நெஞ்சே நிறையுதே..சென்னை ஐடி செக்டாரில் வேலை பார்க்குறீங்களா? ஊழியர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ்..அசத்தல்
சென்னை: சென்னை ஓஎம்ஆர் சாலையில் அசத்தல் மாற்றங்கள் நடந்து வருகின்றன. இங்கே வேலை செய்யும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
இந்த சாலையை 6 வழி சாலையாக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ராஜிவ் காந்தி சாலையில் உள்ள பழைய மின் விளக்குகள் நீக்கப்பட்டு புதிய விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. இதற்காக அங்கே இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.

மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ( ecr) மற்றும் பழைய மகாபலிபுரம் சாலை (omr) ஆகிய சாலைகளை இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் பல காலமாக நிலுவையில் இருந்த நிலையில் ஒருவழியாக இதற்கு தற்போது டெண்டர் விடப்பட்டு உள்ளது.
மொத்தமாக 1000 கோடி செலவில் உருவாக உள்ள இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் மொத்தமாக சென்னையே அடியோடு மாறும். ஓஎம்ஆர், ஈசிஆரில் தற்போது உள்ள ஒன்றரை மணி நேர பயணம் அதிகபட்சம் 20 நிமிடமாக குறையும் என்கிறார்கள்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக கிழக்கு கடற்கரை சாலையை (ECR) சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டுடன் (CPRR) இணைக்கும் பூஞ்சேரியில் ட்ரம்பெட் இன்டர்சேஞ்ச் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். 1.8 கிமீ நீளம், ₹40 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட இணைப்பு வசதி, ECR இல் போக்குவரத்தை குறைக்கவும், நகரத்திற்குள் செல்லாமல் எண்ணூருக்கு வசதியாக பயணிக்கவும் அனுமதிக்கும்.
இந்த சாலைக்கு CPRR என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த CPRR முடிந்ததும், பல இடங்களுக்கு இணைப்பு அதிகரிக்கும். எண்ணூரில் இருந்து ஒருவர் புதுச்சேரிக்கு சாலை மார்க்கமாக ஐந்தரை மணி நேரத்திற்குப் பதிலாக மூன்றரை மணி நேரத்தில் செல்ல முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள். இது நேரத்தையும், எரிபொருளையும் மிச்சப்படுத்தவும், வாகனங்களின் தேய்மானத்தைக் குறைக்கவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ன்னையில் உள்ள ஓஆர்ஆர் சாலை அதாவது அவுட்டர் ரிங் ரோடு சாலையும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) டெல்லியைச் சேர்ந்த ருத்ராபிஷேக் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு 62 கிமீ வெளிவட்டச் சாலையின் (ஓஆர்ஆர்) இருபுறமும் மேம்படுத்துவதற்கான வரைபடத்தைத் தயாரிக்க ரூ.2.9 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
அரசு ஆதாரங்களின்படி, ஓஆர்ஆர் எனபப்டும் வெளிவட்டச் சாலையானது நிலையான வேகமான உயர் வளர்ச்சி பாதையாக அரசாங்கத்தால் பார்க்கப்படுகிறதாம். அதனால் இங்கே வேகமாக முன்னேற்ற பணிகளை மேற்கொள்ள உள்ளனர். சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் உயர்ந்த கட்டிடங்கள் மூலம் இந்த பகுதிகள் வணிக மற்றும் தொழில்துறை சார்ந்த முதலீடுகளை ஈர்க்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்ஹெச்ஏஐ) பணியை மேற்கொள்ள போதுமான நிலம் உள்ளது என்றும் கூறி உள்ளதால் பிரச்சனை இன்றி விரைவில் பணிகள் இங்கே தொடங்கும். இதன் மூலம் இசிஆர் கட்டம் கட்டமாக விரிவுபடுத்தப்படும். மரக்காணம் முதல் புதுச்சேரி வரை மூன்றாவது பேக்கேஜுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. முகையூர் முதல் மரக்காணம் வரையிலான பகுதிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி முடியும் தருவாயில் உள்ளது.
இந்த பணிகள் முடிந்ததும் இசிஆர் விரிவுபடுத்தும் பணிகள் முடியும். 132 கிமீ நீளம், ஆறு வழி அகலம் கொண்ட CPRR ஆனது, சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சித்தூர்-தச்சூர் கூட் சாலையில் ஆந்திராவை அடைய வாகன ஓட்டிகளுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications