நம்ம தி நகரா இது? வெறிச்சோடிக் கிடக்கும் ரங்கநாதன் தெரு? பரிதவிக்கும் வியாபாரிகள்!
சென்னை: பரபரப்புக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்த திநகர் இப்போது மக்கள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிப் போய் உள்ளது.
இந்திய அளவில் மக்கள் அதிகம் அளவு கூடும் சாலைகளின் பட்டியல் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது ரங்கநாதன் தெரு. இது தமிழ்நாட்டின் நம்பர் 1 வணிக சந்தையாகத் திகழ்ந்து வருகிறது.

தீபாவளி, புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் இங்கே தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நிரம்பி வழிவார்கள். அந்தளவுக்கு அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கக் கூடிய மையமாக இந்த தி நகர் பெயர் பெற்றுள்ளது
அப்படிப் பட்ட இந்தத் தி நகர்தான் இப்போது மக்கள் நடமாட்டமே இல்லாமல் காணப்படுகிறது. அதற்குக் காரணம், சென்னை தெற்கு உஸ்மான் சாலை முதல் வடக்கு உஸ்மான் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆகவே ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மேம்பாலத்தை விஜய் சேதுபதியின் '96' திரைப்படத்தில் இன்றைய இளம் தலைமுறையினர் பார்த்திருக்கலாம். அந்தக் காட்சி சினிமா ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
அப்படி த்ரிஷாவும், விஜய் சேதுபதியும் நடந்து வந்த பாலத்தைத்தான் இப்போது உடைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், சைதாப்பேட்டை அண்ணாசாலையிலிருந்து திநகருக்கு உள்ளே நுழையும் சாலையிலிருந்து ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதை அப்படியே இந்தப் பாலத்தில் கொண்டு வந்து இணைக்க உள்ளனர்.

ஆகவேதான் இந்தப் பாலம் சீரமைக்கப்பட்டு வருகிறது. பாலம் பணிகள் வருங்காலத்தில் மக்களுக்குப் பல வசதிகளைத் தரும். அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை. நாளைய நன்மைக்காக இன்றைக்கு ஆயிரக்கணக்கான திநகர் வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து நிற்கிறார்கள். அதுதான் மிகப்பெரிய சோகம்.
இதே பகுதியில் செருப்பு தைக்கும் பணியைச் செய்து கொண்டிருக்கும் 70 வயதுக்கு மேலான பாட்டி, இந்த மேம்பாலப் பணிகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார். அவர் பாஷையில் சொல்வதாக இருந்தால், 'பொழப்பே போச்சு. சாப்பாட்டுக்கே வழியில்ல. வருமான சுத்தமா இல்லை' என்கிறார். அவர் இந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறி செல்வது கடினம். கண்ணம்மாபேட்டை பக்கமே அவரது வாழ்வாதாரம் உள்ளது.
அரசும் ஒரு ஆண்டு காலத்திற்கு இந்த மேம்பாலப் பணிகள் நடைபெறும் என்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால் பாட்டியின் நிலைமை மிகமிக கஷ்டம். இவரைப் போன்று பாதிக்கப்பட்ட அன்றாடம் கூலித் தொழிலாளர்களைக் கண்டறிந்து அரசு ஏதேனும் உதவித்தொகை வழங்க முன்வரலாம். அல்லது அவருக்கு மாற்று ஏற்பாடுகளுக்கு ஏதேனும் வழி உண்டாக்கிக் கொடுக்கலாம் என்றே சொல்லத் தோன்றுகிறது.

இதே டிநகர் மேம்பாலம் பக்கம் மிக்சி ரிப்பேர் கடை வைத்திருக்கும் ஒருவர், 'ஒரு ஈ காக்காய் பார்க்க முடியல சார். எப்படி ஜேஜே என்று இருந்த டிநர். இப்ப பார்த்தீங்களா? இதுதான் நிலைமை.
ஏற்கெனவே 2 வருடம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோம். இப்ப மேம்பாலம் கட்டுகிறேன் என்று மொத்த கடைகளையும் மூட வச்சுட்டாங்க. சுத்தமா த்ழொஇலே போச்சு. இழுத்து மூடிட்டு போக வேண்டியதுதான்' என்கிறார்.
'மக்கள் நடமாட்டம் இருந்தா தான் அங்க கடை வைக்க முடியும். மக்களே வராத தெருவுக்குள்ள நாங்க கடைவைத்து என்ன லாபம் சொல்லுங்கள். தண்டல் வாங்கிதான் இந்தத் தொழிலையே செய்து வந்தோம்.

