விசுக்குனு கிச்சனில் நுழைந்த பிரியா.. அதுவும் காலங்காத்தால.. "பதார்த்தமா கொஞ்சம் யதார்த்தமா": வாரேவா
மாநகராட்சி பள்ளிகளுக்கு திடீர் விசித் அடித்து, காலை சிற்றுண்டி கூடத்தை ஆய்வு செய்தார் மேயர் பிரியா
சென்னை: சென்னை மேயர் பிரியா ஒரு உறுதியை தந்துள்ளார்.. இந்த அறிவிப்பானது பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
பதவியேற்றது முதல், செய்தியாளர் சந்திப்புகளுக்கு வருவதை பெரும்பாலும் பிரியா தவிர்த்து வந்ததாக சொல்லப்பட்டது.. ஆனால், அப்படியெல்லாம் எதுவுமே இல்லை.
இப்போது வரை பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து வருகிறார்.. மிக பொறுப்புடன் சென்னையின் நலனில் அவர் அக்கறை காட்டி வருகிறார்.. இது சென்னைவாசிகளிடம் பரவலாக வரவேற்பை பெற்று வருவதை மறுக்க முடியாது..!

ஹேப்பி ஹேப்பி
இந்த முறை சென்னையில் மழை வெள்ளத்தின்போது, நள்ளிரவு என்றும் பாராமல் ஸ்பாட்டுக்கு சென்று ஆய்வு நடத்தினார் பிரியா.. மழை நீர் தேங்காத வகையில் நடவடிக்கையை ஆணையருடன் சேர்ந்து எடுத்தார்.. சில மாதங்களுக்கு முன்பு வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை தீவிரப்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய சாலையில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை என்ற பாராட்டு திமுக அரசுக்கு கிடைத்து வருகிறது..

சின்னப்பொண்ணா
சில தினங்களுக்கு முன்பு, முதன்முறையாக ஒரு சேனலுக்கு பிரியா பேட்டி தந்திருந்தார்.. உங்கள் மீதான விமர்சனங்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பிரியா பதிலளிக்கும்போது, "சின்னப்பெண்ணாக முதலில் இங்கு என்னை யாரும் நடத்தவில்லை.. மேயர் என்ற பதவிக்கு தரவேண்டிய மரியாதையை மூத்த தலைவர்கள், கண்டிப்பாக தருகிறார்கள்... "வா..ம்மா, போ..ம்மா" என்று சொல்வதெல்லாம் சாதாரணமாக எல்லாரும் பேசக்கூடிய இயல்பான விஷயம்தானே.. ஒரு மகளிடம் பேசுவது போலவே பேசுகிறார்கள்.. உரிமையில் பேசுவதால், தவறாக நான் நினைக்கவில்லை, என்னை அது பாதிக்கவும் இல்லை..

குடை பிடிச்சாச்சு
அமைச்சருக்கு குடைப்பிடிப்பதாக சொல்கிறார்களே.. மழை பெய்தால், எல்லாருமே குடைபிடிக்கத்தான் செய்வார்கள்.. இந்த குடை பிடிக்கும் சம்பவம், கிராப் செய்யப்பட்டது.. அதற்கு முன்பு, அமைச்சர் அவர்கள், எனக்கும்தான் குடை பிடித்தார்.. ஆனால், அதை பற்றி யாருமே பேசவில்லையே ஏன்? முதல்நாளில் இருந்தே சோஷியல் மீடியாவில் நிறைய விமர்சனங்கள் என்மீது வந்து கொண்டுதான் இருக்கிறது.. அதில் ஒருசில விமர்சனங்கள் என்னை காயப்படுத்தவே செய்கிறது.. நடந்த சம்பவம் எது என்று முழுமையாக தெரிந்து கொள்ளாமலேயே என்னை டிரோல் செய்வது, மனதுக்கு வருத்தமாக இருக்கிறது" என்று கேஷூவலாக பேசியிருந்தது பல தரப்பினரையும் ஈர்க்கவே செய்தது.

கிச்சனுக்குள்ளேயே
இந்நிலையில், மீண்டும் பிரியா பேசுபொருளாகி உள்ளார்.. இதற்கு 2 காரணங்கள் உள்ளன.. ராயபுரம் பகுதியில் உள்ள சமையல் கூடத்திற்கு ஆய்வுக்கு சென்றுள்ளார்... அதுவும் காலை 6 மணிக்கே சென்றுள்ளார்.. திடீரென அந்த கிச்சனுக்குள் நுழைந்ததுமே அங்கிருந்த ஊழியர்கள் பரபரப்பாகிவிட்டார்கள்.. ஆனால் கிச்சனில் நுழைந்த பிரியா, அந்த வளாகம் எப்படி இருக்கிறது? பாத்திரங்கள் சுத்தமாக இருக்கின்றனவா? சமையல் செய்யும் முறை எப்படி? உணவு எப்படி தயாரிக்கப்படுகிறது? என்றெல்லாம் நேரடியாகவே பார்த்தார்.

கிச்சடி ஸ்பூன்
ஊழியர்கள் எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்பதை கேட்டு, அவர்களின் வருகை மற்றும் செயல்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.... பின்னர் அருகிலுள்ள பள்ளிக்கு சிற்றுண்டி கொண்டு செல்லப்பட்டு மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது... அப்போது, அந்த பள்ளிக்கே சென்ற பிரியா, மாணவர்களிடம் சிற்றுண்டி பற்றி கேள்வி எழுப்பினார். டிபன் நல்லா இருக்கா? சரியான நேரத்துக்கு டிபன் கிடைக்கிறதா? ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா? ஏதாவது குறைகள் இருக்கா? என்று மாணவர்களின் பதிலை தெரிந்து கொண்டார். பிறகு, திடீரென ஒரு ஸ்பூனில் கிச்சடியை எடுத்து டேஸ்ட் செய்து பார்த்தார்..

பதார்த்தம் - யதார்த்தம்
பின்னர், அங்கிருந்த ஊழியர்களிடம் காலை டிபனில் மேலும் சில பதார்த்தங்களை சேர்த்தால் நல்லா இருக்குமே.. சட்னி அல்லது சாம்பார் இப்படி எதாவது சேர்த்தால் இன்னும் நல்லா இருக்கும். அதை செய்வதற்கு வழி இருக்கிறதா? என்று பாருங்கள்... மாணவர்களுக்கு எப்போதுமே ஆரோக்கியமான முறையில் சமையல் செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இனி வரும் நாட்களில் காலை டிபனில் சில பதார்த்தங்கள் சேர்க்கப்படும் என்று மேயர் பிரியா உறுதி தந்துள்ளது, பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ்












Click it and Unblock the Notifications