Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமதாஸின் திடீர் முடிவு.. என்னாது திண்டிவனமா.. டாக்டர் ஐயாவின் வேற லெவல் ஐடியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மொழி உணர்வு அரசியலை கட்டமைக்க துவங்கி உள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதை அடுத்தக்கட்டத்துக்கும் கொண்டு செல்லும் முயற்சியில் இறங்கி உள்ளார்.. இது தமிழக மக்களுக்கு நெகிழ்ச்சியை தந்து வருகிறது.

பாஜக கூட்டணியில் பாமக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தமிழுக்கும் தமிழ்மொழிக்கும் ஒரு இழுக்கு என்றால், அதற்கு ஓடோடி வந்து முதலில் கண்டன குரல் எழுப்புவது பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸாகத்தான் இருக்கும்.

இந்தி திணிப்பு விவகாரம் ஆகட்டும், ரெயில்வேயில் வேலை பார்ப்பவர்கள் இந்தியில் பேச வேண்டும் என்ற அறிவிப்பு ஆகட்டும், அஞ்சல்துறை தேர்வு ஆகட்டும், மத்திய அரசின் எந்தவித அறிவிப்பு வந்தாலும், அதற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்யும் தலைவர்களில் மிக மிக முக்கியமானவர் டாக்டர் ராமதாஸ்!

 படேல் சிலை

படேல் சிலை

இப்படித்தான் ஒருமுறை 4 வருடங்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "நாட்டில் உள்ள அனைத்து மக்களிடம் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நம்முடைய தாய்மொழியை பயன்படுத்துவதை அதிகமாக்க வேண்டும், ஒருமொழியான இந்தியால் மட்டும்தான், மகாத்மா காந்தி, இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் கனவை நிறைவேற்ற முடியும்" என்று சொல்லி இருந்தார்... இந்த ட்வீட் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தபோது, இதற்கு முதல்நபராக கண்டனம் தெரிவித்தவர் டாக்டர் ஐயாதான்.

 ராமதாஸ் சுரீர்

ராமதாஸ் சுரீர்

"பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும், உலக அரங்கில் இந்தியாவின் அடையாளமாக இந்தி ஒருபோதும் திகழ முடியாது" பதிலடியை தந்திருந்ததை, பலரும் உற்றுகவனித்திருந்தனர்.. அந்தவகையில், தமிழுக்கும், தமிழ்மொழியின் நலனுக்கும் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறார் டாக்டர் ராமதாஸ்.. இப்போது, தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரையை தொடங்கிய பாமக ராமதாஸ், அதனை மதுரையில் நிறைவு செய்திருக்கிறார்.

 வெட்கமா இருக்கு

வெட்கமா இருக்கு

இந்த நிகழ்வில் ராமதாஸ் பேசும்போது, "தமிழைத் தேடி என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது ஆனால் வேறு வழியின்றி இந்த பரப்புரை பயணத்தை மேற்கொண்டுள்ளோம். கலப்புமொழியோடு தமிழ்மொழியை பேசுவது பார்த்து கோபம் வரவில்லை. ஆனால் பரிதாபம்தான் ஏற்படுகிறது, பிரதமர் மோடி கூட தனது சொந்த மாநிலத்தில் பேசும் தாய் மொழியிலயே பேசுகிறார். அன்னை தமிழை வளர்க்க வேண்டும் என்பதால் தமிழையே அரசியலாக்க வேண்டியுள்ளது. அன்னை தமிழை பாதுகாக்க இன்னொரு மொழிப்போருக்கு தயாராக வேண்டும்" என்று ராமதாஸ் கூறியதன் முக்கியத்துவத்தை தமிழக மக்கள் உணர துவங்கி விட்டனர் என்றே சொல்லலாம்.

 டாக்டர் ஐயா

டாக்டர் ஐயா

அந்தவகையில், மொழி உணர்வு அரசியலை கட்டமைக்க தொடங்கியிருக்கிறார் ராமதாஸ்.. பரப்புரை பயணத்தின் நிறைவு நாளில் தமிழ் மொழி சார்ந்த தீர்மானங்களையும் நிறைவேற்றியிருக்கிறார். சென்னையில் தொடங்கி மதுரையில் நிறைவுப் பெற்ற இந்த 8 நாள் பிரச்சார பயணத்தில், தமிழன்னை சிலையும் ராமதாஸோடு பயணித்தது... இந்த தமிழன்னை சிலை குறித்துதான் சில முக்கிய தகவல்கள் நமக்கு இப்போது கிடைத்துள்ளன.. இந்த பயணத்துக்காகவே தமிழன்னை சிலையை உருவாக்கினாராம் டாக்டர் ராமதாஸ். சிலையை உருவாக்கியவர் பிரபல சிற்பி சிவா என்பவர் ஆவார்..

 கம்பீரம் + கமெண்ட்

கம்பீரம் + கமெண்ட்

சிலை கலையில் பல்வேறு விருதுகளைப் பெற்றவர் சிவா. ராமதாசின் யோசனையில் உருவாக்கப்பட்ட தமிழன்னை சிலை, கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது. சிலையை கண்டுகளித்த பொதுமக்களும் தமிழ் உணர்வாளர்களும் இந்த கமெண்ட்டை சொல்லி ராமதாசுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள். இதற்கிடையே, தனது மொழி அரசியலின் அடுத்தக் கட்டமாக, தமிழன்னைக்கு ஒரு மணிமண்டபம் கட்டும் திட்டத்தில் இருக்கிறார் ராமதாஸ்.

 நெகிழும் கூடாரம்

நெகிழும் கூடாரம்

முதலில் அமைக்கப்படும் அந்த மணிமண்டபத்தை சென்னையில் அமைக்கலாமா? அல்லது திண்டிவனத்தில் அமைக்கலாமா? என்று ஆலோசித்து வருகிறார். அப்படி தமிழன்னைக்கு மணிமண்டபம் உருவாக்கப்பட்டதும் அதே வடிவிலான மண்டபத்தை மாவட்டத்துக்கு ஒரு மணிமண்டபம் அமைக்கவும் திட்டமிடப்படுகிறது. முதலில் உருவாகும் மணிமண்டபத்தில், தற்போது உருவாக்கப்பட்ட தமிழன்னை சிலையை நிறுவவும் முடிவு செய்திருக்கிறாராம் டாக்டர் ஐயா..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+