சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்பார்க் இல்லைன்னு தோனி ஓரம்கட்டினாரே.. அவர்தான் இவர்.. பைனலில் தமிழ்நாடு வீரர் ஆடிய ருத்ரதாண்டவம்!

Google Oneindia Tamil News

சென்னை: 2021 சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி மிக சிறப்பாக ஆடை உள்ளது. மூன்றாவது முறையாக இன்று தமிழ்நாடு அணி கோப்பையை வென்றது.

Recommended Video

    Syed Mushtaq Ali Trophyஐ வென்றது Tamilnadu! Shahrukhanன் Last Ball Six | TN vs KAR | OneIndia Tamil

    சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரின் முத்த தொடரை தமிழ்நாடுதான் வென்றது. அதன்பின் கடந்த வருடம் தினேஷ் கார்த்திக் கேப்டன்சிக்கு கீழ் தமிழ்நாடு கோப்பையை வென்றது.

    ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு! ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் அந்தர் பல்டி அடித்தது ஜெகன் மோகன் ரெட்டி அரசு!

    பின்னர் மீண்டும் இந்த முறை விஜய் சங்கர் கேப்டன்சிக்கு கீழ் தமிழ்நாடு கோப்பையை வென்றுள்ளது. இன்று கர்நாடகாவிற்கு எதிராக நடந்த போட்டியில் அதிரடியாக ஆடி திரில் மேட்சில் தமிழ்நாடு கோப்பையை வென்றது.

    கோப்பை

    கோப்பை

    இன்று முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி 151-7 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய தமிழ்நாடு அணி இடையில் சறுக்கிய நிலையில் கடைசி ஓவர் வரை ஆட்டம் திரில்லாக சென்றது. கடைசி ஓவரின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஷாருக்கான் சிக்ஸ் அடித்து தமிழ்நாடு அணியை வெற்றிபெற வைத்தார்.

    எப்படி

    எப்படி

    இந்த போட்டியில் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு ஷாருக்கான் மட்டும் காரணம் கிடையாது. இன்னொரு இளம் வீரர் சாய் கிஷோர். இடது கை ஆப் ஸ்பின் பவுலரான இவர் கடந்த மூன்று வருடமாகவே லோக்கல் போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். 2018-19 ராஞ்சி கோப்பை தொடரில் 6 போட்டிகளில் இவர் 22 விக்கெட் எடுத்து டாப் விக்கெட் டேக்கராக இருந்தார்.

     சிஎஸ்கே

    சிஎஸ்கே

    சிஎஸ்கே அணியில் இவர் இரண்டு வருடமாக வாய்ப்பே கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். அதிலும் 2020 தொடரில் சிஎஸ்கே அணியில் ஸ்பின் பவுலர்கள் இல்லாமல் தோனி கஷ்டப்பட்ட போது கூட சாய் கிஷோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த வருடம் நடந்த சையது முஷ்டாக் தொடரிலும் இவர் நன்றாக பவுலிங் செய்து இருந்தார்.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    இளைஞர்களிடம் ஸ்பார்க் இல்லை என்று தோனி கூறினாரே. அந்த வீரர்களில் சாய் கிஷோரும் ஒருவர்தான். இப்படி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டவர்தான் லோக்கல் போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வருகிறார். இன்றும் சையது முஷ்டாக் கோப்பை பைனலில் சாய் கிஷோர் ருத்ர தாண்டவம் ஆடினார்.

    ருத்ர தாண்டவம்

    ருத்ர தாண்டவம்

    இன்று 4 ஓவர் வீசிய சாய் கிஷோர் வெறும் 12 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் எடுத்தார். கர்நாடக அணியை கலங்க வைத்ததே இவர்தான். அதிலும் ரோஹன் கடம், மணிஷ் பாண்டே என்று இரண்டு ஒப்பனர்களையும் எளிதாக காலி செய்தார். இருவரையும் கிளீன் போல்ட் செய்தார்.

    விக்கெட்

    விக்கெட்

    இருவரையும் விக்கெட் எடுத்த சாய் கிஷோர் பின்னர் ஷரத் பிஆரையும் விக்கெட் எடுத்து அசத்தினார். சாய் கிஷோர் எடுத்த விக்கெட்தான் தமிழ்நாடு அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அடுத்த வருடமாவது இவர் சிஎஸ்கே அணியிலோ அல்லது வேறு ஐபிஎல் அணியிலோ களமிறங்குவாரா என்று பார்க்கலாம்.

    English summary
    Syed Mushtaq Ali Trophy: Sai Kishor bowling spell won the match for Tamilnadu against Karnataka in Finals.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X