சிம்பு சகோதரர் குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவினார்.. டி.ராஜேந்தர் விளக்கம்
Recommended Video

சென்னை: இயக்குநர் டி.ராஜேந்தர் மகனும், நடிகர் சிம்புவின் சகோதரருமான, குறளரசன் இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார்.
டி.ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன், தீவிர சிவ பக்தனாகும். ராஜேந்தரும், இந்து மத நம்பிக்கையுள்ளவர். அதேநேரம், மகள் இலக்கியா கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார். இதனிடையேதான், குறளரசன், இஸ்லாம் மதத்தை இன்று தழுவினார்.
டி.ராஜேந்தர் மற்றும் தாய் உஷா ஆகியோர் முன்னிலையில், இஸ்லாமிய மத குருமார்கள் அருகாமையில், குறளரசன் இஸ்லாம் மதத்தை நேற்று தழுவினார்.

விளக்கம்
இதுகுறித்து டி.ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், எந்த மதமும் சம்மதம் என்ற கொள்கையை பின்பற்றுவதால், குறளரசன் விருப்பத்திற்கு மதிப்பு கொடுத்து அவரை இஸ்லாம் மதத்தை தழுவ தடை சொல்லவில்லை. எனது மகன் சிம்பு சிவ பக்தன். மகள் இலக்கியா, கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுகிறார். இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

யுவன்சங்கர் ராஜா
இசையமைப்பாளர், இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜாவும் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தை தழுவிய ஒரு பிரபலமாகும். இதேபோல டி.ராஜேந்தர் குடும்பத்திலும், ஒரு மினி இந்தியாவையே பார்க்க முடியும் என்ற அளவில் மும்மதங்களின் சங்கமம் நிகழ்ந்துள்ளது.

நடிகை மோனிகா
அழகி, சிலந்தி, சண்டைக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த மோனிகா, மதுரையை சேர்ந்த தொழிலதிபரை மணந்து கொண்டு இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.

எம்மதமும் சம்மதம்
தமிழக திரையுலகை பொறுத்தளவில், எந்த மதமாக இருந்தாலும் சம்மதம் என்ற இணக்கமான சூழ்நிலை நிலவுகிறது. அப்படித்தான் குறளரசனும் இப்போது இஸ்லாம் மதத்தை தழுவியுள்ளார் என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.
-
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications