'பீஸ்ட்' முஸ்லிம்களுக்கு எதிரான சிலுவைபோர்? விஜய்க்கு சாபம் கிடைக்க துவா! ‘தடா’ அப்துல் ரஹீம் அதிரடி
சென்னை : துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது எனவும், நடிகர் ஜோசப் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறைவனின் சாபம் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை (துவா) செய்யப்படும் என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் கூறியுள்ளார்.
ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகவும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பீஸ்ட் சர்ச்சை
படம் ஹிட் என ஒரு தரப்பும், தோல்வி என மற்றொரு தரப்பினரும் கூறி வரும் நிலையில், துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹீம் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "துப்பாக்கி திரைப்படத்தை தொடர்ந்து பீஸ்ட் திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ளது என்றால் அது மிகையாகாது ..வீரராகவன் என்ற கதாநாயக கதாபாத்திரம் ஜோசப் விஜயும் , உமர் பாரூக் என்கிற வில்லன் கதாபாத்திரம் புதுமுகமும் நடித்து உள்ளனர்

தடா ஜெ அப்துல் ரஹீம் கண்டனம்
படத்தில் உமர் பாரூக் இந்தியாவில் என்ன குற்றம் செய்தார் என்கிற விபரங்கள் எல்லாம் சிறிதும் திரைப்படத்தில் இல்லை முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க இந்த கதாபாத்திரங்கள் இயக்குனர் நெல்சனுக்கு தேவைபட்டுள்ளது .. உமர் பாரூகின் தம்பி உமர் சரீப் சென்னை ஈசிஆரில் உள்ள ஷாப்பிங்மாலை ஹைஜாக் செய்து விட்டதால் அங்குள்ள மக்களை மீட்க இஸ்ரேல் உளவு அமைப்பான (மொஸாத்) இஸ்ரேலியர்களை உதவிக்கு அழைப்பது போன்ற காட்சியை பார்த்தால் முஸ்லிம்களை வில்லனாக காட்சி படுத்த யூதர்களை கதாநாயக கதாபாத்திரம் கொடுத்து உள்ளனர் ஜோசப் விஜயும் நெல்சனும் ...

சிலுவை போரா பீஸ்ட்
நகைச்சுவை திரைப்படமாக எடுக்க முயற்சி எடுத்து முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படத்தை முடித்து உள்ளார் நெல்சன். காவி ஸ்கீரின் கிழிப்பது போன்ற காட்சி நீக்கப்பட்டு பேனர் கிழிப்பு காட்சி அமைத்து உள்ளனர் காரணம் மத்திய பாஜக அரசு தங்கள் மீது நடவடிக்கை எடுக்குமே என்ற அச்சமாக இருக்கலாம் .. வில்லன் உமர் சரீபை , விஜய் அடிக்கும் காட்சியின் போது தியேட்டரில் படம் பார்க்கும் ஜோசப் விஜயின் ரசிகர்கள் விடாதே அடி கொல்லு என ஆக்ரோஷமா கூச்சல் போடுவதை பார்த்தால் பீஸ்ட் திரைப்படம் ஜோசப் விஜய் மற்றும் நெல்சன் இணைந்து நடத்திய திரைப்பட சிலுவை போர் என்றால் அது மிகையாகாது ..

சாபம் கிடைக்க துவா
பீஸ்ட் திரைப்படத்தை உடனே தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் மற்றும் நடிகர் ஜோசப் விஜய் இயக்குனர் வில்சன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வலியுறுத்துகிறோம். உயர்நீதிமன்றம் மூலம் பீஸ்ட் திரைப்படத்தை தடை விதிக்க எங்களது வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருகிறோம் மிக விரைவில் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக பீஸ்ட் திரைப்படத்தை தடை கோரி வழக்கு தொடுக்க உள்ளோம் . ரமலான் நோன்பு இருப்பதால் நடிகர் ஜோசப் விஜய் வீடு முற்றுகை போராட்டம் நடத்த முடியாதா சூழ்நிலை உள்ளது ஆகவே இந்திய தேசிய லீக் கட்சி தலைமை அலுவலகத்தில் ஒவ்வொரு நாளும் நோன்பு திறக்கும் போது நடிகர் ஜோசப் விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இறைவனின் சாபம் கிடைக்க சிறப்பு பிரார்த்தனை (துவா) செய்யப்படும் .." என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
“விஜய் முதலில் மன்னிப்பு கேட்கணும்”.. பதில் சொல்ல வக்கு இல்லையா? பொன்ராஜ் கொடுத்த ரிப்ளை! -
டிஜிபி அலுவலகத்துக்கு நேரில் போன விஜய்.. பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு! -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
Chennai Expressway: சென்னை டூ பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே! ஸ்ரீபெரும்புதூரில் நிலத்தின் மதிப்பு கிடுகிடு! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே











Click it and Unblock the Notifications