அன்று டி. ராஜேந்தர்.. சிரஞ்சீவி.. ஜெ.தீபா.. இன்று சரத்குமார்.. கட்சியை கரைத்த அரசியல் தலைவர்கள்
சென்னை: சினிமா நடிகர்கள் பலரும் முதல்வர் நாற்காலியில் அமரவேண்டும் என்ற கனவோடு அரசியல் கட்சி தொடங்கினாலும் கை காசை போட்டு செலவு செய்வது லேசு பட்ட காரியமில்லை என்று உணர்ந்து ஏதாவது ஒரு பெரிய கட்சியோடு இணைத்து விடுவது தொடர்கதையாகி வருகிறது. தாயக மறுமலர்ச்சி கழகம் கட்சியை ஆரம்பித்த டி.ராஜேந்தர் தொடங்கி சமத்துவ மக்கள் கட்சி ஆரம்பித்த சரத்குமார் வரை யாரெல்லாம் கட்சி தொடங்கி அதை திறம்பட நடத்த முடியாமல் பெரிய கட்சிகளில் இணைத்தவர்கள் என்று பார்க்கலாம்.
டி.ராஜேந்தர்: திமுகவில் இருந்து கருத்துமோதல் காரணமாக பிரிந்து 1989ம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்றபின், மீண்டும் திமுகவில் இணைந்தார் டி.ஆர். 1996ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பூங்கா நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். பின் மீண்டும் 2001ல் கட்சியை விட்டு விலகியிருந்தார். அதைத்தொடர்ந்து 2004ம் ஆண்டு அனைத்திந்திய லட்சிய திமுக என்ற கட்சியைத் தொடங்கினார். 2013ம் ஆண்டில் திமுக தலைவர் கலைஞரை சென்று சந்தித்தார், அப்போது அவர் மீண்டும் திமுகவில் இணைந்துவிட்டார் என தகவல்கள் பரவின.

லட்சிய திமுக: திடீரென்று 2014ஆம் ஆண்டு செய்தியாளர்களை சந்தித்த டி.ராஜேந்தர் திமுகவில் தாம் இணையவில்லை என்றும் லட்சிய திமுகவை கலைத்துவிடவும் இல்லை. தி.மு.க.வில் சாதாரண மூன்று ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர் அட்டை புதுப்பிக்கவில்லை என்று கூறி என்னை கட்சியில் இருந்து நீக்கினர்.
ஏழு வருட காலம் ஒரு கட்சியை, எல்லா பெரிய கட்சிகள் மத்தியிலும் வெற்றிகரமாக நடத்திய என்னை தி.மு.க சிறுபிள்ளைத்தனமாக வெளியேற்றியது. ஆனால், திரும்பவும் நான் ஏன் தி.மு.க தலைவரை சந்தித்தேன் என்றால், அது நானாக சென்றதல்ல. சூழ்நிலை கைதியாகத்தான் தி.மு.க தலைவரை சந்தித்தேன். ஆனால், தி.மு.க தலைவர் கருணாநிதி ராஜதந்திரமாக எதுக்கு தனியாக கட்சி நடத்தி சிரமப்பட வேண்டும். பேசாமல் தி.மு.க.வில் இணைந்துவிடு என்றார்.
எனக்கு அப்போதுதான் அவரது எண்ணம் புரிந்தது. ஏற்கனவே இப்படிதான் திரும்பி வந்த என்னை தாயக மறுமலர்ச்சி கழகத்தை கலைக்க சொல்லி தி.மு.க.வில் சேர்த்துக் கொண்டார். கட்சியில் பெரிய பொறுப்பு தருவதாக கூறி கழற்றி விட்டார். அதனால், இந்த முறை நான் ராஜதந்திரமாக கட்சியை கலைக்க மறுப்பு தெரிவித்தேன் என்று கூறினார். இப்போது அவர் அரசியல் கட்சி நடத்துகிறாரா இல்லையா என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
சிரஞ்சீவி பிரஜா ராஜ்ஜியம்: தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி கடந்த 2008ஆம் ஆண்டு திருப்பதியில் கட்சியை தொடங்கினார். கட்சிக்கு பிரஜா ராஜ்ஜியம் (மக்கள் ராஜ்ஜியம்) என்று பெயர் சூட்டினார். மக்களுக்கு சேவை செய்யவே கட்சியை தெட்கியுள்ளேன். சேவை, சேவை, சேவை.. இதைத் தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. மக்களின் ஆதரவோடு நான் அரசியலில் வெல்வேன் என்று சொன்னார் சிரஞ்சீவி. பிரஜா ராஜ்யம் கட்சிக்கு 'சூரியன்' சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட பிரஜா ராஜ்ஜியம் கட்சி 14 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 18 இடங்களைக் கைப்பாற்றி சட்டசபைக்குள் பிரஜா ராஜ்ஜியம் எம்எல்ஏக்கள் நுழைந்தனர். சில ஆண்டுகள் மட்டுமே அரசியல்வாதியாக சிரஞ்சீவியால் பயணம் செய்ய முடிந்தது. நான்கு ஆண்டுகளில் தனது பிரஜா ராஜ்ஜியம் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைத்து விட்டார் சிரஞ்சீவி. ராஜ்யசபா எம்பியான சிரஞ்சீவிக்கு மத்திய சுற்றுலா துறை அமைச்சர் பரிசாக கிடைத்தது.
