டி கே எஸ் இளங்கோவன் கட்சி பதவியில் இருந்து விடுவிப்பு- திமுக அதிரடி அறிவிப்பு
Recommended Video

சென்னை: திமுகவின் செய்தித் தொடர்பு செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.
திமுகவின் மாநிலங்களவை எம்பியாக உள்ளனர் டிகேஎஸ் இளங்கோவன். இவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில் அவர் நேற்று இரவு முதல் அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார்.
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். மேலும் கட்சியின் முக்கிய தலைவராக கருதப்பட்டு வந்த இளங்கோவன் திடீர் என விடுவிக்கப்பட்டது குறித்து எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இதுபோன்ற திடீர் அறிவிப்பால் திமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தற்போது விவாத பொருளாகிவிட்டது. இதுபோல் ஊடகங்களில் விவாதங்களை தவிர்த்து திமுக சார்பில் சிறப்பு நேர்காணலில் பங்கேற்போர் பட்டியலும் நேற்று வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications