Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடிச்சு தூக்குதே அரசு கேபிள்..அள்ளி அள்ளி தரும் தமிழக அரசு! தாய் வீடு திரும்பும் ஆபரேட்டர்கள்! செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் ( TACTV) பொதுமக்களுக்கு தரமான சேவை வழங்கும் வகையில் எச்டி செட்டாப் பாக்ஸ், ஐபி டிவி, இன்டர்நெட் வசதி உள்ளிட்டவற்றோடு, கேபிள் ஆபரேட்டர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கி வருகிறது. இதை அடுத்து பிற தனியார் நெட்வொர்க்கில் இணைந்திருந்த ஆபரேட்டர்கள் மீண்டும் தாய் வீடான அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர். அவர்களுக்கு கடனுதவி, நலவாரியம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. இதனால் அரசு கேபிள் டிவியில் இணையும் கேபிள் டிவி ஆபரேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கோயம்புத்தூர் வட்டார பகுதி ஆபரேட்டர்களின் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவிஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாரிய தலைவர் தஞ்சை ஜீவா தலைமையில் நடைபெற்றது.

tamil nadu govt tactv theni

நிகழ்ச்சியில் பேசிய அவர், வாரியத்தில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் விரைவில் அடையாள அட்டையும் பயனாளிகளுக்கு உதவித்தொகைகளும் வழங்கப்படும். அரசு கேபிள் டிவி நிறுவனத்திலிருந்து பல்வேறு காரணங்களால் வெளியேறிய அனைவரும் மீண்டும் தாய் வீட்டிற்கு திரும்பி வருகின்றனர். அவர்களை வரவேற்கிறோம். அனைவரும் ஒன்றிணைந்து குறைந்த விலையில் நிறைந்த சேவையும் ஆப்பரேட்டர்களுக்கு அதிக லாபத்துடன் பாதுகாப்பாக தொழில் செய்ய வர வேண்டும்.

அரசு கேபிள்டிவி மற்றும் தனியார் நிறுவன ஆபரேட்டர்கள், டிஎஸ்டி ஆகியோர் அரசு கேபிள் டிவி இணைப்புகள் அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். அரசு கேபிள் டிவி டிஏ மற்றும் ஏடிஏகளின் பணியில் முன்னேற்றம் இல்லையெனில் எங்களிடம் நேரடியாக தெரிவிக்கலாம். தடையில்லா சிக்னலை ஆபரேட்டர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் இணைந்து பணியாற்றி அரசு கேபிள் டிவி இணைப்புகள் உயர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

tamil nadu govt tactv theni

பின்னர் செய்தியாளரிடம் பேசிய தஞ்சை ஜீவா அரசு," கேபிள் டிவியில் பதிவு செய்துள்ள அனைத்து ஆபரேட்டர்களுக்கும் தலா இரண்டு லட்சம் வரை புதிய எச்டி செட்டாப்பாக்ஸ் வாங்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் கடன் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக கோவை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபரேட்டர்கள் அரசுடன் இணைந்து தொழில் செய்ய கடன் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

இதனால் குறைந்த விலையில் அதிக லாபத்துடன் அனைத்து சேனல்களையும் ஆபரேட்டர்கள் பொதுமக்களுக்கு வழங்கி பயன்பெற முடியும். தமிழக முதல்வரும், துணை முதல்வரும் கேபிள்டிவி ஆப்பரேட்டர்களின் நலனை பாதுகாக்க தொடர்ந்து தக்க ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அதனை அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குனருடன் இணைந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். விரைவில் அரசு கேபிள்டிவி புதிய உச்சத்தை அடையவும், தமிழ்நாடு மட்டுமன்றி இந்தியா முழுவதும் இன்டர்நெட் வசதியுடன் ஐபிடிவியை குறைந்த விலையில் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது.

tamil nadu govt tactv theni

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல பொது மேலாளர் வேலாயுதம், அரசு கேபிள்டிவி தனி வட்டாட்சியர் தமிழ்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+