தோனி போட்ட கண்டிஷனா? அவர் உள்ளே வந்ததும் ஆளே மாறிப்போன அஸ்வின்.. நேற்று நடந்த சம்பவம்!
சென்னை: உலகக் கோப்பை டி 20 தொடரில் நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார்.
உலகக் கோப்பை டி 20 தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இதில் தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் சிறிய அணிகளுக்கு இடையில் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் பெரிய அணிகளுக்கு இடையில் பயிற்சி ஆட்டங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன.
நேற்று இந்தியாவிற்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 188-5 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 192-3 ரன்கள் எடுத்து வென்றது.

பவுலிங்
நேற்று நடந்த போட்டியில் அஸ்வினின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வீரர்கள் ஓவருக்கு 10 ரன்களுக்கும் அதிகமாக வாரி வழங்கினார்கள். ஆனால் அஸ்வின் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். 4 ஓவர் வீசிய அஸ்வின் 23 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 5.8 என்ற எக்கனாமியில் பவுலிங் செய்தார். அஸ்வின் நேற்று விக்கெட் எடுக்கவில்லை என்றால் மிடில் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்தினார்.
Recommended Video

அஸ்வின்
நேற்று பிட்ச் பவுலிங் செய்ய கஷ்டமாக இருந்தது. அதேபோல் பனிப்பொழிவு பவுலர்களுக்கு எதிராக இருந்தது. ஆனாலும் அஸ்வின் நன்றாக பவுலிங் செய்து இருந்தார். நேற்று அஸ்வினின் நல்ல பவுலிங்கிற்கு அவர் தன்னுடைய "ஸ்டிராங் சோனில்" இருந்ததே காரணம். தன்னுடைய இயல்பான ஆப் ஸ்பின் பவுலிங்கில், தன்னுடைய பாரம்பரிய ஸ்டைலில் பவுலிங் செய்தார்.

பிட்ச்
நேற்று போட்டியில் அஸ்வின் தனது கையை சாதாரணமாக சுற்றினார். சோதனை முயற்சியாக அவர் கையை மாற்றி மாற்றி சுழற்றுவது. திடீரென லெக் ஸ்பின் போடுவது என்று சில தவறுகளை செய்வார். இதனால் அவ்வப்போது விக்கெட் விழுந்தாலும் அதிக அளவில் ரன்களும் செல்லும். அஸ்வின் இப்படி சோதனை முயற்சிகளை அதிகம் செய்ய கூடாது என்று பல கிரிக்கெட் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

2021 ஐபிஎல்
2021 ஐபிஎல் தொடரிலும் கூட அஸ்வின் இப்படி தனது பவுலிங் ஸ்டைலை மாற்றி மாற்றி வீசி வந்தார். அஸ்வினின் இந்த செயல் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. குவாலிபயர் இரண்டாவது ஆட்டத்தின் கடைசி ஓவரில் அஸ்வின் சிக்ஸ் கொடுக்கவும் இது ஒரு காரணமாக இருந்தது. இந்த நிலையில்தான் அஸ்வினின் பவுலிங் நேற்று இயல்பாக இருந்தது. சொடுக்கு பால், கேரம் பால் தவிர பெரிதாக சோதனை முயற்சிகளை அவர் செய்யவில்லை.

தோனி
நேற்று அவரின் பவுலிங் மிக சிறப்பாக இருந்தது. தோனி இருந்திருந்தால் அஸ்வின் சோதனை முயற்சிகளை செய்ய மாட்டார் என்று ஐபிஎல் தொடரின் போதே கூறப்பட்டது. அதேபோல் நேற்று இந்திய அணியின் ஆலோசகராக தோனி இணைந்த பின் அஸ்வின் பழைய பார்மிற்கு திரும்பி உள்ளார். அதோடு சோதனை முயற்சிகள் செய்வதையும் கைவிட்டு உள்ளார். தோனி கேப்டன்சிக்கு கீழ் அஸ்வின் இப்படி சோதனை முயற்சிகளை எல்லாம் செய்தது கிடையாது.

மாற்றம்
அவர் இல்லாமல் அஸ்வின் நிறைய மாற்றங்களை பவுலிங்கில் செய்தார். ஆனால் இப்போது தோனி வந்ததும் அஸ்வின் மீண்டும் பவுலிங் ஸ்டைலை மாற்றி பழையபடி திரும்பி உள்ளார். இதனால் தோனி கொடுத்த அறிவுரை காரணமாக அஸ்வின் தனது வலுவான பவுலிங் ஸ்டைலை பின்பற்றுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அஸ்வின் இயல்பாக பவுலிங் போடும் பட்சத்தில் அவர் இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications