமைய வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் செய்திகள் பரபரத்தன.. திட்டமிட்டபடியே பொதுக்குழுவை நடத்தி காட்டி உள்ளார் தினகரன்.. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மீது சரமாரி விமர்சனங்களை முன் வைத்திருந்தார்.. அதிமுக நல்லவர்கள் கையில் இல்லை, அக்மார்க் சுயநலவாதி ஒருவரின் கையில்தான் அதிமுக சிக்கிக் கொண்டுள்ளது.. இரட்டை இலை சின்னத்திற்காக மட்டுமே தொண்டர்கள் அங்கே உள்ளனர் என்றெல்லாம் பேசி எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சி வைத்தியம் தந்துள்ளார்.

சீக்ரெட் + சஸ்பென்ஸ்
அதுமட்டுமல்ல, ஒரு முக்கியமான சீக்ரெட் ஒன்றையும் பொதுக்குழு கூட்ட மேடையிலேயே போட்டு உடைத்தார் டிடிவி தினகரன்.. அவர் பேசியதாவது: "அதிமுக ஒரு சாதிக்கட்சி போல் வெற்றி பெற்றுள்ளது.. அமமுக வெற்றி பெறவில்லையானாலும், துரோகிகளின் வெற்றியை தடுத்திருக்கிறோம்.. சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, என்ன நடந்தது என்று உங்களுக்கே தெரியும்? ஏதோ ஒரு பகுதி கட்சி போல, ஒரு சாதி கட்சி போல அதிமுக வெற்றி பெற்றுள்ளார்கள்.. உண்மைதானே? அமமுக வெற்றி பெற முடியவில்லை..

பழனிசாமி
ஆனால், துரோகிகள் வெற்றி பெற முடியாமல் செய்தது அமமுகதான்.. கடந்த தேர்தலின்போது, அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று நலம்விரும்பிகள் டெல்லியில் இருந்து என்னுடன் பேசினார்கள்.. அப்போது நான் அவர்களிடம், "பழனிசாமியை முதல்வராக மறுபடியும் கொண்டுவந்தால், அம்மா ஆட்சியை மறுபடியும் தமிழகத்தில் கொண்டு வர முடியாது, திமுக ஆட்சி பொறுப்புக்கு வருவதையும் தடுக்க முடியாது.
Recommended Video

40.. 50 தொகுதிகள்
அதனால் வேறு ஒருவரை, (என்னை சொல்லிக் கொள்ளவில்லை) வேறு ஒருவரை, அவங்க இயக்கத்திலேயே கூட யாரையாவது வேட்பாளராக தேர்ந்தெடுத்தால், தமிழகம் மீண்டுவிட வாய்ப்பு உள்ளது.. அதேபோல, அமமுகவுக்கு 40, 50 தொகுதிகளில் அதிமுகவை விட சிறந்த, தகுதியான வேட்பாளர்கள் இருக்கிறார்கள்.. அவர்களுக்கான வாய்ப்பையும் நீங்கள் பெற்றுத் தாருங்கள்.. அப்படி பெற்றுத் தந்தால், உங்களுடன் நாங்கள் கூட்டணி வைக்கிறோம்" என்று டெல்லியில் சொன்னேன்.. ஆனால், பழனிசாமியை அவர்கள் திரும்ப திரும்ப சொல்லவும், திமுக ஆட்சிக்கு இங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், அதற்கு நான் ஒப்புக் கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார் டிடிவி தினகரன்.












Click it and Unblock the Notifications