விஜயகாந்த்தை.. ஏக்கத்துடன் தேடுகிறது சென்னை சாலிகிராமம் ரோடு.. அந்த விபூதி எங்கே? கசியுதே நினைவு
சென்னை: தேர்தலின்போதும் குடும்பத்துடன் வந்து வாக்களித்து செல்வார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.. இந்த முறை கேப்டன் இல்லாத சாலிகிராமம் வாக்குச்சாவடியை கண்டது தேமுதிகவினருக்கு சோகத்தை தந்துவிட்டது.
எப்போதுமே தேர்தலின்போது சிங்கம்போல் கர்ஜித்து பிரச்சாரம் செய்வார் விஜயகாந்த் .. அதேபோல சாலிகிராமம் வாக்குச்சாவடிக்கு, ஒவ்வொருமுறையும் தன்னுடைய மொத்த குடும்பத்துடன்தான் கிளம்பி வந்து ஓட்டுப்போட்டுவிட்டு செல்வார்.

2019ம் ஆண்டு தேர்தலின்போது வாக்கு செலுத்த வந்திருந்தார் விஜயகாந்த்.. அதே வெள்ளை & வேட்டி, நெற்றியில் விபூதி, கூலிங்கிளாஸ் சகிதம் கிளம்பி வந்திருந்தார். அப்போதே தளர்ந்து காணப்பட்டார்.. அவரை ஒரு கையால் தாங்கி பிடித்தபடி குடும்பத்தினர் அழைத்து வந்திருந்தனர். பூத்துக்கு உள்ளே போனதும் பக்கத்தில் இருந்தவர் கூலிங் கிளாஸை எடுத்து தரவும் அதை விஜயகாந்த் வாங்கி மாட்டிகொண்டார்..
வாக்குப்பதிவு: ஆனால், எந்த சின்னத்திற்கு ஓட்டுப் போடுவது என்று தெரியாமல் குழம்பிப்போய், பக்கத்தில் நின்றிருந்த மனைவியைப் பார்த்தார். இதையடுத்து உள்ளே போன பிரேமலதா விஜயகாந்த், எந்த சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்பதை விஜயகாந்த்துக்கு சுட்டிக் காட்டினார்.. அதன்பிறகு தன்னுடைய வாக்கினை பதிவு செய்தார். இது திடீர் சலசலப்பை அப்போது ஏற்படுத்தியிருந்தது.
எல்லாரும் ஓட்டு போட்டுவிட்டு "மை" வைத்த விரலை காட்டுவார்கள் என்றால், விஜயகாந்த்தோ தனது கட்டை விரலை காட்டி பெருமிதப்பட்டார். அதே கூலிங் கிளாஸோடு வெளியே அழைத்து வரப்பட்டார் விஜயகாந்த், குடும்பத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
விஜயகாந்த்: ஆனால், கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, ஓட்டுப்போடுவதற்கு விஜயகாந்த் வருவார் என்பதால், தேமுதிகவினரும், ரசிகர்களும் காலையிலிருந்தே காத்திருந்தனர்.. ஆனால் விஜயகாநத் வரவில்லை.. மகன்கள் மட்டும் 2 பேருமே வந்திருந்தார்கள். "அப்பா எங்கே? ஓட்டுப்போட கேப்டன் வருவாரா? என்று செய்தியாளர்களும் கேட்டார்கள்..
"தலைவர் சாயங்காலம் வந்து ஓட்டுபோடுவார்" என்று விஜயபிரபாகரன் சொல்லிவிட்டு போனார்.. அதனால் சாயங்காலம் எப்படியாவது விஜயகாந்த்தை பார்த்துவிட வேண்டும் என்று தொண்டர்கள் காத்திருந்தனர்.. கடைசிவரை விஜயகாந்த் ஓட்டுப்போட வரவேயில்லை. அந்த நேரத்தில் சென்னையில் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை என்று கருதப்பட்டது.
பிரேமலதா: இதோ... இந்த முறை விஜயகாந்த் இல்லாத தேர்தலை தமிழகம் சந்தித்துள்ளது.. இன்று வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.. தேமுதிக தலைவர் பிரேமலதா தன்னுடைய மகன்கள் 2 பேருடன் சாலிகிராம் வாக்குச்சாவடிக்கு வந்திருந்தார்..
பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 பேருமே தங்களது வாக்குகளை செலுத்தினார்கள்.. இதைத் தொடர்ந்து விருதுநகர் தொகுதி வேட்பாளராக களமிறங்கி இருக்கும் விஜயபிரபாகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்பா இல்லை: அப்போது, "ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு, அப்பா என்னுடைய கையை பிடிச்சிட்டு அழைத்து வருவார்.. எப்படி வாக்களிக்கணும் என்று எனக்கு சொல்லி தருவார்.. முதல் முறையாக அப்பா இல்லாமல் வாக்களிக்க வந்துள்ளேன். நான் வேட்பாளராக களமிறங்கி உள்ள தேர்தலில் அப்பா இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.
விருதுநகரில் என்னுடைய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது" என்றார்.
கோளாறு: அவரை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், "ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன.. அந்த இடங்களில் மட்டும் வாக்களிக்க கூடுதல் நேரத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துவிட்டு சென்றார்.
விஜயகாந்த் இல்லாமல், அவரது குடும்பத்தினர் மட்டும் வாக்குப்பதிவு செலுத்தியதுடன், தங்களது பழைய நினைவுகளையும் பகிர்ந்துவிட்டு சென்றது, அங்கிருந்த தேமுதிக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை உண்டுபண்ணி வருகிறது.. இந்த முறை ஓட்டுப்போட, விஜயகாந்த்தை காணாமல் சாலிகிராமம் ரோடும் தவித்து கொண்டிருக்கிறது!!!
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
சென்னையில் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ்.. கட்டணம், பாதுகாப்பு எப்படி.. அதிகாரி விளக்கம் -
தமிழகத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் தேர்தல் எது? சப்தமில்லாமல் சாதித்த ஜெயலலிதா! -
சென்னையில் ஓஎம்ஆர், தி நகரில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி.. தேடி வந்து விதிக்கப்படும் அபராதம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!












Click it and Unblock the Notifications