ஜெ.தீபா கட்சி: ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரின் அண்ணன் மகளான தீபா ஊடக வெளிச்சத்திற்கு வந்தார். அரசியலுக்கு வரப்போவதாக கூறினார். தினசரியும் அவரது வீட்டின் முன்பு ஏராளமானோர் கூடினர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்து வந்தார். எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் அணிகள் இணைப்புக்குப் பின்னர் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பைத் தொடங்கினார். சில தினங்களிலேயே அவரின் கணவர் மாதவனும் போட்டியாக ஓர் அமைப்பைத் தொடங்கினார்.
இவர்களின் அரசியல் பொதுவெளியில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகின. குறிப்பாக போயஸ் கார்டன் இல்லத்தின் வாயிலில் தீபாவும், அவரது சகோதரர் தீபக்கும் சண்டையிட்டுக் கொண்ட பிறகு தீபாவின் அரசியல் பாணி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் மாதவனுக்கும் - தீபாவுக்கும் இடையேயான வார்த்தை மோதல்கள் ஊடகங்களில் செய்தியாகின. இந்நிலையில், தீபா, மாதவனின் அமைப்புகள் ஒன்றாக இணைக்கப்பட்டன. அதன் பின்னர் கட்சி குறித்த செய்தியும் இல்லாது இருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் குடும்பத்தைக் கவனிக்க இருப்பதால் தீபா பேரவையைக் கலைக்க இருப்பதாக அறிவித்தார். திடீரென்று ஒருநாள் அதிமுகவுடன் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி இணைந்து செயல்படும் என்று அவர் அறிவித்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தீபா, பல சோதனைகளைத் தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன். உடல்நிலை காரணமாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும். அதிமுகவில் எந்தப் பொறுப்பையும், பதவியையும் எதிர்பார்க்கவில்லை என்றார். போயஸ் இல்லத்தை மீட்பேன் என்று சொன்னது போல பல கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையம் ஜெ.தீபா வசமானது.
திவாகரன் : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்தது. டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். இதனால், டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினருக்கும் இடையே மோதல் ஏற்படவே, தினகரனுக்கு எதிராக சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய கட்சி ஒன்றை 2018ஆம் ஆண்டு தொடங்கினார். அண்ணா திராவிடர் கழகம் என்ற கட்சியை தொடங்கியதோடு சரி அதன்பின்னர் எந்த செயல்பாடும் இல்லாம் சைலண்ட் ஆகி விட்டார் வருகிறார் திவாகரன். ஒருவேளை தனது கட்சியை டிடிவி தினகரனுடன் இணைத்து விட்டாரோ என்னவோ.
டிடிவி பாஸ்கரன்: இதே போல டிடிவி தினகரனின் சகோதரர் பாஸ் என்ற பாஸ்கரன் கடந்த 2018ஆம் ஆண்டு கடைசியில் கட்சியைத் தொடங்கினார் சென்னை நீலாங்கரை புளூ பீச் சாலையில் உள்ள அவரது வீட்டில் புதிய கட்சியைத் துவங்கி, கொடியையும் அறிமுகம் செய்தார். கட்சிக்கு அண்ணா எம்ஜிஆர் மக்கள் கழகம் என்றும் பெயரிட்டார். கொடியில், மேலே காவி, நடுவில் பச்சை, கீழே கருப்பு, நடுவில் மஞ்சள் நிறத்தில் கருப்பு கண்ணாடியுடனான எம்ஜிஆர் படமும் இருந்தது. அப்போது அவர் எம்.ஜி.ஆர்., அண்ணா வழியில் ஊழலற்ற நிர்வாகத்தை தரவே கட்சி ஆரம்பித்துள்ளேன் என்றார். மீண்டும் மோடியை பிரதமராக்கப் பாடுபடுவேன். ஊழலற்ற இந்தியாவின் இறையான்மையை காக்கும் மோடிக்கு எனது முழு ஆதரவு என்று சொன்ன பாஸ்கரன் கட்சி தொடங்கியதோடு சரி அதன்பின் ஒரு கூட்டம் கூட நடத்தவில்லை பாஸ்கரன்.
சரத்குமார் கட்சி: சினிமா நடிகராக இருந்து திமுக, அதிமுக என பயணம் செய்து கடந்த 2007ஆம் ஆண்டு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்தார் சரத்குமார். கடந்த 17 ஆண்டு காலமாக ஒருவழியாக கட்சியை நடத்தி வந்த சரத்குமார் நள்ளிரவில் திடீர் முடிவு எடுத்து பாஜகவில் தனது கட்சியை இணைத்துள்ளார். சரத்குமாரை தேசிய அரசியலுக்கு அனுப்பி வைக்கிறார் அண்ணாமலை. அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா? என்ன பதவி கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் எத்தனையோ அரசியல்வாதிகளை கண்டுள்ளது. திமுக, அதிமுக, மதிமுக, தேமுதிக, நாம் தமிழர், தமிழக வெற்றிக்கழகம் வரைக்கும் எத்தனை அரசியல் கட்சிகள் புதிது புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. ஒரு சிலர் மட்டுமே அரசியல் களத்தில் நிலைத்து நிற்க முடிகிறது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று சொல்லி கட்சி தொடங்கும் அரசியல் வாதிகள் இப்போது மக்களின் நன்மைக்காக பெரிய கட்சிகளுடன் தங்களின் கட்சிகளை இணைத்து விடுகின்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications