• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விஜயகாந்த் வீட்டில் தனியா என்ன பண்ணிட்டிருக்கார் தெரியுமா ?

Google Oneindia Tamil News

Recommended Video

  விஜயகாந்திடம் திருமண விழா அழைப்பிதழை வழங்கிய டி.ராஜேந்தர்- வீடியோ

  சென்னை: கண்கள் ரெட் கலரில் சிவசிவக்க.. லெப்ட் காலை தூக்கி ரைட் காலால் எகிறி எகிறி எதிரிகளை சினிமாவில் பந்தாடிய விஜயகாந்த் இன்று வீட்டில் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்?!
  எப்படா உடல் நலமாகி கேப்டன் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்புவார் என்று தமிழக மக்கள், அரசியலையும் தாண்டி விஜயகாந்த் மீது அக்கறையாய் இருந்தனர்! விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததில் இருந்து மக்களை சந்திக்கவே இல்லை.

  கூட்டணி சமாச்சாரம் முடிந்தபிறகு எப்படியாவது பிரச்சாரத்திற்கு வந்துவிடுவார், அப்போது கண்குளிர பார்க்கலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அவரது உடல்நிலை முழுவதுமாக சரியாகிவிட்டதா என தெரியவில்லை. ஆனால் இதுவரை அவரது குரல் கேட்காமல் தமிழக மக்களுக்கு என்னவோ போல் இருக்கிறது!

  இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை இதுதாங்க.. மதுரையில் ப.சிதம்பரம் அதிரடி பேட்டி இந்திய அரசியலில் ஒரு திருப்புமுனை இதுதாங்க.. மதுரையில் ப.சிதம்பரம் அதிரடி பேட்டி

  ட்வீட்

  ட்வீட்

  அன்று தேமுதிக என்ற கட்சியை வீறுகொண்டு உருவாக்கிய விஜயகாந்த் இன்று வீட்டில் உள்ளார்.. ஆனால் அவரது உறவுகள் பிரச்சாரத்தில் மும்முரமாக உள்ளன! சரி, வீட்டில் அவர் என்னதான் செய்கிறார் என்று பார்த்தால், அவரது ட்விட்டரில் ஒரு ட்வீட் போடப்பட்டுள்ளது.

   குறளரசன்

  குறளரசன்

  திரையுலகின் சகலகலா வல்லவர் டி.ராஜேந்தர், விஜயகாந்த்தை அவரது வீட்டில் சென்று பார்த்திருக்கிறார். மகன் குறளரசனுக்கு கல்யாணமாம். அதனால் மாப்பிள்ளையையும் உடன் அழைத்து கொண்டு பத்திரிகை வைக்க போய் இருக்கிறார்.

  டி.ராஜேந்தர்

  அந்த ட்வீட்டில், "இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம். குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்" என்று பதிவிடப்பட்டுள்ளது.

   நெற்றியில் விபூதி

  நெற்றியில் விபூதி

  ஒரு டீ-ஷர்ட் போட்டு கொண்டு, நெற்றியில் விபூதியுடன் இருக்கிறார் விஜயகாந்த். கம்பீரம் போய் குழந்தைதனம்தான் முகத்தில் தெரிகிறது. அந்த போட்டோவில் குறளரசனும், டி.ராஜேந்திரும் காமிராவை பார்க்க, விஜயகாந்த் மட்டும் சம்பந்தமே இல்லாமல் வேறு எங்கேயோ பார்க்கிறார். கேமராமேன் எங்கிருக்கிறார் என்றுகூட கேப்டனுக்கு தெரியவில்லையா, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என தெரியவில்லை.

  கஷ்டமா இருக்கு

  இருந்தாலும் இந்த ட்வீட்டுக்கு கீழே நிறைய பேர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வர வேண்டும் என்று தங்கள் ஆசைகளை கொட்டி கொட்டி வருகிறார்கள். அதில் ஒரு முக்கியமான ட்வீட்"எல்லாரும் காமிரா பாக்கிறாங்க. கேப்டன் மட்டும் எங்கியோ பாக்குறாரு. கஷ்டமா இருக்கு. அவரை இப்படி பாக்க" என்று உள்ளது.

   ஒரே தலைவர்

  ஒரே தலைவர்

  இப்படி ட்வீட் போட்டவர் விஜயகாந்த் சொந்தக்காரரோ... தேமுதிக சம்பந்தப்பட்டவரோ இல்லை! நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்! இதுதான் கேப்டன்! அரசியலுக்கும் அப்பாற்பட்டு மக்களால் விரும்பப்படும் ஒரு கட்சி தலைவர் இருக்கிறார் என்றால் அது விஜயகாந்த் மட்டுமே!

  English summary
  Director T Rajendar met DMDK President Vijayakanth at his residence with his son Kuralarasan
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X