கண்ணீர் விட்ட டி.ராஜேந்தர்.. "ஸ்டாலின்" பேரை சொன்னதுமே.. நா தழுதழுத்து..பெருக்கெடுத்த நன்றி உணர்ச்சி
டி. ராஜேந்தர் தன்னுடைய பேட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை: கலைஞர் கருணாநிதிக்கு பிறகு தன் மீது மிகுந்த அன்போடு இருப்பது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினும், அவரது மனைவியும் எனது அண்ணியுமான துர்கா ஸ்டாலின்தான் என்று நடிகர் டி.ராஜேந்தர் உருக்கமாக கூறியுள்ளார்.
Recommended Video
பிரபல டைர்க்டரும், நடிகரும், சகலகலா திறமைசாலியுமான, டி.ராஜேந்தர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அந்த சிகிச்சையின்போது அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது... அதற்கும் உடனடியாக சிகிச்சை தரப்பட்டது... அதற்கு பிறகு, டி.ராஜேந்தர் நலமுடன் இருப்பதாக, நடிகர் சிம்பு அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

சிகிச்சை - பயணம்
ஒருபக்கம் டி.ராஜேந்தர் உடல் நலம் குணம் அடைந்து வந்தாலும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே ஓய்வுக்காக இருந்தார்.. எனினும் அவருக்கு உயர் சிகிச்சை தேவைப்படுவதாகவும், அதற்காக வெளிநாடு அழைத்து செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன... அதற்கான வேலைகளிலும் நடிகர் சிம்பு உள்ளிட்ட டி.ராஜேந்திரன் குடும்பத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

நடிகர் டி.ராஜேந்தர்
இந்தநிலையில் 16ம் தேதி, அதாவது நாளை மறுநாள் அமெரிக்காவில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கப்பட்டிருந்தது... அதன்படி இன்று சென்னையில் இருந்து டி.ராஜேந்தர் அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்.. டி ராஜேந்தர் அமெரிக்காவுக்கு செல்ல உள்ள நிலையில் அதற்கு முன்பாக, இன்று மாலை சென்னை ஏர்போர்ட்டில் பத்திரிகையாளர்களை சந்திக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படியே செய்தியாளர்களையும் சந்தித்து பேசினார் டி.ராஜேந்தர்.

ஸ்டாலின் - அண்ணி துர்கா ஸ்டாலின்
அவர் சொல்லும்போது, "நான் இன்னைக்கு இங்கே வந்து நிக்கறேன்னா, அதுக்கு காரணம் எல்லாம் வல்ல இறைவன்.. என் தன்னம்பிக்கையை விட, கடவுள் நம்பிக்கை வென்றுள்ளது.. கலைஞர் கருணாநிதிக்கு பிறகு தன் மீது மிகுந்த அன்போடு இருப்பது தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலினும், அவரது மனைவியும் எனது அண்ணியுமான துர்கா ஸ்டாலின்தான்.. என்னை மருத்துவமனையில் வந்து பார்த்து நலம் விசாரித்தனர்.. 2 முறை சந்தித்து பேசினார்.. தம்பி உதயநிதி வரை அத்தனை முறை போன் செய்து அன்பையும் அக்கறையும் காட்டினார்கள்..

கலைஞர் அன்பு
ஒன்னே ஒன்னு சொல்லணும்.. என்மீது அன்பும் பாசமும் உருக்கமும் காட்டக்கூடியது கலைஞர் என்றுதான் நினைத்தேன்.. அவர்தான் என் குரு என்று நினைத்தேன்.. அவருக்குபிறகு இன்றைக்கு ஸ்டாலின் ஐயா அவர்கள், அன்பு காட்டியதை பார்க்கும்போது, அவர் மீது இதற்கு முன்பு இருந்ததைவிட, இன்று மரியாதையும் அன்பும் கூடுகிறது.. அவர் என் மனதில் உயர்ந்து நிற்கிறார். எனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள் மற்றும் தன்னை நேரில் வந்து பார்த்த திரை பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி..

கண்ணீர்
உயர்சிகிச்சைக்காக இப்போதான் அமெரிக்கா செல்கிறேன்.. என் முகத்தில்தான் தாடி வெச்சிருக்கிறேன்.. எதையுமே வெச்சிருக்க மாட்டேன் மூடி.. ஆனால் அதுக்குள்ள, கதையை விதவிதமாக சொல்லி, யார் யாரோ எப்படி எப்படியோ டைரக்ட் செய்துட்டாங்க.. ஆனால் யார் என்ன செய்தாலும் விதியை, கர்மாவை, ஒன்றும் செய்ய முடியாது.. நான் ஒரு சாதாரண கலைஞன், நான் ஒரு சாதாரண நடிகர்,, நான் சாதாரண ஒரு ஆள்.. என் மேலைஆசை வெச்சு, அன்பு வெச்சு, பாசம் வெச்சு, நான் நல்லா இருக்கணும்னு பலர் செய்த பிரார்த்தனைதான் இன்னைக்கு இங்கே நிக்கறேன்..

நல்ல மனிதன் சிம்பு
தமாகா தலைவர் அன்பு அண்ணன் ஜிகே வாசன், ஐஜேகே தலைவர் எம்பி பாரிவேந்தருக்கு நன்றி.. திரையுலகத்தின் ஒரு நண்பனும் மநீம தலைவரும் என் அண்ணன் கமல்ஹாசனுக்கு நன்றி.. எனக்கு சிகிச்சை தந்த டாக்டர்களுக்கு நன்றி.. என்னை வந்து சந்தித்த நடிகர் கமலஹாசனுக்கு என்னுடைய நன்றிகள். என் மகன் சிம்பு ஒரு நல்ல மனிதன்.. அவன் திரையில் மன்மதனாக இருந்தாலும், எனக்கு ஒரு நல்ல மகனாக இருக்கிறான்.. எத்தனையோ பேர் தங்களது பிள்ளைகளை ஆசிரமத்தில் விடும் நிலையில், தன்னுடைய படத்தின் ஆடியோ வெளியீட்டை கூட தள்ளி வைத்து விட்டு எனக்காக அமெரிக்கா சென்று மருத்துவம் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறான்' என்று சொல்லியபடியே மகனை நினைத்து கண்ணீர் வடித்தார் டி.ராஜேந்தர்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications