உருமாறிய கொரோனா தாக்கியதா, இல்லையா.. எப்படி கண்டுபிடிப்பது.. 7 அறிகுறிகள் இருக்குதாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இங்கிலாந்தில் பரவிவரும் உருமாறிய கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு, வழக்கமான கொரோனா பாதிப்பு காலத்தில் ஏற்படக்கூடிய அறிகுறிகளை விடவும் கூடுதலாக 7 அறிகுறிகள் தென்படும் என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து சுகாதாரத் துறையின் கணிப்புப்படி அந்த நாட்டில் 70 சதவீதத்திற்கும் அதிகமான வேகத்துடன் இந்த கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனவேதான் அதிகம் பேரை குறுகிய காலத்தில் இது பாதிக்கிறது என்பது அந்த நாட்டு அரசு பிறப்பித்துள்ள எச்சரிக்கையாகும்.

Symptoms for New type of corona virus

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரக்கூடிய அனைத்து விமானங்களும் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் ஏற்கனவே அங்கிருந்து இந்தியா வந்தவர்கள் மற்றும் இங்கிலாந்தில் இருந்து பிற நாடுகள் வழியாக இந்தியா வருவார் என பலரும் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

வழக்கமாக ஏற்படும், வறட்டு இருமல், வாசனை திறன் இழப்பு, சுவை திறன் இழப்பு, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமல்லாது, இந்தப் புதுவகையான வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு, இத்துடன் மேலும் 7 அறிகுறிகள் தென்படும் என்று எங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதில் ஒன்று, மிகுந்த சோர்வு, இன்னொன்று பசி இல்லாமல் போவது, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி போன்றவை இதற்கான அறிகுறிகள் என்று கூறப்படுகிறது.

இந்த வகை வைரஸ் பரவும் முறையில் பெரிய மாற்றம் கிடையாது. ஆனால் இருமும்போதோ, தும்மும் போதோ, நோயாளியிடம் இருந்து வெளிப்படும் வைரஸ்களின் மூலமாக பரவும் வேகம் அதிகமாக இருக்கிறது என்கிறார்கள். எனவே, இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது. கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்வது மிகவும் நல்ல நடவடிக்கை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+