இப்படி அறிக்கை விடுவதற்கு பதில் ஜோசியரை ரகசியமா கேட்கலாமே.. கி வீரமணியை கலாய்த்த எஸ்வி சேகர்!
சென்னை: கி வீரமணி போன்றவர்களால்தான் மழை பெய்வதில்லை என பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் டிவிட்டரில் கலாய்த்துள்ளார்.
தமிழகத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தமிழக கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என்றும் அமிர்தவர்ஷினி, மேகவர்ஷினி, கேதாரி, ஆனந்த பைரவி, ரூப கல்யாணி போன்ற ராகங்களை வாசித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றும் இந்து அறநிலையத்துறை அண்மையில் உத்தரவிட்டது.

இந்து அறநிலையத்துறையின் இந்த உத்தரவுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி கடும் கண்டனம் தெரிவித்து நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் இந்து அறநிலையத் துறை ஆணையரின் ஆணை மதச் சார்பற்ற தன்மை கொண்ட இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது.
மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் - ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு 51-A(h) எதிரானது இது. சட்டத்தை மீறும் இவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என கி வீரமணி வலியுறுத்தியிருந்தார்.
கி.வீரமணியின் அந்த அறிக்கை இன்று செய்தித்தாள்களில் வெளியானது. இந்நிலையில் அவரது கண்டன அறிக்கைக்கு பாஜக நிர்வாகியான எஸ்வி சேகர் டிவிட்டரில் பதிலளித்துள்ளார்.
வீரமணி போன்றவர்களால்தான் மழை பெய்வதில்லை. இந்த வெட்டி அறிக்கை விடுவதற்கு பதில் என்ன செய்யலாம்னு ரகசியமா சோதிடரை கேட்டா பரிகாரம் சொல்லிடுவாரே. pic.twitter.com/JYEGH4WR4Z
— “CHOWKIDAR”🇮🇳S.VE.SHEKHER (@SVESHEKHER) May 3, 2019
இதுதொடர்பாக நாளிதழில் வெளியான கி வீரமணியின் செய்தியை டிவிட்டரில் மேற்கோள் காட்டிய எஸ்வி சேகர், வீரமணி போன்றவர்களால்தான் மழை பெய்வதில்லை. இந்த வெட்டி அறிக்கை விடுவதற்கு பதில் என்ன செய்யலாம் என்று ரகசியமா சோதிடரை கேட்டா பரிகாரம் சொல்லிடுவாரே என்று கூறி கலாய்த்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications