அப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா? எஸ்வி சேகர் நக்கல்!
சென்னை: நான் பேசியது புரியாதவர்கள் ஹேராம் பாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியதற்கு பாஜக மூத்த நிர்வாகியான எஸ்வி சேகர் பதில் தெரிவித்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர்தான் நாதுராம் கோட்சே என்று கூறி சர்ச்சையில் சிக்கினார் நடிகர் கமல்ஹாசன். இதனால் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து 2 நாட்கள் பிரச்சாரத்துக்கு செல்லாமல் இருந்த கமல் நேற்று திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் பிரச்சாரம் செய்தார்.

திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கமல் ஹாசன் நேற்று மதுரை தோப்பூரில் பிரசாரம் செய்தார். அப்போது அரவக்குறிச்சி தொகுதி பிரச்சாரத்தின் போது தான் பேசியது சரித்திர உண்மை என்று அவர் உறுதிபட கூறினார்.
ஒற்றுமை நம் குணாதிசயமாக வேண்டும். இதுதான் எனது ஆசை. எந்த ஊரிலும், யாரை பற்றியும் சந்தோஷமாக பேசுவேன், விமர்சிப்பேன். இது என் மக்கள். அந்த உரிமையுடன் சொல்கிறேன். புரியாதவர்கள் 'ஹேராம்' படத்தை பாருங்கள் என்றார் கமல்.
அப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா. நடக்காது. எப்ப ரிலீஸ் ஆனாலும் ஓடாது. https://t.co/ZuzRw9Ospr
— “CHOWKIDAR”🇮🇳S.VE.SHEKHER (@SVESHEKHER) May 15, 2019
இந்நிலையில் கமலின் இந்த பேச்சுக்கு நடிகரும் தமிழக பாஜக மூத்த தலைவருமான எஸ்வி சேகர் பதில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, 'அப்படியாவது ஹேராமை மறுபடியும் ரிலீஸ் பண்ணி ஓட வைக்கலாம்னு ஐடியாவா. நடக்காது. எப்ப ரிலீஸ் ஆனாலும் ஓடாது'. இவ்வாறு எஸ்வி சேகர் கமலின் பேச்சுக்கு டிவிட்டர் வாயிலாக பதில் கொடுத்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications