"சர்ப்ரைஸ்".. விசைத்தறி நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்வு.. தமிழக அரசு அதிரடி

விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்... இதேபோல கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பருத்தி பஞ்சிலிருந்து, கொட்டைகளை எடுத்து பஞ்சாக்கி, பிறகு ஸ்பின்னிங் மில்லில் தந்து அதை நூலாக்கி, அந்த மூலப்பொருளை ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்களுக்கு தந்து வருகிறார்கள்.

இப்படி தரப்படும் நூலைத்தரமிக்க, நேர்த்தியான வெண்மை அல்லது சாம்பல் வண்ணத் துணியாக நெய்வது கோவை, திருப்பூர் விசைத் தறியாளர்களின் பணியாக உள்ளது.

 மான்செஸ்டர்

மான்செஸ்டர்

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுவது கோயம்புத்தூர் மாநகரம். தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமாக கருதப்படும் கோயம்புத்தூர், இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது.. ஜவுளித் தொழிலுக்குப் பெயர்போன கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிக அளவிலான துணிகள் விசைத்தறிகள் மூலம் நெய்யப்படுகின்றன. குறிப்பாக கோவை அவினாசி, மங்கலம், சோமனூர், தெக்கலூர், காரணம்பேட்டை, திருப்பூர் பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விசைத்தறித் தொழிலே அங்கு வசிப்போரின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில்தான், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில் 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதேபோல கைத்தறி, விசைத்தறி உற்பத்தியாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1 முதல் அமலாகி உள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்... மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

 கைத்தறிவு நெசவு

கைத்தறிவு நெசவு

மேலும், விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரம் 700 யூனிட்டாக இருந்த நிலையில், 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதுபோன்று கைத்தறி நெசவுக்கு 200 யூனிட் இலவசம் என்பது 300 யூனிட்டாக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 1-ந்தேதி முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது. முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த அறிவிப்பை பற்றி கூறியிருந்தார்.

 வாக்குறுதி

வாக்குறுதி

"திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஸ்டாலின் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 750 யூனிட் இலவச மின்சாரத்தை கடந்த 1ம் தேதி முதல் 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் 1000 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு வெறும் 70 பைசா அளவே உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினமான ரூ.53.62 கோடி நிதியை சேர்த்து மொத்தம் ரூ.484.52 கோடியை மின்சாரத்துறைக்கு மானியமாக அரசு வழங்கும்.

 ஹேப்பி அறிவிப்பு

ஹேப்பி அறிவிப்பு

அதேபோன்று கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 200 யூனிட் இலவச மின்சாரத்தை 300 யூனிட்டாக உயர்த்தி கடந்த 1ம் தேதி முதல் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஏற்படும் கூடுதல் செலவினம் ரூ.8.41 கோடி நிதியை அரசு மானியமாக மின்சாரத் துறைக்கு செலுத்தும். மாநிலத்தில், விசைத்தறிக்கு 3 நிலையிலான மின்கட்டணம் ஒரே நிலையாக மாற்றம் செய்து, ஒரு யூனிட்டுக்கு 70 பைசா மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. 2021 தேர்தல் வாக்குறுதிப்படி 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தப்படுகிறது. ஏற்கெனவே ஒரு மாதத்துக்கு முன்பே அறிவிக்க வேண்டியது. ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக அரசாணை ஒத்திவைக்கப்பட்டது. இப்போது முதல்வர் பிறந்த நாளையொட்டி மார்ச் 1ம் தேதி முன் தேதியிட்டு அறிவிக்கப்படுகிறது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+