Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுவிட்சர்லாந்து டாவோஸ் மாநாடு.. அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு எஸ்பி வேலுமணி எழுப்பிய முக்கியமான கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டுத் தொழில் முதலீடுகள் மூலம் தமிழகத்தில் ரூ.10.07 லட்சம் கோடி முதலீடு என்று தொழில்துறை அமைச்சர் குறிப்பிடுவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. பிற மாநிலங்களைப்போல சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பதற்கு பதில் இல்லை என்று தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "கடந்த பல ஆண்டுகளாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாடு இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. 1960-ம் ஆண்டு முதலே தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ் நாட்டின் பங்களிப்பு சில ஆண்டுகள் தவிர, மற்ற ஆண்டுகளில் 8 முதல் 9 சதவீதமாகத்தான் இருந்து வருகிறது.

sp velumani switzerland tamil nadu

ஆனால், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டை 2-ம் இடத்திற்கு தி.மு.க.வின் ஸ்டாலின் மாடல் அரசுதான் கொண்டு வந்ததுபோல் கூறுகிறார். 1960-61-ல் 8.7 சதவீதமாக இருந்த பங்களிப்பை, 2023-24-ல் 8.9 சதவீதமாக உயர்த்தியது தி.மு.க.வின் பெரும் சாதனை என்று அவர் கூறுகிறார்.

அமைச்சர் கூறியபடி, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையில், இந்திய உற்பத்தி மதிப்பில், தமிழ் நாட்டின் பங்களிப்பு 1960-61-ல் 8.7 சதவீதமாகவும், 1970-71-ல் 7.3 ஆகவும், 1980-81-ல் 6.9 ஆகவும், 1990-91-ல் 7.1 ஆகவும், 2000-01-ல் 8.3 ஆகவும், 2010-11-ல் 8.4 ஆகவும், 2020-21-ல் 8.9 ஆகவும், 2023-24-ல் 8.9 சதவீதமாகவும் உள்ளது.

மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைப்படி 2016-17-ல் 8.46 ஆகவும், 2017-18-ல் 8.57 ஆகவும், 2018-19-ல் 8.62 ஆகவும், 2019-20-ல் 8.68 ஆகவும், 2020-21-ல் 8.90 ஆகவும், 2021-22-ல் 8.72 ஆகவும், 2022-23-ல் 8.81 ஆகவும், 2023-24-ல் 8.90 சதவீதமாகவும் உள்ளது. 2023-24-ம் ஆண்டுக்கான, மேற்குறிப்பிட்டுள்ள விவரங்கள்கூட, முதல்கட்ட மதிப்பீடுதான். இறுதி மதிப்பீட்டில் இந்த புள்ளி விவரம்கூட மாறலாம்.

எனவே, 2020-21-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த, அதே 8.90 சதவீத அளவிலேயே இந்தப் பங்களிப்பு உள்ளது. நிலைமை இப்படி இருக்க, தி.மு.க. ஆட்சியில், என்ன சாதனை செய்துவிட்டதாக தொழில் துறை அமைச்சர் கூறுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

மேலும், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டுத் தொழில் முதலீடுகள் மூலம் தமிழகத்தில் ரூ.10.07 லட்சம் கோடி முதலீடு என்று தொழில்துறை அமைச்சர் குறிப்பிடுவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. பிற மாநிலங்களைப்போல சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடந்த மாநாட்டில் தமிழ்நாடு ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பதற்கு பதில் இல்லை.

19.17 லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் 31.53 லட்சம் பேருக்கு மொத்த வேலை வாய்ப்பு என்ற அவரது கூற்று மீண்டும் ஒரு கற்பனையான விவரம்தான்.

உண்மையான முதலீடு எவ்வளவு என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விக்கு நேரடி பதில் இல்லை. மேலும், தொழிற்சாலைகள் வாரியாக விவரங்கள் தரப்படவுமில்லை. தமிழகத்தில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு உருவாக்கத்தின் தாக்கம் உண்மையில் இதுவரை தென்படவில்லை. மொத்தத்தில் இந்தப் புள்ளி விவரம் ஒரு ஏட்டு சுரைக்காய்தான்.

கடந்த நான்கு ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு என்றும், தற்போது டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை போடப்பட்டது என்றும், அதில் இதுவரை உண்மையாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, பிரச்சினையை திசை திருப்பாமல் நேரடியான, சரியான புள்ளி விவரங்களை தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதில் அளித்தால் நல்லது" இவ்வாறு எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+