"க்ளுக்".. சட்டென வெட்கப்பட்ட மேயர் பிரியா.. மேடையில் கேட்ட அந்த சத்தம்.. டக்கென திரும்பிய "தலை"கள்
சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் மேயர் பிரியா பேசியது ஷேர் ஆகிறது
சென்னை: சென்னை மேயர் பிரியா ஒரு உறுதியை தந்துள்ளார்.. இந்த அறிவிப்பானது பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
பெண் மேயர்களில் இந்த அளவுக்கு பரபரப்பாக பேசப்பட்டவர் வேறு யாரும் இருக்க முடியாது.. மேயர் பிரியா எந்த ஒரு பேட்டியை தந்தாலும், அல்லது செயல்பாட்டில் இறங்கினாலும், அது உடனே மீடியாவில் பேசப்பட்டு விடுகிறது.
சில வருடங்களுக்கு முன்பு, சேலம் மாவட்ட கலெக்டராக ரோகிணி நியமனம் செய்யப்பட்டிருந்தார்.. வெகு குறுகிய நாட்களிலேயே பொதுமக்களால் பேசப்பட்டார்.

ரோகிணி
சேலம் மாவட்ட மக்களின் அன்பையும் பெற்றார் ரோகிணி. "சின்ன வயசு பெண்.. பம்பரம் மாதிரி சுழன்று சுழன்று வேலை பார்க்கிறாரே.. மக்கள் கோரிக்கைகளை உட்கார்ந்து பொறுமையுடன் கவனிக்கிறாரே" என்று மாவட்ட மக்களே ஆச்சரியப்பட்டு சொன்னார்கள்.. அதுபோலவே, பிரியாவும் லைம்லைட்டிலேயே உள்ளது, சென்னைவாசிகளை கவர்ந்து வருகிறது.. ஒருபக்கம் சலசலப்புகளும், மறுபக்கம் ரசிகர்களும் மேயர் பிரியாவுக்கு பெருகி கொண்டிருக்கின்றன.

லைம்லைட்
சில தினங்களுக்கு முன்பு, முதன்முறையாக ஒரு சேனலுக்கு பிரியா பேட்டி தந்திருந்தார்.. தினம் தினம் விமர்சனங்கள் வருகிறதே? எப்படி அதை எதிர்கொள்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது.. அதற்கு பிரியா, "சின்னப்பெண்ணாக முதலில் இங்கு என்னை யாரும் நடத்தவில்லை.. மேயர் என்ற பதவிக்கு தரவேண்டிய மரியாதையை மூத்த தலைவர்கள், கண்டிப்பாக தருகிறார்கள்... "வா..ம்மா, போ..ம்மா" என்று சொல்வதெல்லாம் சாதாரணமாக எல்லாரும் பேசக்கூடிய இயல்பான விஷயம்தானே.. ஒரு மகளிடம் பேசுவது போலவே பேசுகிறார்கள்.. உரிமையில் பேசுவதால், தவறாக நான் நினைக்கவில்லை, என்னை அது பாதிக்கவும் இல்லை.. நிறைய விமர்சனங்கள் என்மீது வந்து கொண்டுதான் இருக்கிறது.. அதில் ஒருசில விமர்சனங்கள் என்னை காயப்படுத்தவே செய்கிறது" என்று யதார்த்தமாக கூறியிருந்தார்.

கிச்சனுக்குள்ளேயே
சென்னையில் கடந்த மாதம் மழை வந்தபோது, நள்ளிரவு என்றும் பாராமல் ரெயின்கோட்டுடன் பிரியாவின் ஆய்வு பலரையும் வியக்க வைத்தது.. நேற்றுமுன்தினம்கூட, ராயபுரம் பகுதியில் உள்ள சமையல் கூடத்திற்கு காலையில் 6 மணிக்கெல்லாம் சென்று ஆய்வு நடத்தியிருந்தார்.. இனி வரும் நாட்களில் காலை டிபனில் சில பதார்த்தங்கள் சேர்க்கப்படும் என்றும் அப்போது பிரியா உறுதி தந்திருந்தார்.. இப்போதும் பிரியாவின் வீடியோ ஒன்று இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.

ஹேப்பி கிறிஸ்துமஸ்
சென்னை மண்ணடி, பிரகாசம் சாலையில் அமைந்துள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு திமுக சார்பில் 2,000 பேருக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் உதயநிதி, பொது மக்களுக்கு புத்தாடைகள், உணவு பொருட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்கினார்.

கிறிஸ்தவன்
இதில் அமைச்சர் உதயநிதி பேசும்போது, சிலருக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துள்ளது.. திராவிட மாடல் ஆட்சி என்றால் என்ன என்று கேட்கிறார்கள். இதற்கு நான் பதில் தருகிறேன். இந்து அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இப்போது அங்கு அல்லேலூயா என்று கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்வது தான் திராவிட மாடல் ஆட்சியாகும்.. அவர் எப்போதுமே மாலையும் கழுத்துமாகத் தான் இருப்பார். அதே நேரம் கிறிஸ்தவ நிகழ்ச்சிக்கும் செல்வார். இஸ்லாமிய நிகழ்ச்சிகளுக்கும் செல்வார். இதற்குப் பெயர் தான் சமூக நிதி ஆட்சி. இன்னுமே சொல்லப்போனால், நானும் ஒரு கிறிஸ்துவன் தான். கிறிஸ்துவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். நான் இஸ்லாமியரும் கூட. நான் காதலித்து மணந்ததும் கிறிஸ்துவ மத்தை சேர்ந்தவர்தான். எனவே அந்த உரிமையில் இங்கே வந்து பேசுகிறேன்" என்று பேசியிருந்தார்.

2000 பேர் மகிழ்ச்சி
விழாவில் மேயர் பிரியா பேசும்போது, "அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியை நம்முடைய மாண்புமிகு முதல்வர் நடத்தி வருகிறார்.. அந்த வகையில், இன்று கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாடும் வகையில், நம்முடைய மாண்புமிகு இந்து சமய அறியலையத்துறை அமைச்சர் அண்ணன் அவர்கள், இங்கு 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.. கிறிஸ்துவ பிறப்பு என்றால் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது.. அந்த வகையில், இன்று நலத்திட்ட உதவிகளை வாங்கி 2000 குடும்பங்களுக்கும் நம்முடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வோம்" என்றார்.

குபீர் சிரிப்பு
முன்னதாக, மேடையில் பேச வந்தபோது பிரியா மைக்கை எடுத்து, 'விளையாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் அவர்களுக்கும்" என்று சொன்னதுமே, கைதட்டல்கள் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டன.. இதனால், ஒருசெகண்ட் எதுவுமே புரியாமல் பிரியா விழித்தார்.. மேடையில் இருந்தவர்களும், அரங்கத்தில் இருந்தவர்களும் மறுபடி கைகளை தட்டவும், அதைபார்த்து, வழக்கமான வெட்கத்துடன் குபீர் என சிரித்துவிட்டார் பிரியா.. பிறகு, அதே வெட்கத்துடன் மேற்கண்ட பேச்சையும் பேசி முடித்து, அனைவருக்கும் தன்னுடைய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார். இந்த வீடியோதான் இணையத்தில் ஷேர் ஆகி பலரையும் ஈர்த்து வருகிறது என்றாலும், "ஒரு மேயர் இப்படித்தான் வெட்கப்படுவதா?" என்றும் சிலர் கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார்கள்.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்!












Click it and Unblock the Notifications