"மிஸ்டர் க்ளீன்".. என்னது விஆர்எஸ்ஸா.. ஐஏஎஸ் இறையன்புவுக்கு இந்த பதவியா.. சூப்பர்.. குஷியில் கோட்டை?
இறையன்பு ஐஏஎஸ் விரைவில் புதிய பதவி ஒன்றில் அமர்த்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன
சென்னை: தமிழகத்தின் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஒருபக்கம் ஏற்பட்டுவரும் நிலையில், இறையன்புக்கு தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 வருடங்கள் கழித்து திமுக ஆட்சிப்பொறுப்பை ஏற்றதுமே, சில விஷயங்களில் முதல்வர் ஸ்டாலின் கறாரான முடிவுகளை எடுத்திருந்தார்..
அதில், ஊழல் இல்லாத நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்பது முக்கிய நோக்கமாக இருந்தது.. இதற்காகவே, அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தேர்வு செய்தார்...

"மிஸ்டர்கிளீன்"
"மிஸ்டர்கிளீன்" என்று சொல்லப்படும் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பையும் வழங்கினார்.. அந்தவகையில், மாநில அரசின் நிர்வாகத்திற்கே தலைவராக இருக்கக்கூடிய பதவி தலைமை செயலாளர் பதவிக்காக யாரை நியமிப்பது? இதற்கு சரியான நபர் தேவை என்பதால், நிறையவே மெனக்கெட்டார்.. இறுதியில், வெ.இறையன்புவுக்கு அந்த பதவியை வழங்கினார்.. மறைந்த முதல்வர் கருணாநிதியின் தனி செயலாளராக இருந்தவர்... கலைஞர் இருக்கும்போதே, தன்னுடைய திறமையை நிரூபித்தவர்..

இறையன்பு போஸ்டிங்
அப்போதே ஸ்டாலினின் கவனத்தையும் ஈர்த்தவர்.. திமுக ஆட்சி தற்போது அமைந்ததுமே தலைமை செயலாளர் பதவியை வழங்கினார் ஸ்டாலின்.. முதல்வரின் நம்பிக்கையையும், எண்ணத்தையும் செயல்படுத்தும் விதமாகவே இறையன்புவின் செயல்பாடுகள் சிறப்பான முறையில் அமைந்துவருகின்றன. நேர்மையானவர், எளிமையானவர், எழுத்தாளர், பேச்சாளர் என்று அனைவராலும் பாராட்டப்படக்கூடிய இறையன்பு விரைவில் ஓய்வு பெற இருக்கிறார்.. இவருக்கு வருகிற ஜுன் மாதம் வரை பதவிக்காலம் உள்ளது.

இறையன்பு IAS
இந்த தகவல் வெளியானதுமே, அடுத்த தலைமை செயலாளர் என்ற யூகங்களும் அனுமானங்களும் கிளம்பி வருகின்றன.. கவர்னரால் நியமிக்கப்படும் இந்த பதவி 3 வருடங்கள் என்பதால், இறையன்பு தலைமை செயலாளர் பதவியில் இருந்து மாற்றப்பட்டால் புதிய தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சிவ்தாஸ் மீனா ஹன்ஸ்ராஜ் வர்மா, எஸ்கே பிரபாகர் அல்லது முருகானந்தம் ஆகியோரில் ஒருவர் தலைமை செயலாளராக அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள்.. எனினம், இதில் யார் பெயரை ஸ்டாலின் டிக் அடிக்க போகிறார் என்ற ஆர்வங்கள் கூடிவருகின்றன.

கோட்டை குஷி
அதேசமயம், நேர்மை மிகுந்த இறையன்புவை அவ்வளவு லேசில் திமுக அரசு விட்டுவிடாது என்கிறார்கள்.. வரும்28ம் தேதியுடன் தலைமை செயலாளர் பதவியில் இருந்து இறையன்பு விருப்ப ஓய்வுபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்பின் மார்ச் 1ம் தேதியில் இருந்து தலைமை செயலாளர் பதவிக்கு நிகரான அதிகாரம் கொண்ட தமிழ்நாடு தலைமை தகவல் ஆணையர் பதவி இறையன்புக்கு வழங்கப்பட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.. இது கோட்டை வட்டாரத்தில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

ஓடும் நதியின் ஓசை
கல்வி மீது ஈர்ப்பு கொண்டவர் வெ.இறையன்பு.. 3 முதுகலைபட்டங்களும், ஆங்கில இலக்கியம், உளவியல், நிர்வாகத்தில் 3 பிஎச்.டிபட்டங்களும் பெற்றவர்... 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார்.. அனைத்துதரப்பினரிடமும் நெருங்கிப் பழகும் குணம் கொண்டவர் என்பது இவரது ஆகச்சிறந்த சிறப்பு.. 4 நாட்களுக்கு முன்பு, மதுரை எம்பி வெங்கடேசன், மதுரை தமுஎச கூட்டத்தில் இறையன்பு பற்றி ஒரு நிகழ்வை பகிர்ந்து கொண்டிருந்தார்.

தலையில் பெட்டி
அதில், "வேலூர் மாவட்டத்தில் ஆய்வு பணிகளுக்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் ரயில் மூலம் அங்கு சென்றார்... அதே ரயிலில், தமிழக தலைமை செயலர் வெ.இறையன்பு பயணித்தார்.. ரயில்வே ஸ்டேஷனில் இறங்கியபோது தன்னுடைய உடமைகள் அடங்கிய 2 பெட்டிகளையும் அவரே சுமந்து கொண்டு சென்றார். இது சம்பந்தமான போட்டோக்கள் பத்திரிகைகள், சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டது... எவ்வளவு உயரம், எவ்வளவு அதிகாரத்தில் இருந்தாலும் அடிப்படையில் மனிதன் தானே என்ற கருத்து அது? இந்த சந்தோஷத்துடன்தான் நான் டெல்லி சென்றேன்.. ஆனால், அங்கு நான் பார்த்த காட்சி இறையன்பு மீதிருந்த வியப்பை உடைத்தே விட்டது.

தோளில் மனுஷன்
காரணம், நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஒன்றரை மணி நேரம், மாநிலங்களவையில் ஒரு மணி நேரம், உலகின் 3 வது பெரும்பணக்காரரை ஒரு மனுஷன் தனது தோளில் தூக்கி கொண்டு நின்றார்... நிற்கிறார்... உலகின் மூன்றாவது பெரும் பணக்காரரை இரண்டரை மணி நேரம் ஒரு மனிதன் தனது தோளில் தூக்கி போட்டு பேசுகிறார்... தோளில் இருந்தது அதானி.. அவரை தூக்கி வைத்தது மோடி" என்றார் வெங்கடேசன்.. மதுரை எம்பியின் இந்த பேச்சு இணையத்திலும் வைரலானது.. அந்த அளவுக்கு இறையன்புவின் "எளிமை" பலரையும் ஈர்த்து வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.!!












Click it and Unblock the Notifications