இப்ப தினம் அந்தத் தண்டல் கட்டவே வருமானம் இல்லை. ராத்திரி படுக்கப் போனா, நாளை காலை எப்படிச் சமாளிக்கப் போகிறமோ' என்ற பயத்தோடதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்' என்கிறார் இந்த தி நகரில் சாலையோரமாக சாமி படங்கள், கையில் கட்டக் கூடிய கயிறுகளை விற்பனை செய்து வரும் வியாபாரி ஒருவர்.
இந்த டிநகரில் சாலையோரமாக இதே தொழிலை இவரது தாத்தா செய்துள்ளார். அடுத்த அப்பா அம்மா. இப்போது இவர். ஆக மூன்று தலைமுறையாக இந்த நடைபாதை வியாபாரி இதே தொழிலைத்தான் செய்து வருகிறார். அவரது தொழில் இந்தப் பாலப் பணிகளால் இன்று முடங்கிப் போய் நிற்கிறது.
மாங்காயை வெட்டி பத்தை போட்டு விற்பனை செய்து வரும் தள்ளுவண்டிக்குக்காரர் ஒருவர் கடந்த 4 நாள்களாக வியாபாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டுவிட்டது என்கிறார். தினம் 100 ரூபாய் கிடைக்குமா எனத் தவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டதாகவும் சொல்கிறார்.

இந்தப் பாலம் கட்டும் பணிகளுக்காகப் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுவிட்டன. வழக்கமாக மக்கள் திபுதிபுவென்று குவியும் ரங்கநாதன் சாலையே வெறிச்சோடி காணப்படுகிறது.
இது நம்ம தி நகர் தானா? என்று ஆச்சரியப்படும் அளவுக்கு ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது என்றால் பாருங்களேன்.
ஏற்கெனவே தி நகரில் மெட்ரோ அமைப்பதற்காக பனகல் பார்க் முழுக்கவே தோண்டி போட்டு விட்டார்கள். சில ஆண்டுகளாக அந்தப் பணிகளுக்காகச் சாலை போக்குவரத்துகளை மாற்றி விட்டுவிட்டார்கள். அதனால் முன்பே பாதி வியாபாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
அடுத்து இப்போது இந்த மேம்பாலத்தால் மிகப்பெரிய சவுளி கடைகள், பாத்திரக் கடைகள் எலெக்ட்ரானிக்ஸ் கடைகள், நகைக்கடைகள் என்று பல தரப்பு வியாபாரமும் முடங்கிப் போய் நிற்கின்றது என்ற கருத்து அத்தனை வியாபாரிகளும் தெரிவிக்கிறார்கள்.

இதே நடைபாதையில் குழந்தைகளுக்காக உடைகளை விற்பனை செய்து வரும் இளைஞர் ஒருவர், 'பாரிஸ் பஸ்டாண்டில் அப்பா வியாபாரம் செய்து வந்தார். அந்த பஸ் ஸ்டாண்டு மூடிய பிறகு நான் தி நகர் வியாபாரம் பண்ண வந்தேன். அப்பா கோயம்பேட்டுக்குப் போனார்.
இப்ப கோயம்பேடு பஸ் ஸ்டாண்டையும் மூடிட்டாங்க. இந்த தி நகரையும் முடக்கிட்டாங்க. எப்படித்தான் பிழைக்கிறதோ? வழிதெரியாமல் தவிக்கிறோம்' என்கிறார்.
அவர் பேசும் வார்த்தைகளைக் கேட்கும் போது மனம் வலிக்கிறது.
டதி நகரில் தள்ளுவண்டியில் தர்பூசணியை வெட்டி கப் உள்ளே போட்டு விற்கும் வியாபாரி, 'அரசாங்கத்துக்கு இந்தப் பாலம் தேவையாக இருக்கலாம். எங்களுக்கு என்னவோ இந்தப் புதிய பாலம் தேவை இல்லை என்பதுதான்' என்கிறார்.
இதம் வீட்டுக்கு 1500 ரூபாய் சம்பாதித்துக் கொண்டு போன இவர், இன்று 100 ரூபாய்க்கு வழியில்லாமல் தவிக்கிறேன் என்கிறார். அதை அவரது முகமே சொல்லாமல் சொல்கிறது.
-
ஸ்டாலின் தோற்றது விஜய்க்கு வருத்தமளித்திருக்கலாம்! ஓபனாக பேசிய ப.சிதம்பரம்! -
"தவெக ஆட்சி 6 மாதம் இல்லை.. 3 மாதமாவது தாங்குமா?" - முன்னாள் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் -
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
அதிசயத்த பாருங்களேன்.. ஜெயா டிவில ஸ்டாலின் லைவ்! வெளியேறிய விவேக்! உள்ளே வந்த திவாகரன்! பெரிய சேஞ்ச் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications