சம்பளத்தை ஏத்துங்க.. ஸ்விக்கி ஊழியர்கள் திடீர் ஸ்டிரைக்.. காய்ந்து போன வயிறுகள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னையில் ஸ்விக்கி ஊழியர்கள் திடீர் போராட்டம்- வீடியோ

    சென்னை: ஊதிய உயர்வு கேட்டு ஸ்விக்கியில் டெலிவரி ஆட்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் உணவு டெலிவரி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    90 களில் எல்லாம் அப்பா போய் ஓட்டல்ல சாப்பாடு வாங்கிட்டு வருவார். இன்னும் சிலர் சாம்பார் மட்டுமாவது வாங்கிக் கொண்டு வருவர். மழையோ காற்றோ வந்தால் அதுவும் கட். இதையடுத்து 2005களில் சாப்பாடு வாங்கி கொண்டு வருவது நிறுத்தப்பட்டு குடும்பத்தோடு ஹோட்டலுக்கு போய் விரும்பும் உணவை சுவைத்து வந்தோம்.

    இதனால் கார் இல்லாதவர்களும் அதிக அளவில் குடும்ப உறுப்பினர்களை கொண்டவர்களும், கூட்டு குடும்பத்தினரும் கடும் அவதிப்பட்டு வந்தனர். பின்னர் சம்பந்தப்பட்ட ஹோட்டல்களுக்கு போன் செய்துஉணவுகளை வீட்டுக்கே வரவழைத்தோம்.

    செயலிகள்

    செயலிகள்

    ஆனால் தற்போதோ ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து வருகிறோம். இதற்காக ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களின் செயலிகளை செல்போனில் டவுன்லோடு செய்துவிட்டால் போதும்.

    சமையலறை

    சமையலறை

    நமக்கு தேவையான நேரத்தில் நாம் இருக்கும் நகரத்தில் எந்தெந்த ஹோட்டல்கள் உள்ளன, அவை எந்த நேரம் வரை திறந்திருக்கும், சைவம்- அசைவம் எங்கே கிடைக்கும் உள்ளிட்டவையுடன் நாம் ஆர்டர் செய்யும் உணவு சமையலறைக்கு சென்றுவிட்டதா?

    இணைந்து

    இணைந்து

    டெலிவரி பாய் வண்டியை எடுத்துக் கொண்டு நம் வீடு நோக்கி எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறார். இப்படியான அனைத்து தகவல்களையும் நாம் தெரிந்து கொள்கிறோம். இந்தியாவில் மொத்தம் 45 நகரங்களில் 45,000 உணவகங்களுடன் ஸ்விக்கி இணைந்து செயல்படுகிறது.

    போராட்டம்

    போராட்டம்

    உணவு டெலிவரி செய்ய மட்டுமே ஒரு லட்சம் பேர் உள்ளனர். இந்நிலையில் ஸ்விக்கியில் வேலை செய்யும் டெலிவரி ஆட்கள் கடந்த இரு தினங்களாக திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதிய உயர்வு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கோரிக்கை என்னென்ன

    கோரிக்கை என்னென்ன

    ஸ்விக்கியில் பணியாற்றுவோர் தாங்கள் எடுக்கும் ஆர்டர்களுக்கு தகுந்தமாதிரியே ஊதியம் வழங்கப்படுகிறது. இதனால் ஊதியத்தை அதிகரிக்க வேண்டும். ஊக்கத் தொகையை வெளிப்படையாக மாற்றியமைக்க வேண்டும், இரவு நேரங்களில் போலீஸ் கெடுபிடிகள் குறித்து ஸ்விக்கி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் உணவு டெலிவரி செய்ய ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+