Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மூத்த வீரருக்கு மொத்தமாக செக்.. டி 20 உலகக் கோப்பைக்கு பிசிசிஐ களமிறக்கிய தமிழக வீரர்.. செம ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டி 20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழ்நாடு வீரர் ஒருவர் நெட் பவுலராக சேர்க்கப்பட்டு இருக்கிறார். பிசிசிஐ எடுத்த இந்த முடிவிற்கு பின் முக்கியமான சில காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

2021 ஐபிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இன்று டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது குவாலிபயர் ஆட்டம் நடக்க உள்ளது.

கடந்த போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி இந்த போட்டியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று முனைப்புடன் உள்ளது. அதேபோல் கொல்கத்தா அணி கடந்த போட்டியின் வெற்றியை இந்த போட்டியிலும் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் உள்ளது.

வெங்கடேஷ் ஐயர்

வெங்கடேஷ் ஐயர்

இந்த தொடரில் இரண்டாம் பாதி ஆட்டத்தில் அதிகம் கவனிக்கப்பட்ட வீரர் என்றால் அது கொல்கத்தா அணியில் ஆடும் வெங்கடேஷ் ஐயர்தான். மத்திய பிரதேசத்தில் வளர்ந்தவர் என்றாலும் வெங்கடேஷ் ஐயர் சென்னையில் பிறந்த தமிழர். கொல்கத்தா அணியில் ஓப்பனிங் இறங்கி வரும் வெங்கடேஷ் ஐயர், மிக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். நல்ல உயரம், சிறப்பான ஷாட் செலக்ஷன் என்று வெங்கடேஷ் ஐயர் ஆட்டம் அந்த அணிக்கு கூடுதல் பலமாக மாறியுள்ளது.

தமிழர்

தமிழர்

முக்கியமாக இவர் பேட்டிங் மட்டுமின்றி மிதவேக பவுலரும் கூட. கொல்கத்தா அணிக்கு இவர் பவுலிங் மூலம் சில விக்கெட்டுகளையும் எடுத்து வருகிறது. பெரிதாக ரன் கொடுக்காமல் ரன் செல்வதை இவர் டெத் ஓவர்களில் கட்டுப்படுத்துகிறார். இதனால் வரும் காலத்தில் இவர் இந்திய அணிக்கு மிக முக்கியமான பவுலிங் ஆல் ரவுண்டராக வர கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

பவுலர்

பவுலர்

நல்ல உயரமாக இருப்பதால் இவர் பவுன்சர் வீச முடியும். தேவையான நேரங்களில் பாஸ்ட் பவுலிங் செய்ய முடியும். ஸ்லோ பாலும் எளிதாக வீச முடியும். இதன் காரணமாக டெத் ஓவர்களில் பிராவோ, பொல்லார்ட் போல நம்பிக்கை அளிக்க கூடிய வீரராக வெங்கடேஷ் ஐயர் உருவெடுத்துள்ளார். இந்த நிலையில் இவரை பிசிசிஐ தற்போது துபாயில் தங்கும்படி உத்தரவிட்டுள்ளது.

நல்ல உயரம்

நல்ல உயரம்

ஐபிஎல் 2021 தொடர் முடிந்த பின் இந்திய அணியின் பயோ பபுளில் இவர் இணைய உள்ளார். இந்திய அணியின் நெட் பவுலராக இவர் இணைய உள்ளார். பிசிசிஐ பல திட்டங்களை முன் வைத்தே இவரை களமிறக்கி உள்ளது என்கிறார்கள். ஹர்திக் பாண்டியா ஒருவேளை பவுலிங் செய்யாத பட்சத்தில் இவருக்கும் ஷரத்துல் தாக்கூருக்கும் இடையில் பவுலிங் ஆல் ரவுண்டருக்கான போட்டி நிலவும் வாய்ப்பு உள்ளது.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

இரண்டு பேரில் ஒருவர் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்று ஆல் ரவுண்டராக களமிறங்க வாய்ப்பு உள்ளது. இந்த ஐபிஎல் தொடர் முழுக்கவே ஹர்திக் பாண்டியா சரியாக பவுலிங் செய்யவில்லை. அவரின் பேட்டிங்கும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதன் காரணமாக உலகக் கோப்பை டி 20 அணியில் இவரை எடுத்தது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாதுகாப்பு

பாதுகாப்பு

இதனால்தான் பாதுகாப்பிற்கு இருக்கட்டும் என்று வெங்கடேஷ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டு நெட் பவுலராக தேர்வாகி உள்ளார். ஆனால் ஷரத்துல் தாக்கூருக்குத்தான் இதில் முதலில் முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவரின் பேட்டிங் இன்னும் கொஞ்சம் மெருகேறும் பட்சத்தில் ஹர்திக் பாண்டியா, வெங்கடேஷ் ஐயருக்கு பதிலாக இவர் களமிறக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+