என்ன.. என்ன.. யார் துரோகி? கோபமாக கேள்வி கேட்ட அந்த ஷமியை நினைவிருக்கா?.. வைரலாகும் வீடியோ!
சென்னை: இந்திய அணியின் பவுலர் முகமது ஷமியை விஷமிகள் சிலர் இணையத்தில் விமர்சனம் செய்து வரும் நிலையில் ஷமியின் பழைய வீடியோ ஒன்று ட்விட்டரில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து இந்திய பவுலர் முகமது ஷமியை நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்து வருகிறார்கள். ஷமி வீசிய 18 வது ஓவரில் வெறும் 5 பந்துகளில் 17 ரன்கள் சென்றது. அந்த ஒரு ஓவரில் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரிகள் சென்றன. அந்த ஓவரில்தான் பாபர் ஆட்டத்தை பினிஷ் செய்தார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி உட்பட யாருமே சரியாக ஆடவில்லை. கோலி மட்டுமே சரியாக பேட்டிங் செய்தார். மற்ற யாரும் சரியாக பேட்டிங், பவுலிங் செய்யவில்லை.

பழி
ஆனால் ஷமி போட்ட ஓவரால்தான் நாம் தோல்வி அடைந்தோம் என்று நெட்டிசன்கள் சிலர் மோசமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது ஷமியை இஸ்லாமியர் என்று கூறி கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். இந்திய அணியின் தோல்வியை மத ரீதியாக ஒரு கும்பல் திசை திருப்ப தொடங்கி உள்ளது. அவரை துரோகி என்று முத்திரை குத்தியும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இந்திய அணியின் தோல்வியை அப்படியே மத பிரச்சனையாக மாற்ற சிலர் முயன்றும் வருகிறார்கள்.

பிரபலங்கள்
இந்த நிலையில் ஷமிக்கு ஆதரவாக பல்வேறு கிரிக்கெட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். இர்பான் பதான் தெரிவித்த கருத்தில், இதற்கு முன் இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வி அடைந்த போட்டிகளில் நானும் கூட ஆடி இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் என்னை பாகிஸ்தான் போக சொல்லவில்லை. அது பழைய இந்தியா. இப்போது நடக்கும் இந்த அசிங்கம் உடனே நிறுத்தப்பட வேண்டும், என்று கோபமாக குறிப்பிட்டுள்ளார்.

கோபம்
சச்சின், சேவாக், ஹர்பஜன் உள்ளிட்ட பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் முகமது ஷமியின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2017 சாம்பியன்ஸ் கோப்பை பைனலில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 338/4 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இறங்கிய இந்திய அணி 158 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

மோசம்
இந்த நிலையில் ஆட்டம் முடிந்து வீரர்கள் திரும்பி சென்ற போது பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் இந்திய வீரர்களை பெவிலியனில் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். யார் உங்கள் தந்தை என்றெல்லாம் மோசமான ரீதியில் கேள்வி எழுப்பி பாகிஸ்தான் ரசிகர் தரைகுறைவாக இந்திய வீரர்களை விமர்சனம் செய்தார். இதற்கு இந்திய வீரர்கள் பதில் சொல்லாமல் சென்றனர்.

ஷமி பதில்
ஆனால் ஷமி மட்டுமே கோபமாக சென்று.. அந்த ரசிகரிடம்.. "என்ன.. என்ன ?" என்று கடுமையாக கேள்வி எழுப்பினார். என்ன சொன்னீங்க என்பது போல பாகிஸ்தான் ரசிகரிடம் கேள்வி எழுப்பினார். அன்று இந்திய வீரர்கள் எல்லோரும் அமைதியாக சென்ற போது ஷமி மட்டுமே பாகிஸ்தான் ரசிகரிடம் துணிச்சலாக சென்று கேள்வி எழுப்பினார். அங்கு இருந்த தோனிதான் ஷமியை அமைதிப்படுத்தி அழைத்து சென்றார்.

கோபம்
அப்படிப்பட்ட ஷமியைத்தான்.. இந்திய வீரர்களுக்கு ஒன்று என்றால் பொது இடத்தில் கூட ஒற்றை ஆளாக குரல் கொடுக்கும் ஷமியைதான் தற்போது துரோகி என்று பலர் இணையத்தில் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதாவது பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்ட துரோகி என்று மிகவும் மோசமான அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். ஷமியின் இந்த பழைய வீடியோ ட்விட்டரில் வைரலாகிக் கொண்டு இருக்கிறது.

விமர்சனம்
இந்தியாவிற்காக பல போட்டிகளில் ஆடி, முதுகில் பல ஆப்ரேஷன்களை செய்து, கார் விபத்தில் இருந்தெல்லாம் மீண்டு வந்து இந்திய அணிக்காக ஷமி ஆடி வருகிறார். கடந்த 5 வருடங்களில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் பட்டியலில் ஷமிதான் முன்னிலையில் இருக்கிறார். இந்தியாவிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு வீரரை இப்படி நெட்டிசன்கள் சிலர் துரோகி என்று விமர்சனம் செய்வது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications