மிஸ்டர் பா. ரஞ்சித்.. பெண்ணும் பெண்ணும் லவ் பண்ணியிருந்தால் நீங்க பிறந்திருக்க மாட்டீங்க: தடா ரஹீம்
டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு, இந்திய தேசிய லீக் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது
சென்னை: டைரக்டர் பா.ரஞ்சித்துக்கு, இந்திய தேசிய லீக் கட்சி முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளது.. இதற்கு ஏராளமானோர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
Recommended Video
தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒவ்வொரு காலகட்டத்திலும், சமூகத்தை ஏதாவது ஒருவகையில் பாதித்த, உண்மை சம்பவங்களை படம் எடுப்பது வழக்கம்.
இப்படி உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும், சாதீய பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கக்கூடும்..
உண்மை சம்பவத்தை ஒட்டியே படம் எடுப்பதால், அதில் கற்பனைகளுக்கும், இட்டுகட்டுவதற்கும் வாய்ப்பில்லை..

சாதி + பிரிவு
அதேசமயம், சம்பவம் நடந்த கிராமங்களில் உள்ள சாதீய பிரிவினைகளை அப்பட்டமாக காட்ட வேண்டிய நிலைமையும் ஏற்படும்.. இப்படி எத்தனையோ வடிவங்களில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும், இதே ரூட்டை கையில் எடுத்தவர்தான் பா.ரஞ்சித்.. ஆனால், அனைத்து சாதியையும் படம்பிடித்து காட்டும்போது, தாழ்த்தப்படும் மக்களின் வாழ்க்கையை மட்டுமே யாருமே இங்கு சொல்வதில்லையே ஏன்? என்று கேட்டு, அதை வைத்தே படங்களை எடுத்து வருகிறார்.

நட்சத்திரம் நகர்கிறது
தன்னுடைய படங்கள் மூலம், சாதீய இருட்டில் கிடக்கும் கிராமங்களில், வெளிச்சம் போட்டும் காட்டி வருபவர் ரஞ்சித்... அந்தவகையில், இளைஞர்களை இவரது படங்கள் சிந்திக்க வைத்து வருகின்றன.. சிந்தனையை கிளப்பிவிட்டாலும், அத்துடன் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டுவிடுவார் ரஞ்சித்.. இப்போது 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை எடுத்து வருகிறார்.. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சமீபத்தில் வெளியானது... படத்தின் டிரெயிலர் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. தன்பால்ஈர்ப்பாளர்களுக்கு இடையேயான காதல், திருநங்கைக்கும் ஆணுக்குமான காதல் என்று பல விஷயங்களை இந்த படத்தில் ரஞ்சித் தொட்டு சென்றுள்ளதாக தெரிகிறது..

மிஸ்டர் ரஞ்சித்
பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் காதல் பண்ணக் கூடாதா? தாலி கட்டுனா மட்டும் தான் காதல் தொடரும்னா? அவ்வளவு தானா அதன் மதிப்பு? காதல்ல எங்க வயசு வந்துச்சு? இப்படி பல டயலாக்குகள் டிரைலரில் வந்து போகிறது.. இதை பார்த்ததும், விவாதங்களும், சலசலப்புகளும் இணையத்தில் வெடிக்க துவங்கி விட்டன. அந்தவகையில், இந்திய தேசிய லீக் கட்சி கேள்வியும் கேள்வி எழுப்பி உள்ளது.. அக்கட்சியின் தடா ரஹீம் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

ரஞ்சித்
அதில், "பெண்ணும் பெண்ணும் லவ் பண்ண கூடாதா?.. நட்சத்திரம் நகர்கிறது திரைப்படம் பா.ரஞ்சித்.. பெண்ணும் பெண்ணும் லவ் பண்ணி இருந்தால் நீங்க பிறந்து இருக்க மாட்டீங்க மிஸ்டர் பா.ரஞ்சித்" என்று கேட்டுள்ளார்.. இதற்கு பலரும் திரண்டு வந்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.. "நாகரீகத்தை சிதைக்கிறார் பா.ரஞ்சித், சமூக சீர்கேடுக்கு வழி ஏற்படுத்தும் கும்பல் பா.ரஞ்சித் என்று கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. மேலும் சிலர், காதல் என்றால் காமம் என்று நினைத்துவிட்டீர்களா? புரட்சி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று ரஞ்சித்துக்கு ஆதரவாக பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications