சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழக பள்ளிக் கல்வித் துறையில் பட்டையை கிளப்பிய உதயச்சந்திரன்.. மீண்டும் செயலாளராவாரா?

Google Oneindia Tamil News

சென்னை: பள்ளிக் கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொள்ள மீண்டும் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி த.உதயச்சந்திரன் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி த உதயச்சந்திரனை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. டிஎன்பிஎஸ்சிக்கும் பள்ளிக் கல்வித் துறைக்கும் அவர் செய்த பணிகள் ஏராளம். அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயச்சந்திரன் சிறப்பாக பணியாற்றி வந்தார்.

இந்த காலகட்டத்தில் பல புதுமைகளை தேர்வாணையத்தில் புதுப்பித்தவர். அரசு தேர்வுகளுக்கு இணையதளத்திலேயே விண்ணப்பிப்பது, ஹால் டிக்கெட்களை நாமாகவே பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்வது என பல உத்திகளை கையாண்டார்.

"அப்செட்".. ஜாதி ஓட்டுக்களால்.. வீழ்த்தப்பட்ட கமல்ஹாசன்.. ஏற்க முடியாத ஏமாற்றத்தில் மய்யம்!

அமைச்சர்

அமைச்சர்

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து பள்ளிக் கல்வித் துறையின் செயலாளராக உதயச்சந்திரன் நியமிக்கப்பட்டார். அன்றிலிருந்து கல்வித் துறை புதுப்பொலிவை பெற்றது. பாடத்திட்ட மாற்றங்களை கொண்டு வந்தார்.

விளம்பரம்

விளம்பரம்

11-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வை கொண்டு வந்தார். 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 1200 ஆக இருந்த மொத்த மதிப்பெண்களை 600 ஆக குறைத்தார். ரேங்கிங் முறையை ஒழித்தவர். ரேங்கிங் முறையால் கட்அவுட்கள் வைத்து தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து பணம் சுரண்டலை தடுமையாக எதிர்த்தார். மேலும் விளம்பரம் செய்ய தடைவிதித்தார்.

அண்ணா நூலகம்

அண்ணா நூலகம்

ரேங்கிங் முறை கட்அவுட்களால் அதிக மதிப்பெண்கள் எடுக்காத பிள்ளைகள் பழிச்சொல்லுக்கு ஆளாகின்றர். இந்த முறை ரத்தை பெற்றோர்களும் கல்வியாளர்களும் வரவேற்றனர். மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கும் அவர் புத்துயிரை கொடுத்தார்.

தொல்லியல் துறை

தொல்லியல் துறை

இங்கு பயிற்சி வகுப்புகள் வைக்கப்பட்டு மிகவும் துடிப்பாக இயங்க வைத்தார். கரைப்படியாத கைகளுக்கு சொந்தக்காரரான உதயச்சந்திரன் பாடத்திட்டங்களை மாற்றும் பணிகளையும் இவர் செய்து வந்த நிலையில் திடீரென தமிழக அரசால் மாற்றப்பட்டு தமிழக தொல்லியல் துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.

நியமனம்

நியமனம்

இதை கல்வியாளர்களும் பெற்றோர்களும் எதிர்த்தனர். சில எதிர்க்கட்சியினரும் உதயச்சந்திரனுக்கு ஆதரவாக பேசினார். மேலும் #StandwithUdayachandran என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிவிட்டரிலும் டிரென்டானார். இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக நிச்சயம் தங்கம் தென்னரசு நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

சிறப்பு

சிறப்பு

அப்போது பள்ளிக் கல்வித் துறை செயலாளராக உதயச்சந்திரன் மீண்டும் பணியமர்த்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் தமிழகத்தில் கல்வித் துறை மேலும் சிறப்பாக செயல்படலாம் என அடித்து கூறுகிறார்கள் கல்வியாளர்கள்.

English summary
T.Udhayachandran IAS will be appointed as Secretary of Tamilnadu School Education? Educationists expecting this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X