Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முக மூடிகளுடன் இருக்கும் வில்லன்களே".. விஜய்க்கு எஸ்வி சேகர் வைத்த கிண்டலான கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள் என்று நடிகர் விஜய்க்கு எஸ்வி சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் வைத்துள்ள கோரிக்கை திகைப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பல காலமாக தமிழ்நாட்டில் இருக்கிறது. நடிகர் எம்ஜிஆரில் ஆரம்பித்து, சிவாஜி கணேசன், ஜெயலலிதா, டி ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கமல்ஹாசன் வரை பலரும் அரசியலுக்கு வந்துள்ளனர். இதில் எம்ஜிஆர், ஜெயலலிதா தவிர யாரும் தமிழகத்தில் முதல்வராகவில்லை.. அதேநேரம் விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவர் என்கிற அளவில் உயர்ந்தார். அதுவே பின்னாளில் வீழ்ச்சிக்கு காரணமாக மாறியது. கமல்ஹாசனை பொறுத்தவரை கணிசமாக வாக்குகள் 2021 தேர்தலில் பெற்றாலும் வெற்றி பெறவில்லை. இப்போது திமுக உடன் கூட்டணியில் இணைய போவது தெரிகிறது.

SV Shekhar congrats actor Vijay is entering politics with good intentions

இந்நிலையில் தமிழ்நாட்டில் தற்போது உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக உள்ள விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் ரசிகர்கள் படையுடன் களம் இறங்கி உள்ள விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் இன்று அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். 2026 சட்டசபை தேர்தலை இலக்காக வைத்து களம் இறங்கி உள்ளதாக அறிவித்துள்ளார்.

நடிகர் விஜய் வெளியிட்டிருந்த அறிக்கையில், 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

SV Shekhar congrats actor Vijay is entering politics with good intentions

வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின் வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும்.

இடைப்பட்ட காலத்தில், எமது கட்சியின் தொண்டர்களை அரசியல்மயப்படுத்தி, அமைப்பு ரீதியாக அவர்களை தயார் நிலைக்கு கொண்டுவரும் பணிகளும், கட்சியின் சட்டவிதிகளுக்குட்பட்டு ஜனநாயக முறையில் பொறுப்பாளர்களை தேர்ந்தெடுத்து, உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் மற்றும் கட்சி விரிவாக்க பணிகள் விரைவில் நடக்கும் என்று நடிகர் விஜய் கூறி உள்ளார்.

இதனிடையே விஜய்யின் அரசியல் கட்சி அறிவிப்பு குறித்து பலரும் கருத்து தெரிவித்துகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகீறார்கள். அந்த வகையில் நடிகர் எஸ்வி சேகர் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விஜய் அவர்களே.. நல்ல எண்ணத்துடன் அரசியலுக்கு வரும் தங்களுக்கு என் வாழ்த்துக்கள். அடையாளம் தெரிந்த வில்லன்களைவிட அடையாளம் தெரியாத முக மூடிகளுடன் இருக்கும் வில்லன்களே அதிக ஆபத்து. எந்த முடிவாக இருந்தாலும் அதை நீங்களே அறிவியுங்கள். தமிழக வெற்றி (க்) கழகம். 'க்' உண்டா இல்லையா. உங்களுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.. " இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+